தக்காளி

கிளைபோசேட் காயம்

Herbicide Shikimic acid pathway inhibitors

மற்றவை

சுருக்கமாக

  • வளர்ச்சி குன்றி, வெளிறிய நிறத்தில் காணப்படும் இலைகள், இறுதியில் சிதைந்து போகும்.

இதிலும் கூடக் காணப்படும்


தக்காளி

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகள் இளம் சிற்றிலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை/மஞ்சள் நிறமாற்றத்தைக் காட்டும். சிற்றிலைகள் சிறியதாகவும், பழுப்பு நிற ஓரங்களுடன் சுருங்கியும், மேல்நோக்கி கப் வடிவில் காட்சியளிக்கும். பூக்கள் குறைவாக பூப்பதால் விளைச்சல் இழப்பு ஏற்படும். பழங்கள் சிதைந்து அடர் பழுப்பு நிற வடுவுடன் சிறியதாக இருக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், திசு சிதைவானது பொதுவாக தாவரத்தின் மேற்புறத்தில் தொடங்கி கீழ்நோக்கி படரும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எதுவுமில்லை

இரசாயன கட்டுப்பாடு

எதுவுமில்லை

இது எதனால் ஏற்படுகிறது

குறிப்பிட்ட செடிகளுக்கு என்றில்லாத களைக்கொல்லியான கிளைபோசேட்டின் முறையற்ற பயன்பாட்டினால் இந்தச் சேதம் ஏற்படுகிறது. இது விவசாயி, பக்கத்தில் உள்ளோரின் தெளிப்பு பயன்பாடு அல்லது பல பயன்பாடு பூச்சிக்கொல்லி தெளிப்பானில் உள்ள கிளைபோசேட் மிச்சம்/எச்சம் ஆகியவற்றினால் ஏற்பட்டு, இலக்கு அல்லாத தாவர இனங்களை பாதிக்கலாம். களைக்கொல்லியானது இலைத்திரள் வழியாகப் பயன்படுத்தப்பட்டு, செடி முழுவதும் அது பரவுகிறது. புதிய வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்களின் உற்பத்திக்குத் தேவையான தாவர இரசாயனத்துடன் குறுக்கிடுவதன் மூலம் இது தாவரங்களைக் கொல்லும். தெளிப்பு, தெளிப்பான் மாசுபாடு, மண்ணில் சேருவது, ஆவியாகும் தன்மை, தற்செயலான பயன்பாடுகள் போன்ற இலக்கு இல்லாத மாசுபாட்டின் மூலமாகவும் இதன் பரவல் நிகழலாம். சேதத்தின் அளவானது தாவரங்களின் மீது எந்தளவுக்கு பட்டுள்ளது, தாவரங்களின் வளர்ச்சி கட்டங்கள், பாதிக்கப்பட்ட இரகம் மற்றும் வளர்ச்சியின் நிலை போன்ற காரணிகளைப் பொறுத்து இருக்கும். இந்தச் சேதம் நீடித்து, மதிப்புமிக்க தாவரங்களின் நிரந்தர இழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்த தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், நன்கு உரமிடவும்.
  • அனைத்து இரசாயனங்கள் பற்றிய லேபிள் வழிமுறைகளைப் படித்து, பரிந்துரைக்கப்பட்ட உரங்களை பொருத்தமான அளவில் பயன்படுத்தவும்.
  • செடிகளைச் சுற்றி களைக்கொல்லியைப் பயன்படுத்தும்போது, தெளிப்பானில் சரியான அளவீடை அமைத்து, கவனமாக கையாளவும்.
  • குளிர்ந்த, ஈரமான காலநிலையில் இவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் களைக்கொல்லி மெதுவாக வளர்சிதை மாற்றமடையும்.
  • காற்றின் வேகம் குறைவாக இருக்கும் போதும் அதன் திசையின் நகர்வு குறைவாக இருக்கும் போதும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.
  • பூச்சிக்கொல்லிகள் அல்லது பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்த களைக்கொல்லி தெளிக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • பொதுவாக, அறிகுறிகள் தென்பட்டுவிட்டால், ஏற்பட்ட காயத்தை சரிப்படுத்துவது மிகவும் கடினம்.
  • இருப்பினும், அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால், தாவரம் இறக்கவில்லை என்றால், புதிய தாவர வளர்ச்சி சாதாரணமாக இருக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க