பட்டாணி

உறைபனி சேதம்

Cell injury

மற்றவை

சுருக்கமாக

  • இலைகளில் நிறமாற்றம் மற்றும் சிதைவுகள்.
  • இலை நுனிகளில் திசு சேதம்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

பட்டாணி

அறிகுறிகள்

இலை நரம்புகளுக்கு இடையில் பொசுங்கிய, வெளிர் பழுப்பு நிற திட்டுகள் தோன்றும். கூடுதலாக மலர்ந்த பூக்கள் மற்றும் இளம் பழங்கள் சேதமடையும். இலைகளில் காயங்களும் அல்லது அதன் மேற்பரப்பில் குழிகளும் காணப்படும், அத்துடன் நிறமாற்றம், நீர் தோய்த்த திசு போன்ற அறிகுறிகளும் தென்படும். காயமடைந்த திசுக்கள் தோல் நிறமாகத் தோன்றி, துர்நாற்றத்தைத் தரக்கூடும். இலைகள் முன்கூட்டியே உதிர்ந்து விடக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது இயற்கையாக நிகழும் ஒரு விஷயம் என்பதால் வேதியியல் (இரசாயன) கட்டுப்பாடு சாத்தியமில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இது இயற்கையாக நிகழும் ஒரு விஷயம் என்பதால் வேதியியல் (இரசாயன) கட்டுப்பாடு சாத்தியமில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

தாவர திசுக்களுக்குள் பனி உருவாகி தாவர அணுக்களை சேதப்படுத்தும்போது உறைபனி சேதம் ஏற்படுகிறது, எனவே, குளிர்ச்சியான வெப்பநிலையை விட பனி உருவாவதே தாவரத்தை உண்மையில் காயப்படுத்துகிறது. குளிர்ந்த காற்று வேர்களிலிருந்து ஈரப்பதத்தை நீக்குவதைக் காட்டிலும் பசுமையான இலைத்திரள்களிலிருந்தே ஈரப்பதத்தை அதிகம் நீக்குகிறது. இது குறிப்பாக இலைகளின் நுனிகள் மற்றும் ஓரங்களில் இலைகளை பழுப்பு நிறமாக்குகிறது. முழுமையாக வளர்ச்சி அடைந்த தாவரங்களை விட இளம் தாவரங்கள் உறைபனி பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றன.


தடுப்பு முறைகள்

  • உறைபனி பாக்கெட்டுகளைத் தவிர்க்க நடவு நிலைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்.
  • பொதுவாக, உள்ளூர் நிலப்பரப்பில் கீழ்ப்புற தளங்கள் குளிர்ச்சியான வெப்பநிலையைக் கொண்டிருக்கின்றன, எனவே அதிக சேதங்களை அங்கு காணலாம்.
  • குளிர்ந்த காற்று சேரும் இடங்களை அகற்றவும், குளிர்ந்த காற்றின் வடிகாலை மேம்படுத்தவும் நிலத்தை சமன் செய்யுங்கள்.
  • இறந்த இலைகளையும், கிளைகளையும் தாவரங்களிலேயே விட்டுவிடவும், ஏனெனில் அடுத்த உறைபனியின்போது இது தாவரத்தை பாதுகாக்க உதவும்.
  • புதிய வளர்ச்சி (இலைகள் மற்றும் கிளைகள்) வெளிப்படுவதைக் காணும்போது இறந்த பொருட்களை கத்தரிக்கவும்.
  • உறைபனி முன்னறிவிப்பு இருக்கும்போது தாவரங்களை மென்முடிக் கற்றை அல்லது பிற பொருத்தமான பொருட்கள் கொண்டு பாதுகாப்புக்காக மூடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க