அரிசி

நெற்பயிரில் தத்தும்விட்டில் பூச்சி

Pelopidas mathias

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளின் ஓரங்கள் மற்றும் விளிம்புகளில் முட்டைப்புழுக்களின் உண்ணும் சேதங்கள் காணப்படும்.
  • இலைகள் பின்புறமாக சுருண்டிருக்கும் அல்லது முட்டைப்புழுக்கள் தங்குவதற்கு தகுந்தாற்போல் வலைப்பின்னல் மூலம் பாதுகாப்பாக மடிந்து காணப்படும்.
  • ஒரு சில பெரிய முட்டைப்புழுக்கள் இலை உதிர்தலை ஏற்படுத்தும், சில வேளைகளில் மைய நரம்பு மட்டுமே மீதமிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இடம் மாற்றி வைக்கப்பட்ட இளம் நாற்றுக்கள் முதலில் தாக்கப்படும். பெரிய முட்டைப்புழுக்கள் இலை உதிர்தலை பெரும்பாலும் ஏற்படுத்தும். இலைகளின் ஓரங்கள் மற்றும் நுனிகளை உண்டு, இலை திசுக்களின் பெரும் பகுதியை அகற்றி, படிப்படியாக மைய நரம்புகள் வரை மெதுவாக செல்லத் தொடங்கும். முட்டைப்புழுக்கள் இலை நுனிகளை இலை பரப்புகளுடன் உட்புறம் சுருட்டிக்கொள்ளும் அல்லது ஒரே இலையின் இரு விளிம்புகளையும் அல்லது இரண்டு அருகில் உள்ள இலைகளையும் பட்டு நூல்களின் மூலம் மடித்து கொள்ளும். இந்த பாதுகாப்பான பகுதி பகல் நேரங்களில் அவை ஓய்வெடுக்கவும், இரைப்பிடித்துண்ணிகளை தவிர்க்கவும் அனுமதிக்கும். இந்த பூச்சிகள் அதிக விருப்பம் கொண்டவை மற்றும் ஒரு சில பெரிய முட்டைப்புழுக்கள் இலை திசுக்கள் மற்றும் நரம்புகளை நீக்கி இலை உதிர்தலை ஏற்படுத்தும், சிலவேளைகளில் மைய நரம்பு மட்டுமே மீதமிருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணிகள் மற்றும் பிற இரைப்பிடித்துண்ணிகள் நிலத்தில் இப்பூச்சிகளின் எண்ணிக்கையினைக் குறைக்க வல்லவை. சிறிய ஒட்டுண்ணி குளவிகள் நெற்பயிர் தத்தும் விட்டில் பூச்சிகளின் முட்டைகளை அழிக்கும், அதே நேரத்தில் பெரிய குளவிகள் மற்றும் டச்சினிட் ஈக்கள் முட்டைப்புழுக்கள் மீது ஒட்டுண்ணிகளாக பற்றி படரும். ரெடுவிட் பூச்சிகள், இயர்விக்ஸ் மற்றும் ஓர்ப்-வெப் சிலந்திகள்(அரநெய்டே) போன்றவை இந்நோய் பூச்சிகளின் இரைப்பிடித்துண்ணிகளுள் அடங்கும், இவை முதிர்ந்த பூச்சிகளை பறக்கும் போது உண்ணும். சுள்ளிகளைப் (குச்சிகளைப்) பயன்படுத்தி நெற்பயிர்களை அடித்தல் மற்றும் இளம் உயிரிகளை கீழே விழச்செய்யவும் (பின்னர் இவை மூழ்கிவிடும்) உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இவை நெற்பயிரில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் பூச்சியாக கருதப்படுவதால், பி.மத்தியாஸ் பூச்சிகளுக்கு எதிராக வேதியியல் சிகிச்சைகள் தேவையில்லை. இயற்கை எதிரிகள் மற்றும் விவசாய வழிமுறைகளினால் பி.மத்தியாஸ் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வரும்போது, நிலத்தின் நீரினை முழுவதுமாக வடியச் செய்துவிட்டு மற்றும் குளோர்பைரிபோஸ் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நெற்பயிரில் காணப்படும் தத்தும்விட்டில் பூச்சி நெற்பயிரின் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் காணப்படும் ஆனால், மழைக்காலம் மூலம் விவசாயம் செய்யப்படும் அரிசி வகைகளில் இவை அதிகமாகக் காணப்படும். இவை வெளிர் பழுப்புடன் கூடிய ஆரஞ்சு நிற புள்ளிகளையும் மற்றும் வெள்ளை நிறத்தில் வித்தியாசமான புள்ளிகளையும் இறக்கைகளில் கொண்டிருக்கும். முதிர்ந்த பூச்சிகள் பகலில் உண்ணக்கூடியவை, மேலும் அவை தாவரத்திற்கு தாவரம் தத்தி தத்தி செல்வதால் வித்தியாசமான பறக்கும் தன்மை கொண்டவை, எனவே இப்பூச்சி இப்பெயர் பெற்றது. கோள வடிவில் வெள்ளை அல்லது வெளிறிய மஞ்சள் நிற முட்டைகளை பெண் பூச்சிகள் இடுகின்றன. முட்டைப்புழுக்கள் இரவில் நடமாடக் கூடியவை. தலையின் இருபுறங்களிலும் சிவப்புடன் கூடிய பச்சை நிற செங்குத்து பட்டைகளும், 50 மிமீ அளவுடனும் காணப்படும். கூட்டுப்புழுக்கள் வெளிர் பழுப்பு அல்லது வெளிர் பச்சை நிறத்துடன், கூரான முனைகளைக் கொண்டிருக்கும். அதிகப்படியான வறட்சி, பெரிய மழை அல்லது வெள்ளம் போன்ற வித்தியாசமான சூழ்நிலைகள் அவைகளின் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. பூச்சிக்கொல்லிகளை அதிகமாக பயன்படுத்தினால் நமக்கு உதவும் இயற்கையான பூச்சிகளை அது கொன்றுவிடும் மற்றும் இப்பூச்சிகள் தோன்றுவதற்கான காரணமாகவும் அது இருக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • பி.மத்தியாஸ் பூச்சிகள் தோன்றும் காலத்தில் பயிர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதை உறுதி செய்ய அரிசிப் பயிர்களை பருவ காலத்தின் ஆரம்பத்திலேயே நடவு செய்யவும்.
  • விதைத்தலை அடர்த்தியாக மேற்கொள்வதன் மூலம் பூச்சிகள் கவிகைகளுக்குள் நுழைவதைத் தடுக்கலாம்.
  • பூச்சிகளின் தாக்கத்திற்கான அறிகுறிகள் இருப்பதைத் தெரிந்துகொள்ள வயல்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும்.
  • முட்டைப்புழுக்களை கையால் பிடித்து அழித்துவிடவும் மற்றும் அவைகளை மூழ்கடித்துவிடவும், உதாரணத்திற்கு.
  • பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளின் அதிகப் பயன்பாடு நமக்கு உதவியாக இருக்கும் பூச்சிகளையும் அல்லது இரைப்பிடித்துண்ணி இனங்களையும் அழித்துவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
  • பூச்சிகள் பெறும் ஊட்டத்தினால் பயிர்கள் சேதமடையாமல் இருக்கத் தேவையான அளவிற்கு உரங்களை சரியான முறையில் அளிக்கவும், இதன் மூலம் இயற்கையாகவே பயிர்களுக்கு எதிர்ப்புசக்தி கிடைக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க