மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு செதில் நோய்

Aonidomytilus albus

பூச்சி

சுருக்கமாக

  • தண்டுகள், தளிர்கள் மற்றும் சில நேரங்களில் இலை பாகங்கள் பாதிக்கப்படும்.
  • வெள்ளை இளம் பூச்சிகள் மற்றும் சுரப்புகளால் மூடப்பட்டிருக்கும்.
  • தண்டுகள் காய்ந்து காற்றில் உடையும்.
  • புதர் போன்ற தோற்றத்துடன் காணப்படும்.
  • வெள்ளி-வெள்ளை நிற பூச்சுடன் முட்டை வடிவ சிப்பி அல்லது கடற்காய் போன்ற செதில் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

சாற்றை உறிஞ்சுவதற்கு இளம் பூச்சிகள் தண்டைச் சுற்றி கூடி, இறுதியில் அதனை வெளிப்படையான வெள்ளை சுரப்புகளால் "பூசி மூடிவிடும்". பக்க தளிர்கள், இலைக்காம்புகள் மற்றும் இலையின் கீழ் பக்கம் எப்போதாவது தொற்று ஏற்படலாம். இலைகள் வெளிறிய நிறமாகி, வாடி, உதிர்ந்துவிடும், அதேசமயம் கடுமையாக தாக்கப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி குன்றும். நடவு செய்யும் போது பாதிக்கப்பட்ட துண்டைச் சுற்றி திட்டுகளாக வயல்வெளியில் தொற்று தென்படலாம். இளம் பூச்சிகள் அதிகம் உண்ணுவதால் தண்டுகள் உலர்ந்து பலவீனமடைகின்றன, இத்தண்டுகள் பெரும்பாலும் காற்றில் உடைந்து போகும். தண்டுகள் உடைவதை ஈடுசெய்ய இந்தத் தாவரம் புதிய தளிர்களை உற்பத்தி செய்கிறது, இது ஏராளமான கிளைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தாவரங்களின் புதர் போன்ற தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. அந்தச் செடிகளில் வேர் வளர்ச்சி மோசமாகும், மற்றும் கிழங்குகளும் சாப்பிட முடியாததாகிவிடும். பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சியால் முன்பு பலவீனமான தாவரங்களில் அறிகுறிகள் மோசமாக இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

துண்டுகளை நடவு செய்வதற்கு பயன்படுத்தப்படுவதற்கு முன்பு மரவள்ளிக்கிழங்கு வேர்களின் திரவ சாற்றில் 60 நிமிடங்கள் மூழ்கச் செய்வது அனிடோமைட்டிலஸ் அல்பஸைக் கொல்லும். சூடான நீரிலும் மூழ்கச் செய்யலாம் ஆனால் அது குறைவான செயல்திறன் கொண்டது. தண்டுகளைச் செங்குத்தாக சேமித்து வைப்பது தொற்றுநோயைக் குறைப்பதையும் அவதானிக்க முடிந்தது. சிலோகோரஸ் நிக்ரிடஸ் போன்ற சில கொக்கிநெல்லிட் வேட்டையாடும் பூச்சிகளும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். கரிம உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது கரிமப் பொருள்களைச் சேர்ப்பதன் மூலமோ மண் வளத்தை மேம்படுத்துவதும் உதவியாக இருக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். தடுப்பு நடவடிக்கையாக, தண்டுகளை டைமெத்தோயேட், டயசின், மெத்தில் டிமெட்டான் அல்லது மாலத்தியான் (0.01 முதல் 0.05% வரை சூத்திரங்களைப் பொறுத்து) ஆகியவற்றை தெளிக்கலாம் அல்லது 5 நிமிடங்களுக்கு ஊறவைக்கலாம். நடவு செய்வதற்கு முன் தண்டுகளை மாலத்தியான், டயஜினின் அல்லது டைமெத்தோயேட் கொண்ட திரவங்களில் நனைப்பது மரவள்ளிக்கிழங்கின் செதில் தொற்றுநோயைத் தவிர்க்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் அனிடோமைட்டிலஸ் அல்பஸ் என்ற செதில் பூச்சியால் ஏற்படுகின்றன. இது தாவரங்களை உண்டு, அதில் உயிர்வாழும் மற்றும் காற்று அல்லது விலங்கு/மனித தொடர்பு மூலம் பரவக்கூடும். மீண்டும் நடவு செய்வதற்கான துண்டுகள் போன்ற பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களை எடுத்துச் செல்வதன் மூலம் நீண்ட தூரத்திற்கு நோய் பரப்பும். பெண் பூச்சிகள் செடிகளை உண்டு, மொட்டு செதில்களுக்கு அடியில் முட்டையிடுகின்றன. இளம் பூச்சிகள் சில நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரித்து மற்ற தாவர பாகங்களுக்கு ஊர்ந்து செல்கின்றன, அங்கு அவை கால்களை இழந்து மந்த நிலைக்குச் செல்லும். இவை தண்டு சாற்றை அதிக அளவில் உண்டு, தண்டை நீரிழக்கச் செய்கிறார்கள். முதிர்ந்த பூச்சிகள் வெள்ளை மெழுகு சுரப்பியை உற்பத்தி செய்து, வெள்ளி-வெள்ளை பூச்சுடன் முட்டை வடிவில் கடற்காய் அல்லது சிப்பி போன்ற செதிலாக உருவாகின்றன. ஆண் பூச்சிகள் சிறகுகள் உடையது, அது சிறிது தூரம் வரையில் பறந்து செல்லும், பெண் பூச்சிகள் சிறகுகள் இல்லாதது, அது உட்கார்ந்த நிலையில் இருக்கும். பலத்த மழை மற்றும் அதிக காற்று தாவரங்களில் இருந்து நோய்க்கிருமியை அகற்றலாம். இதற்கு மாறாக, நீடித்த வறண்ட நிலைமைகள் தாவரங்களை பூச்சி தாக்குதலுக்கு ஆளாக்கி, அதன் பரவலுக்கு சாதகமாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • சாத்தியமானால், சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து, நடவு செய்வதற்கு செதில்கள் இல்லாத துண்டுகளை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.
  • உங்கள் பகுதியில் கிடைத்தால் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும் (சில இனங்கள் உள்ளன).
  • ஆரோக்கியமான காற்றோட்டம் மற்றும் பரவலான பகல் வெளிச்சம் பெறுவதை எளிதாக்க ஆரோக்கியமான தண்டுகளை நிழலின் கீழ் செங்குத்து நிலையில் வைக்க வேண்டும்.
  • தாவரங்களுக்கு இடையிலான போதுமான இடைவெளி மரவள்ளிக்கிழங்கு செதில் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • வயல்களைக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட தண்டுகளை அழித்துவிடவும்.
  • தொற்றுநோய் பரவுவதைத் தவிர்ப்பதற்காக பயிர் சுழற்சியைத் திட்டமிடுங்கள்.
  • மறுநடவு செய்வதற்கு முன் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பே வயலை சுத்தம் செய்யவும்.
  • நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என ஏற்றுமதி செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை ஆய்வு செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள், அதற்குப்பதிலாக அதனை உடனடியாக எரித்து அல்லது ஆழமாக புதைத்து அழித்து விடவும்.
  • பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை செதில்களின் இயற்கையான எதிரிகளைக் கொல்லும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க