மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு பச்சை சிலந்திப் பேன்

Mononychellus tanajoa

சிலந்திப்பேன்

சுருக்கமாக

  • சிறிய மஞ்சள் நிற இலைப் புள்ளிகள் தென்படும்.
  • முழு இலையும் மஞ்சள் நிறமாகிவிடுவது.
  • முனைய தளிர்கள் "மெழுகுவர்த்தி குச்சி" போன்ற அறிகுறியைக் காட்டும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

இந்தச் சிலந்திப்பேன்கள் பொதுவாக இளம் இலைகளின் அடிப்பகுதி, பச்சை தண்டுகள் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் துணை மொட்டுகள் ஆகியவற்றிலிருந்து உண்ணுகின்றன. அவை தனது துளையிடும் மற்றும் உறிஞ்சக்கூடிய வாய்ப் பகுதிகளை தனித்தனி உயிரணுக்களில் செருகி, அவற்றிலுள்ளவற்றை உறிஞ்சுகின்றன, அவை உறிஞ்சுபவற்றுள் பசுமை நிற குளோரோஃபில் (பச்சையம்) என்பதும் அடங்கும். இலைகளில், உண்ணும் செயல்பாடானது வெறும் கண்களில் பார்க்கையில் இலை மேற்பரப்பில் சிறிய மஞ்சள் நிற புள்ளிகளாகத் தோன்றும். அதிகப்படியான நோய்த்தொற்று மோசமான வளர்ச்சியுடன் பண்ணிற புள்ளியமைவு கொண்ட இலைகளுக்கு வழிவகுக்கிறது, இது பின்னர் காய்ந்து உதிர்ந்துவிடும். முனைய தளிர்களின் தாக்குதலானது சிதைந்த அம்சம், தளிர் நுனிகள் உதிர்வது போன்றவற்றைக் குறிக்கும் 'மெழுகுவர்த்தி குச்சி' உடைய அறிகுறியை ஏற்படுத்துகிறது. 2-9 மாத வயதுடைய மரவள்ளிக்கிழங்கு தாவரங்கள் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. கடுமையான சிலந்திப்பேன் தாக்குதல் கிழங்கு விளைச்சலில் 20-80 % இழப்பை ஏற்படுத்தும். மேலும், மரவள்ளிக்கிழங்கு தண்டுகளின் தரமும் பாதிக்கப்படுகிறது, இதன் விளைவாக பயிரின் நீடித்த நிலைக்கு நடவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல வேட்டையாடும் இனங்கள் சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையை திறம்பட குறைக்கின்றன. அம்ப்லீசியஸ் லிமோனிகஸ் மற்றும் ஏ. ஐடியஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவது பச்சை சிலந்திப்பேனின் தாக்குதலை 50% குறைத்தது. கொள்ளையடிக்கும் சிலந்திப்பேன்களான டைஃப்ளோட்ரோமலஸ் அரிபோ மற்றும் டி.மணிஹோடி ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு, மரவள்ளிக்கிழங்கு பச்சை சிலந்திப்பேனின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துகின்றன. நியோசைஜைட்ஸ் இனத்தின் ஒட்டுண்ணி பூஞ்சைகளும் பல நாடுகளில் நல்ல முடிவுகளைக் காட்டின, இது மரவள்ளிகிழங்கு பச்சை சிலந்திப் பேன்களில் இறப்பையும் ஏற்படுத்தியது. வேப்ப எண்ணெய் கலவைகள் கொண்ட தெளிப்பான்களும் திருப்திகரமான முடிவுகளை கொடுக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மோனோனிசெல்லஸ் தனஜோவாவின் வேதியியல் கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் இது எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், இரண்டாம் நிலை நோய் வெடிப்புகளை ஏற்படுத்தும். பூச்சி கட்டுப்பாட்டிற்கு அகாரிசைட் அபாமெக்டின் மட்டுமே பயனுள்ளதாக இருந்ததாக அறியப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

பச்சை சிலந்திப்பேன்களான மோனோனிசெல்லஸ் தனஜோவா மற்றும் மோனோனிசெல்லஸ் புரோகிரீவஸின் உண்ணும் செயல்பாட்டால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை இவற்றின் துளையிடும், உறிஞ்சும் வாய் பாகங்களை இளம் இலைகளின் அடிப்பகுதியில் உள்ள தனித்தனி உயிரணுக்களில் செருகி, உயிரணுக்களில் உள்ளவற்றை உறிஞ்சுவதன் மூலம் உண்ணுகின்றன. இவை மரவள்ளிக்கிழங்கின் சிறிய பூச்சிகளாகக் கருதப்படுகின்றன, ஆனால் சாதகமான சூழ்நிலையில், எடுத்துக்காட்டாக வறட்சியான காலத்தில், இவை குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். சிலந்திப்பேன் ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு தீவிரமாக பரவும், ஆனால் இவை காற்று மற்றும் நீர் சாரல் மூலமும் பரவலாம். துண்டுகளில் 60 நாட்கள் வரை இவற்றால் உயிர்வாழ முடியும் என்பதால், சிலந்திப்பேன்களின் முக்கிய காரணி பெரும்பாலும் விவசாயிகளே, அவர்கள் பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களை வயல்களுக்கு அல்லது பண்ணைகளுக்கு இடையில் கொண்டு செல்கிறார்கள். இளம் சிலந்திப்பேன்கள் பச்சை நிறத்தில் உள்ளன, பின்னர் இவை பெரியப்பூச்சிகளாக மஞ்சள் நிறமாக மாறும். ஒற்றை உடல் அலகு தோற்றத்தை அளிக்கும் தெளிவற்ற உடல் பிரிவால் இவை அடையாளம் காணப்படுகின்றன. முதிர்ச்சி அடைந்த பெண் சிலந்திப்பேன்கள் ஆண் பேன்களைவிட பெரிதாக இருக்கலாம், 0.8 மிமீ அளவு வரை பெரிதாகலாம்.


தடுப்பு முறைகள்

  • சிலந்திப்பேன்களுக்கு எதிராக நல்ல சகிப்புத்தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்ய சான்றதழ் பெற்ற துண்டுகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • மழைக்காலத்தின் தொடக்கத்திலேயே நடவு செய்யுங்கள், இது வறட்சியான காலம் தொடங்கும் போது தாவரத்திற்கு போதுமான எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யவும்.
  • பருப்பை ஊடுபயிர் செய்யவும், சாத்தியமானால் இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் நடவு செய்யவும், சாய்த்து நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • அறிகுறிகள் அல்லது சிலந்திப்பேன் ஏதேனும் தென்படுகிறதா என வயலைத் தவறாமல் கண்காணிக்கவும்.
  • சந்தைக்கு அல்லது மற்ற வயல்களுக்கு பாதிக்கப்பட்ட பொருளை கொண்டு செல்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இதுவே பரவலுக்கு முக்கிய காரணமாகும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க