திராட்சை

திராட்சை அடிச்சாம்பல் நோய்

Plasmopara viticola

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழுப்பு நிற ஒளி வட்டத்தால் பெரும்பாலும் சூழப்பட்ட மஞ்சள்-பச்சை நிற எண்ணெய் போன்ற புள்ளிகள் மேற்பரப்பில் தோன்றும்.
  • இவை பழுப்பு நிற வெவ்வேறு நிழல்தரங்களில் ஒழுங்கற்ற சிதைந்த திட்டுக்களாக உருவாகின்றன.
  • இந்த புள்ளிகளுக்கு கீழ் அடர்த்தியான, வெள்ளை அல்லது சாம்பல் நிற பருத்தி பூச்சுகள் உருவாகும்.
  • தளிர்கள், கொடி சுருள்கள் மற்றும் மஞ்சரிகளிலும் இந்த நோய்க்கான அறிகுறிகளைக் காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இளம் இலைகளில்,பெரும்பாலும் பழுப்பு நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்ட மஞ்சள்-பச்சை நிற எண்ணெய் போன்ற புள்ளிகள் மேற்பரப்பில் தோன்றும். நோய் தொற்று அதிகரிக்கும் போது, இந்த புள்ளிகள் பெரிதாகி, பாதிக்கப்பட்ட பகுதிகளின் நடுப்பகுதி சிதைந்து, பழுப்பு நிறத்தின் வெவ்வேறு நிழல்தரங்களில் ஒழுங்கற்ற சிதைந்த திட்டுக்களாக உருவாகின்றன. தொடர்ச்சியான வெதுவெதுப்பான ஈரப்பதமான இரவுகளுக்குப் பிறகு, இந்த புள்ளிகளுக்கு கீழ் அடர்த்தியான, வெள்ளை அல்லது சாம்பல் நிற பருத்தி பூச்சுகள் உருவாகும். பருவத்தின் பிந்தைய காலத்தில் இந்த நோய் தொற்று முதிர்ந்த இலைகளில் ஏற்பட்டால், இது நரம்புகளுக்குள் வெளிறிய தோற்றத்துடன் காணப்படும். இது படிப்படியாக சிவப்பு பழுப்பு மொசைக் வடிவத்தை உருவாக்குகிறது. எண்ணெய் போன்ற பழுப்பு நிற பகுதிகள் மற்றும் பூஞ்சை வளர்ச்சி ஆகியவவை தளிர்கள், கொடி சுருள்கள், மற்றும் மஞ்சரிகளிலும் காணப்படும். இளம் தளிர்கள் மற்றும் மலர்கள், உதிர்தல் மற்றும் வளர்ச்சி குன்றுதல் அல்லது இறந்து போதல், குன்றிய வளர்ச்சி மற்றும் குறைந்த விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

போர்டியாக்ஸ் கலவை போன்ற செம்பு அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள் உள்ளிட்ட தாவரங்களின் மாசுப்பட்டை தவிர்க்க, இயற்கை பூஞ்சைகொல்லிகளை தொற்று ஏற்படுவதற்கு முன் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தற்காப்பு பூஞ்சை கொல்லிகள் தாவரங்களின் மாசுபாட்டைத் தடுக்க உதவும். ஆனால் அவை இலைகளுக்கு அடியில் சரியாக தெளிக்கப்பட வேண்டும். போர்டாக்ஸ் கலவை போன்ற செம்பு அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் டிதியோகார்பாமெட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நோய்க்கான முதல் அறிகுறிகளை கண்டறிந்த பிறகு, நோய் தொற்றின் பிந்தைய பூஞ்சைகொல்லிகளை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தப்படும் நோய் தொற்றின் பிந்தைய பூஞ்சைகொல்லிகளில் ஃபோசீட்டில்-அலுமினியம் மற்றும் பீனைலமைடுகள் உள்ளிட்டவை அடங்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் பிளாஸ்மோபரா விடிகோலா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது அடிக்கடி வசந்தம் மற்றும் கோடை மழைப்பொழிவு மற்றும் 10° செல்சியசிற்கு மேலான வெப்பநிலை கொண்ட மது உற்பத்தி செய்யும் பகுதிகளில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவையாக அறியப்படுகிறது. மண்ணில் பாதிக்கப்பட்ட தாவரக் கழிவுகளில் அல்லது நோயுற்ற தளிர்களில் இந்த பூஞ்சை குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் வாழ்கிறது. வசந்த காலத்தின் போது, காற்று மற்றும் மழைச் சாரல்கள் மூலம் வித்துக்கள் பரவுகிறது. வித்துக்கள் முளைத்து, கட்டமைப்புகளை உற்பத்தி செய்து இலைகளில் உள்ள துளைகள் வழியாக இலைகளில் நுழைகின்றன. அங்கு திசுக்கள் வழியாக பரவத் தொடங்கி,  இறுதியில் உட்புற திசுக்கள் புறவளர்ச்சி அடைந்து, வெளியே சாம்பல் பூச்சு தோற்றத்தை உருவாக்குகிறது. பூஞ்சை 13 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வளரக் கூடியது. தொடர்ச்சியான சூடான, ஈரப்பதமான இரவுகளைத் தொடர்ந்து, உகந்த வளர்ச்சி 18 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நடைபெறுகிறது.


தடுப்பு முறைகள்

  • நீர்த்தேக்கம் இல்லாத மண்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  • கிடைக்கப்பெற்றால் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவும்.
  • நன்கு சூரிய ஒளிப்படும் வயல்களில் நடவு செய்யவும் மற்றும் சரியான நோக்குநிலையை தேர்வு செய்யவும்.
  • திராட்சைக் கொடிகளுக்கு இடையே நன்கு இடைவெளி மற்றும் காற்றோட்டங்களை வழங்க வேண்டும்.
  • திராட்சைக் கொடிகளை நிலத்திலிருந்து நன்கு உயர்த்தி, ஒழுங்காக கட்டி வைக்கவும்.
  • வயல்களில் மற்றும் அதனை சுற்றி களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • வயலில் இருந்து தாவரக் கழிவுகளை அகற்றவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட மண் மற்றும் தாவரப் பொருள் விநியோகத்தை தவிர்க்கவும்.
  • தாவரங்களின் வீரியத்திற்கு சமச்சீரான உரமிடும் முறையை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க