அரிசி

தங்க ஆப்பிள் நத்தை

Pomacea canaliculata

மற்றவை

சுருக்கமாக

  • நீர்ப் பரப்பிற்கு கீழே உள்ள தண்டுகளை நத்தைகள் சேதப்படுத்துவதால், தாவரங்களின் தண்டுகள் குன்றி காணப்படும்.
  • நீருக்கு அடியில் உள்ள கிளைத் தண்டுகள் மற்றும் இலைகளை இவை உண்ணும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இந்த பூச்சி ஈரநில அரிசி பயிர்களை மட்டும் தாக்கக் கூடியது. சேதங்களின் முதல் அறிகுறியானது, குன்றிய தாவரத் தண்டுகள் ஆகும், இந்த இடங்களில் நீர்ப் பரப்பிற்கு கீழே நத்தைகள் தாவரத் தண்டுகளைச் சேதப்படுத்துகிறது. நாற்று நடும் ஆரம்ப நிலைகளில் இந்த பயிர் மிகவும் நோய் பாதிப்பு ஏற்படக்கூடியதாய் உள்ளது, எனவே இவை ஈரமான அரிசி விதை மற்றும் இடமாற்றப்பட்ட அரிசியில் 30 நாட்கள் வரை இந்த நோய் நேரடியாகப் பாதிக்கிறது. அதன் பிறகு, தண்டுகள் மிகவும் தடிமனாகும் மற்றும் நத்தைகளால் கடினமான திசுக்களை சாப்பிட இயலாது. நத்தைகள் பொதுவாக கிளைத் தண்டுகளை முதலில் உண்ணும் மற்றும் பின்னர் நீருக்கு அடியில் இருக்கும் இலைகள் மற்றும் தண்டுகளை உண்ணும். மற்ற தாவரங்கள், டாரோ (கொலோக்கசியா எஸ்குலேண்டமெ) போன்றவையும் தாக்கப்படலாம். இந்த பூச்சியின் ஆயுட்காலம் 119 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை மாறுபடும், அதிகமான வெப்பநிலை குறுகிய ஆயுட் காலத்திற்கு வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நிலத்தைத் தயார் செய்யும் போது, நடவு செய்யும் போது அல்லது பயிர்களை நிறுவும் போது, நத்தைகள் மற்றும் முட்டைகளை மொத்தமாகப் பிடிக்கும் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நத்தைகளை வளர்த்து, விலங்குகளின் உணவாகவும் விற்கலாம். இயற்கை இரைப்பிடித்துண்ணிகளும் ஆதரவாக இருக்கக் கூடும் எ.கா. சிவப்பு எறும்புகள் நத்தை முட்டைகளை உண்ணும் மற்றும் பறவைகள் அல்லது வாத்துகள் இளம் நத்தைகளை உண்ணும். வீட்டில் வளர்க்கும் வாத்துகளை நிலங்களின் இறுதி தயாரிப்பின் போது, அல்லது தாவரங்கள் பெரிதாக இருக்கும் போது பயிர்களை நட்ட பிறகு வயல்களில் விடலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சாதாரண உரப் பயன்பாட்டு விகிதம் மற்றும் அட்டவணையைத் தொடர்ந்து, ஆப்பிள் நத்தைகள் மீதான எதிர்மறை விளைவுகளை அதிகரிக்க 2 செ.மீ. தண்ணீரில் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். முழு வயலிலும் பயன்படுத்துவதை விட, பூச்சிக்கொல்லிகளை அந்தந்த இடம் மற்றும் நீர்வழிப் பாதைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த தயாரிப்புப் பொருட்களை நடவு செய்த பின் அல்லது நேரடியாக விதைக்கப்பட்ட அரிசி பயிர்களில் நாற்று நடும் நிலையில் உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் இவற்றை 30 நாட்களுக்கும் குறைவான அரிசி பயிர்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எப்போதும் முகப்புச் சீட்டை படித்து மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது பொமேசியா கனலிகுலேட்டா மற்றும் பி.மகுலேட்டா என்னும் இரண்டு விதமான தங்க ஆப்பிள் நத்தை இனங்களால் ஏற்படுகின்றன. இவைகள் மிகவும் அதிகமாக ஊடுருவக்கூடியவை மற்றும் அரிசிப் பயிர்களுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும். இவை வழக்கமாக நீர் வழிப் பாதைகள் (பாசனக் கால்வாய்கள், இயற்கை நீர் விநியோகம்) அல்லது வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் மூலம் பரவுகிறது. தண்ணீர் இல்லாதபோது, இந்த நத்தைகள் தானே மண்ணுக்குள் புதைந்துகொண்டு, மற்றும் ஆறு மாதங்கள் வரை அங்கு நிலைத்திருக்கக் கூடியவை, மேலும் தண்ணீர் வந்தவுடன் அவை மண்ணிலிருந்து வெளியேறும். இவற்றின் நிறம் மற்றும் அளவு இது எந்த அரிசி வளர்ப்பு முறையைப் பிறப்பிடமாக கொண்டது என்பதை நாம் கணிக்க உதவும். தங்க ஆப்பிள் நத்தைகள் சேறு போன்ற பழுப்பு நிற ஓடுகளையும், தங்க இளஞ்சிவப்பு அல்லது ஆரஞ்சு-மஞ்சள் சதையையும் கொண்டிருக்கும். சாதாரண நத்தைகளோடு ஒப்பிடுகையில் இவை அளவில் பெரியதாகவும், நிறத்தில் வெளிறிய நிறமாகவும் இருக்கும். இவற்றின் முட்டைகள் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்திலும் மற்றும் நூற்றுக்கணக்கான முட்டைகள் கொத்துக்களாக இடப்படும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான மற்றும் வீரியம் வாய்ந்த தாவரங்களை நடவு செய்ய வேண்டும்.
  • அரிசி பயிர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைகளின்போது (30 நாட்களுக்கு குறைவாக) வயல்களில் நன்கு வடிகால் அமைத்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மாற்றாக, இந்த நிலையில் 2 சென்டிமீட்டர் அளவிற்கு குறைவாக நீர் மட்டத்தை வைக்கவும்.
  • குறைந்த அடர்த்தி கொண்ட நாற்றங்கால் படுகையில் இருந்து 25-30 நாள் முதிர்ந்த கடினமான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • காலை நேரங்களில், நத்தைகள் மற்றும் முட்டைக் கொத்துக்களை எடுத்து மற்றும் நசுக்கிவிடவும்.
  • நத்தைகளை கவர்ந்து எளிதாக எடுப்பதற்கு, பப்பாளி மற்றும் மரவள்ளிக்கிழங்கு இலைகளை நெல் வயல்களைச் சுற்றி நடவு செய்ய வேண்டும்.
  • அரிசி வயலில் தண்ணீர் நுழையும் மற்றும் வெளியேறும் வாயிலை அடைத்துவிடவும்.
  • முட்டையிடுவதற்கான இடத்தை வழங்க மூங்கில் தண்டுகளை நட்டு வைக்கவும்.
  • இயற்கை இரைப்பிடித்துண்ணிகளை பாதிக்காத வகையில், பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க