Chlumetia transversa
பூச்சி
மாம்பழ தண்டு துளைப்பானின் கம்பளிப்பூச்சிகள் வளர்ந்து கொண்டிருக்கும் மஞ்சரிகள் வழியே ஊடுருவி, இலை மையநரம்பு அல்லது தண்டுகளை இலகுவாக்கி, தண்டுகளை கீழ்நோக்கி குடையும். பாதிக்கப்பட்ட தாவர பாகங்கள் வாடி, சந்தர்ப்பவாத நோய்க்கூறுகளால் இரண்டாம்நிலை நோய்தொற்றுக்கு வழிவகுக்கின்றன. முட்டைப்புழுவானது வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிற உடலையும், கருப்பு தலையையும் கொண்டுள்ளது. இந்த புழு வெளியே வந்து புதிய தளிர்களின் மென்மையான மற்றும் இலகுவான திசுக்களை உண்டு, நுழைவு வாயில் அருகே அதிகப்படியான பூச்சிக்கழிவுகளை விட்டுவிடுகின்றன. எஞ்சிய தாவரத்தின் மீது அல்லது மண்ணின் மேற்பரப்பில் பழுப்பு நிற கூட்டுப்புழுக்களை காணலாம். மாம்பழம் மற்றும் லிட்சி பழம் மட்டுமே இந்த பூச்சிகளின் அறியப்பட்ட புரவலனாகும்.
எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, கம்பளிப்பூச்சிகளை விரட்டுவதற்கும், தண்டு துளைப்பானின் தொற்றைக் குறைக்கவும், தண்ணீரில் கலக்கப்பட்ட பூண்டு மற்றும் மிளகின் தாவர சாற்றை தெளிக்கலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பாகங்கள் அல்லது நாற்றுக்களை அகற்றி, பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்த 0.04% டைமீதோயேட் தெளிப்பான்களை பயன்படுத்தவும். பூச்சிக்கொல்லிகளான பென்தோயேட் முதலியவற்றையும் மாம்பழ தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
பிரதானமாக வெவ்வேறு தாவர பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் முட்டைப்புழு உண்ணுவதால் ஏற்படுகின்றன. வயதுமுதிர்ந்த அந்துப்பூச்சிகள் சாம்பல்-கருப்பு நிறத்தில் மற்றும் 8-10 மி.மீ அளவில் இருக்கும். அவை நீண்ட உணர்கொம்புடன் பழுப்பு நிற ஆடை போன்ற உடலைக் கொண்டுள்ளது. அதன் இறக்கை 15 மிமீ நீளம் கொண்டிருக்கும். முன்இறக்கைகள் பழுப்பு நிறத்தில், பழுப்பு நிறத்தின் பல்வேறு நிறத்தின்மைகளில் குறுக்கே தீட்டப்பட்ட பட்டைகளுடன், இறக்கையின் விளிம்புக்கு அருகில் வெளிர் திட்டுகளையும் கொண்டிருக்கும். அதன் பின்இறக்கைகள் வெறும் பழுப்பு நிறத்தில் இருக்கும். தண்டுகள் மற்றும் இளம் தளிர்கள் மீது பாலாடை போன்ற வெள்ளை முட்டைகள் இடப்படும். 3-7 நாட்கள் கழித்து முட்டைப்புழு வெளியேறி, அது கூட்டுப்புழு ஆகும் வரை 8-10 நாட்கள் வரை உணவு உண்ணும். வெளியான பிறகு, முதிர்ச்சியடைந்த பூச்சிகள் மற்ற மரங்கள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு உடனடியாக பறக்கின்றன. மழை மற்றும் அதிக ஈரப்பதம் மாம்பழத் துளைப்பான்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளன. ஒப்பீட்டளவில் அதிக வெப்பநிலை பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியைத் தடுக்கிறது.