மாங்கனி

மாங்கனி தண்டு குதிக்கும் பேன்

Apsylla cistellata

பூச்சி

சுருக்கமாக

  • மொட்டுகள் உருவாக வேண்டிய இடத்தில் கடினமான, கூம்பு வடிவ இயல்பற்ற வளர்ச்சி காணப்படும்.
  • இலைகளுக்கு அடியில் பழுப்பு-கருப்பு நிற சூலக வடிவிலான முட்டைகள் காணப்படும்.
  • மஞ்சரிகள் மற்றும் பழங்கள் அழிந்து போதல் அல்லது குறைதல் முதலியவை ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

பெண் பூச்சிகள் இளவேனிற்காலத்தில் மைய நரம்பு அல்லது இலைகளின் அடிப்பகுதியில் இருக்கும் விளிம்பில் சூலக வடிவிலான, பழுப்பு-கருப்பு நிற முட்டைகளை இடுகின்றன. முட்டையிட்ட ஏறக்குறைய 200 நாட்களுக்கு பின், குட்டிப்பூச்சிகள் வெளிவந்து, அருகில் இருக்கும் மொட்டுகளுக்கு நகர்ந்து வந்து, அவற்றை உண்ணும். அவை தாவர திசுக்களை துளையிட்டு உண்ணும்போது, அவற்றுக்குள் செலுத்தப்படும் இரசாயனங்கள், மொட்டுகள் இருக்கும் இடத்தில் கடினமான, கூம்பு வடிவ இயல்பற்ற வளர்ச்சியை உருவாக்குகிறது. இது மஞ்சரி மற்றும் பழங்கள் சரியான முறையில் வளர்ச்சி பெறுவதை தடுக்கிறது. கடுமையான நோய் தொற்றின் போது பாதிக்கப்பட்ட கிளைகள் முடக்கப்படும். இழப்புக்கள் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் மஞ்சரிகளிl அவை ஏற்படுத்தும் விளைவுகளை பொறுத்து உள்ளது. இந்தியாவிலும் பங்களாதேசிலும் அப்செல்லா சிஸ்டெல்லேட்டா கடுமையான நோய் ஏற்படுத்தும் பூச்சியாக கூறப்படுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிலிக்கேட்ஸ் நிறைந்த தொழில்துறை சாம்பல் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. கூம்புகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க, பாதிக்கப்பட்ட கிளைகள் மற்றும் தளிர்களின் பாதிக்கப்பட்ட இடங்களை 15-30 செ.மீ. வரை நறுக்கி சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மரங்களில் ஏறி, இறங்கும் குதிக்கும் பேன்களை அளிக்க, மர பட்டைகளில் டைமீதோயேட் பசையினை (0.03%) தடவவும். டைமீதோயேட்டை மரப்பட்டைகளில் உட்செலுத்துவதும் நன்கு வேலை செய்யும். குதிக்கும் பேன் நோய் தொற்றின் ஆரம்ப நிலைகளில், இந்த பூச்சிக்கொல்லிகள் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த பூச்சிகள் 3 முதல் 4 மிமீ நீலத்தில், பழுப்பு கருப்பு நிற தலைகள் மற்றும் மார்புபகுதி, மற்றும் வெளிர் பழுப்பு வயிற்றுப்பகுதி மற்றும் பல வண்ண மெல்லிய இறக்கைகளைக் கொண்டிருக்கும். அவை மைய நரம்பின் இரு பக்கங்களிலும் அல்லது இலைகளின் கீழ் பரப்பில் ஒரு கோட்டை ஏற்படுத்தி, திசுக்களில் செருகி அவற்றை சேதப்படுத்தும். சுமார் 200 நாட்களுக்கு பிறகு, முட்டையிலிருந்து மஞ்சள் நிறத்தில் இளம் பூச்சிகள் வெளியேறும். வெளியான பிறகு, அவை அருகில் இருக்கும் மென்மையான மொட்டுகளுக்கு சென்று அவற்றின் சாற்றை உறிஞ்சும். அவை தாவர திசுக்களை துளையிட்டு உண்ணும்போது, அவற்றுக்குள் செலுத்தப்படும் இரசாயனங்கள், பச்சை நிற கூம்பு வடிவ இயல்பற்ற வளர்ச்சியை உருவாக்குகிறது. அங்கே இளம் பூச்சிகள், முதிர்வடைவதற்கு முன்பாக ஆறு மாத கால நீண்ட சுழற்சியை மீண்டும் தொடங்குகின்றன. முதிர்ந்த பூச்சிகள் கூம்பிலிருந்து நிலத்தில் விழும். அங்கே அவற்றின் தோலை விட்டு செல்லும். பின்னர், அவை இனப்பெருக்கம் செய்ய மரங்களில் ஏறி, முட்டைகளை இடும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • குதிக்கும் பேன் நோய் தொற்றுகள் காணப்படுகிறதா என வழக்கமாக பழத்தோட்டத்தை கண்காணிக்கவும்.
  • அதிகப்படியான உர பயன்பாட்டை தவிர்க்கவும்.
  • உலர்ந்த பருவ காலத்தில் வறட்சியை தவிர்ப்பதற்காக பழத்தோட்டத்திற்கு வழக்கமாக நீர்பாய்ச்சவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க