மற்றவை

போரான் பற்றாக்குறை

Boron Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • இலைகள் மஞ்சள் நிறமாகும் மற்றும் தடித்துப் போகும்.
  • இலைகளும் தண்டுகளும் உடையத்தக்க வகையில் மிருதுவாகும்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

பயிர் மற்றும் வளர்ந்து வரும் நிலைமைகள் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். ஆனால் பொதுவாக இவை புதிதாக வளருபவற்றில் மட்டுமே காணப்படும். ஆரம்ப அறிகுறிகளாக பொதுவாக இளம் இலைகளில் நிறமாற்றம் மற்றும் தடித்தல் ஆகியவை ஏற்படும். இலைகள் மஞ்சள் நிறமாகுவது நரம்புகளுக்கிடையே சீராகவோ, அல்லது பரவலாகவோ இருக்க கூடும், மேலும் முக்கிய நரம்பை நெருங்குகையில் இது படிப்படியாக மறையும். இலைகள் மற்றும் தளிர்களின் அருகே இருக்கும் தண்டுப்பகுதி நொறுங்க கூடியதாகவும், அதனை வளைத்தால் எளிதில் உடையக்கூடியதாகவும் காணப்படும். இலைகள் மடிப்பாக மாறக்கூடும் (நரம்புகளுக்கு இடையேயான பகுதிகளில் சற்று அதிகமாய் காணப்படும்). மேலும் நுனி மற்றும் குறுக்கு மடல்கள் கீழே சுருண்டு கொள்ளும். சில சந்தர்ப்பங்களில், இலை நரம்புகள் தடிமனாகவும், உயர்த்தப்பட்டதாகவும், இலை காம்புகள் சுருண்டும் காணப்படும். கணுவிடைப்பகுதி குட்டையாகவும், முகடுகளின் அருகே அடர்ந்த இலைகளையும் உருவாக்குகிறது. நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது, இதன் குறைப்பாடு வளரும் பகுதிகளில் சிதைவுகளை ஏற்படுத்தும். சேமிப்பு வேர்கள் பெரும்பாலும் குறுகிய மற்றும் மழுங்கிய முனைகளுடன் காணப்படும், மேலும் குறைபாடு அதிகரிக்கும் போது, பிளவுகளும் ஏற்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நல்ல கரிமப் பொருள் மற்றும் தண்ணீரை தக்கவைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்க பண்ணை எருக்களை பயன்படுத்தி மணலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

  • போரான் கலவைகளை கொண்ட உரங்களை பயன்படுத்தவும் (பி).
  • உதாரணம் : இலைவழித் தெளிப்பான்களாக டைசோடியம் ஆக்டோபோரட் டெட்ராஹைட்ரேட் (போரான் 20%).
  • உங்களது மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த உங்கள் வேளாண் ஆலோசகரை அணுகவும்.

பிற பரிந்துரைகள்:

  • பயிரின் உற்பத்தியினை சரியாக திட்டமிட பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
  • போரானை மண்ணில் பயன்படுத்துவது சிறந்தது ஏனெனில் இலைவழித் தெளிப்பான்களாக போரானை பயன்படுத்தும்போது அவை சில நேரங்களில் பயிரின் இலைகளை சேதப்படுத்தக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

போரான் குறைபாடு பொதுவாக உயர் pH உடைய மண்ணில் காணப்படுகிறது, ஏனெனில் இந்த நிலையில் இந்த மூலக்கூறு தாவரங்களுக்கு கிடைக்கப்பெறாத வகையில் வேதியியல் வடிவத்தில் உள்ளது. குறைந்த கரிமப் பொருள் உள்ளடங்கிய மண் (<1.5%) அல்லது உதிரி மணல்களில் (ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்) போரான் குறைபாடு எளிதில் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில், போரான் பயன்பாடு இந்த பற்றாக்குறையை சரி செய்யாது. ஏனெனில், தாவரம் உறிஞ்சுவதற்கு இந்த ஊட்டச்சத்து கிடைக்கப்பெறாமல் இருக்கலாம். இலைத் தொகுதிகளில் காணப்படும் இந்த அறிகுறிகள் பிற நோய்களோடு ஒத்திருக்க கூடும்: சிலந்தி பேன் போன்றவை, துத்தநாகம் குறைபாடு அல்லது லேசான இரும்பு குறைபாடு. சேமிக்கும் வேர்களில், சேமிப்பு வேர்கள், கொப்புளம் போன்ற புடைப்புகள் மற்றும் வெடிப்பு அத்துடன், வேர் முடிச்சு நூற்புழு அல்லது மண்ணின் ஈரப்பதத்தின் விரைவான மாற்றங்களின் அறிகுறிகளாக இருக்கலாம். கால்சியம் பற்றாக்குறை தளிர்கள் மற்றும் வேர் நுனிகள் இறப்புக்கு கூட வழிவகுக்கக்கூடும். ஆனால் தளிர்களின் நுனிக்கு கீழே இருக்கும் இளம் இலைகள் தடிமனாக இருக்காது மற்றும் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிறமாகுதல் அவற்றில் உருவாகாது.


தடுப்பு முறைகள்

  • அதிகப்படியான ஹைட்ரஜன் அயனிச் செறிவு மற்றும் களிமண் தாதுக்கள், இரும்பு அல்லது அலுமினியம் ஆக்சைடுகள் நிறைந்த மண்ணைத் தவிர்க்கவும்.
  • அதிக காற்று ஈரப்பதம் மற்றும் குறைந்த மண் ஈரத்தை தவிர்க்கவும்.
  • மண்ணில் அதிக உரமிடவோ அல்லது சுண்ணாம்பு கலக்கவோ வேண்டாம்.
  • பயிர்களுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் மண்ணின் ஊட்டச்சத்து அளவுகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு மண்ணை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க