சோயாமொச்சை

துத்தநாகப் பற்றாக்குறை

Zinc Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • ஓரங்களிலிருந்து தொடங்கி இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • முக்கிய இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும்.
  • இலை உருக்குலைவு - தண்டுகளை சுற்றி இலைகள் கொத்துக்களாக காணப்படுதல்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

31 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

தாவர இனங்களுக்கு இடையே துத்தநாக குறைபாட்டுக்கான அறிகுறிகள் மாறுபடும், ஆனால் பல விளைவுகள் பொதுமைப்படுத்தப்படலாம். பல இனங்களில், பெரும்பாலும் நரம்புகளுக்கிடையே இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும், ஆனால் முக்கிய இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும். சில இனங்களில், இளம் இலைகள் மிகவும் பாதிக்கப்படும், ஆனால் மற்றவைகளில் பழைய மற்றும் புதிய இலைகள் இரண்டிலும் அறிகுறிகள் காணப்படும். புதிய இலைகள் பெரும்பாலும் சிறியதாகவும், குறுகலாகவும், அலைபோன்ற விளிம்புகளுடன் காணப்படும். காலப்போக்கில், வெளிறிய புள்ளிகள் வெண்கல நிறமாக மாறும் மற்றும் சிதைந்த புள்ளிகள் விளிம்புகளில் இருந்து உருவாகத் தொடங்கும். சில பயிர்களில், துத்தநாகம் குறைபாடுள்ள இலைகள் பெரும்பாலும் குறுகலான கணுவிடைப்பகுதிகளைக் கொண்டிருக்கும், எனவே இலைகள், தண்டுகளில் கொத்துக்களாக காணப்படும். புதிய இலைகளின் (குள்ள இலைகள்) கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியினால் , இலைச் சிதைவு மற்றும் குறைந்த வளர்ச்சி ஏற்படலாம் மற்றும் கணுவிடைப்பகுதியின் நீளமும் குறைந்து காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

துத்தநாகப் பற்றாக்குறையின் முரண்பாடுகளை குறைப்பதற்கு, நடவு செய்த சில தினங்களுக்குப் பின் விதைப்படுகை அல்லது வயலில் கரிம உரங்களைப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

  • துத்தநாகம் கலந்திருக்கும் உரங்களைப் பயன்படுத்தவும்.
  • உதாரணம் : பொதுவாக ஜிங்க் சல்பேட்டை (ZnSO4) இலை வழித்தெளிப்பானாக பயன்படுத்தலாம்.
  • உங்கள் மண் மற்றும் பயிருக்கான சிறந்த பொருட்கள் மற்றும் அவற்றின் அளவினை அறிந்துகொள்ள உங்கள் பகுதியின் விவசாய பரிந்துரையாளருடன் ஆலோசனை செய்யவும்.

பிற பரிந்துரைகள்:

  • மகசூலை அதிகரிக்க, பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • விதைத்தலுக்கு முன்னர் மண் வழியே துத்தநாகம் அளிக்கப்படும் சிகிச்சையினை செயல்முறைப்படுத்தவும்.
  • விதைகளுக்கு துத்தநாகத்தின் மூலம் பூச்சு செய்வதன் மூலம் பயிரிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும்.

இது எதனால் ஏற்படுகிறது

துத்தநாகம் குறைபாடு முக்கியமாக, குறைவான கரிம பொருட்களைக் கொண்ட காரத்தன்மை (உயர் ஹைட்ரஜன் அயனிச்செறிவு) கொண்ட மணலில் பெரும் பிரச்சனையாக உள்ளது. மண்ணில் இருக்கும் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் (சுண்ணாம்பு மண்) ஆகியவை தாவரங்களுக்கு துத்தநாகம் கிடைக்க செய்வதை பாதிக்கின்றன. இன்னும் சொல்ல போனால், பாஸ்பரஸ் பயன்பாடு துத்தநாகம் உறிஞ்சும் உக்தியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுண்ணாம்பு அல்லது சுண்ணாம்புக்கட்டி (சுண்ணக்கலப்பு) போன்ற கால்சியம் நிறைந்த பொருட்கள் மண்ணின் அமிலத்தன்மையை குறைக்கிறது. மேலும் தாவரங்களின் மூலம் துத்தநாகம் உறிஞ்சப்படும் அளவை குறைக்கிறது (மண்ணில் உள்ள அளவுகள் மாறாமல் இருந்தாலும்). வளரும் நிலைகளில் மண் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருக்கும் போது துத்தநாகப் பற்றாக்குறை சிக்கலாக இருக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • நாற்றங்கால் அல்லது நாற்று நடுவதற்கு முன் கரிம உரங்களை பயன்படுத்த வேண்டும்.
  • மண்ணில் சுண்ணாம்பை கலக்க வேண்டாம், ஏனெனில் இது pH- ஐ அதிகரித்து, துத்தநாகம் உறிஞ்சப்படுதலை தடுக்கிறது.
  • துத்தநாக பற்றாக்குறைக்கு சகிப்புத்தன்மை கொண்ட தாவர வகைகள் அல்லது மண்ணிலிருந்து துத்தநாகத்தை நன்கு உறிஞ்சி கொள்ளும் தாவர வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அம்மோனியம் சல்பேட்டை விட யூரியா (அமிலத்தன்மையை உருவாக்கும்) அடிப்படையிலான உரங்களைப் பயன்படுத்தவும்.
  • பாஸ்பரஸ் கலந்த உரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • நீர்ப்பாசன நீர் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நிரந்தரமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் அவ்வப்போது வடிந்து, காய்வதற்கு அனுமதிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க