பருத்தி

மாங்கனீசு பற்றாக்குறை

Manganese Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • இளம் இலைகளில் புள்ளிகளுடன், பரவலாக, வெளிர் பச்சையிலிருந்து மஞ்சள் நிறம் வரையில் நரம்புகளுக்கு இடையே வெளிறிய சோகை காணப்படும்.
  • வெளிறிய பகுதிகளில், சிறிய சிதைந்த காயங்கள் உருவாகும்.
  • சரிசெய்யப்படாவிட்டால், இலையின் மேற்பரப்பில் பழுப்பு நிறத்தில் சிதைந்த புள்ளிகள் தோன்றக்கூடும், மேலும் கடுமையான பாதிப்பிற்குள்ளான இலைகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

பருத்தி

அறிகுறிகள்

அறிகுறிகள், மற்ற ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போல் தடாலடியாக இல்லாமல், சம்பந்தப்பட்ட பயிரைப் பெரிதும் சார்ந்து அமைகின்றன. மாங்கனீசு குறைபாடுள்ள செடியின் நடுப்புறத்திலும், மேல் புறத்திலும் (இளம்) இருக்கும் இலைகளின் நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும். ஆனால் மீதமுள்ள இலைப் பகுதி முதலில் வெளிர் பச்சை நிறமாகி, பின் வெளிர் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறம் வரையில் புள்ளிகளையுடைய வடிவத்தைக் கொள்கின்றன (நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகை). காலப்போக்கில், சிறிய சிதைந்த காயங்கள் வெளிறிய திசுக்களில், குறிப்பாக விளிம்புகள் மற்றும் நுனிகளுக்கு அருகில் தோன்றுகின்றன (நுனிகள் எரிவது). இலையின் அளவு சிறிதாகுதல், உருமாற்றம் மற்றும் இலை விளிம்புகள் சுருள்வது போன்றவை ஏற்படக்கூடிய பிற அறிகுறிகள் ஆகும். சரி செய்யாவிடில், இலை மேற்பரப்புகளில் பழுப்பு நிறத்தில் சிதைந்த புள்ளிகளாக உருவாகலாம். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும். மெக்னீஷிய குறைபாட்டுடன் இதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதன் அறிகுறிகள் இதோடு ஒத்திருந்தாலும் அவை முதலில் முதிர்ந்த இலைகளிலேயே தோன்றும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மண்ணில் அடங்கியுள்ள ஊட்டச்சத்தை சமன் செய்ய இயற்கை உரம், கரிம தழைக் கூளங்கள் அல்லது கூட்டுரங்களை (கம்போஸ்ட்) பயன்படுத்தவும். இவை கரிம பொருள்களைக் கொண்டுள்ளதால், மண்ணின் கரிமச்சத்தையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்து மண்ணின் ஹைட்ரோஜன் அயனிச்செறிவை சற்றே குறைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

  • மாங்கனீசு கலந்திருக்கும் உரங்களைப் பயன்படுத்தவும்.
  • உதாரணம்: மாங்கனீசு சல்ஃபேட் (Mn 30.5%), பொதுவாக இலைத்திரள் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் உரமாகும்.
  • உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த பொருளை எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதை அறிய உங்கள் விவசாய அறிவுரையாளரை அணுகவும்.

பிற பரிந்துரைகள்:

  • உங்கள் பயிரின் உற்பத்தியினை திட்டமிட பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மாங்கனீசு (Mn) குறைபாடு ஒரு பரவலான பிரச்சனையாகும், இது பெரும்பாலும் மணல் சார்ந்த நிலங்கள், 6-க்கு மேலே pH கொண்ட கரிம நிலங்கள், சீதோஷ்ண நிலைகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் நேரும். இதற்கு மாறாக, அமிலம் மிகுந்த மண் இந்த ஊட்டச்சத்து கிடைப்பதை அதிகரிக்கும். உரங்களின் அதிகப்படியான அல்லது சமநிலையற்ற பயன்பாடு, சில நுண்சத்துக்கள் தாவரங்களுக்குக் கிடைக்க ஒன்றோடொன்று போட்டியிடச் செய்யலாம். ஒளிச்சேர்க்கை மற்றும் நைட்ரேட் கிரகித்தலில் மாங்கனீசு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்பு, போரான் மற்றும் கால்சியம் போலவே, மாங்கனீசு பயிருக்குள் நகராது, இது பெரும்பாலும் கீழ் புறத்திலுள்ள இலைகளில் சேர்ந்துவிடும். அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் முதலில் ஏன் தோன்றுகின்றன என்பதை இது விளக்குகிறது. மற்றவைகளுக்கு மத்தியில், தானியங்கள், பருப்பு வகைகள், கல் பழங்கள், பனைப் பயிர்கள், சிட்ரஸ், இனிப்பு கிழங்குகள் மற்றும் கனோலா போன்ற மாங்கனீசு குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடிய பயிர்கள், இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உரங்களை இடுவதால் சாதகமான பலன்களைத் தருகின்றன.


தடுப்பு முறைகள்

  • ஹைட்ரோஜன் அயனிச்செறிவை சரிப்பார்த்து, தேவைப்பட்டால் சரியான அளவு ஊட்டச்சத்துக்களை உள்ளிழுப்பதற்கு உகந்த வரம்பைப் பெறும் வகையில் அதைச் சரி செய்யவும்.
  • வயல்களில் நல்ல வடிகால் வசதியினை திட்டமிடவும்.
  • பயிர்களுக்கு அதிக அளவில் நீர்ப்பாய்ச்ச வேண்டாம்.
  • மண்ணின் ஈரப்பதம் நிலையாக இருக்க கரிம தழைக்கூளத்தைப் பயன்படுத்தவும்.
  • சமநிலையான உரமிடுதலே உகந்த தாவர சுகாதாரத்திற்கும், அதிக மகசூலுக்கும் வழிவகுக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க