கத்திரிக்காய்

இரும்புச்சத்து குறைபாடு

Iron Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • ஓரங்களிலிருந்து தொடங்கி, இலைகள் மஞ்சள் நிறமாகும்.
  • இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும்.
  • பிந்தைய நிலையில், இலைகள் பழுப்பு நிற புள்ளிகளுடன் வெண்ணிற மஞ்சளாகும்.
  • குன்றிய வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

கத்திரிக்காய்

அறிகுறிகள்

இது மேற்புற இலைகள் மஞ்சள் நிறமாகுதல் (பச்சையச் சோகை), நடுப்பகுதி நரம்புகள் மற்றும் இலை நரம்புகள் தெளிவாக பச்சை நிறத்தில் இருத்தல் (நரம்புகளுக்கு இடையேயான பச்சையச் சோகை) போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும். பின்னர், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனில், மொத்த இலைகளும் வெண்மஞ்சள் நிறமாகி, இலை ஓரங்களில் பழுப்பு நிறங்களில் சிதைவுற்ற புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும், மேலும் இது பெரும்பாலும் ஓரங்கள் மீது சிதைவான திட்டுக்கள் வளருவதற்கு வழிவகுக்கிறது. வயலுக்கு தொலைவில் நின்று பார்த்தாலே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணலாம். இரும்புச்சத்து குறைபாடுள்ள தாவரங்கள் வளர்ச்சி குன்றி காணப்படும், குறைவான விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிறிய வயல்கள் வைத்திருப்பவர்கள் பூனைக்காஞ்சொறிச் செடி வகைக்கசடு மற்றும் பாசி சாறுகள் முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட இலை உரங்களை பயன்படுத்தலாம். விலங்கின் உரங்கள், கரி மற்றும் உரம் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமும் மண்ணின் இரும்பு சத்துக்களை அதிகரிக்கலாம். உங்கள் பயிர்களுக்கு அருகில் டேன்டேலியன்ஸ் தாவரங்களை வளர்க்கலாம், ஏனென்றால் இது அருகிலுள்ள பயிர்களுக்கு குறிப்பாக மரங்களுக்கு இரும்புச்சத்துக்களை கிடைக்கச் செய்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

  • இரும்புச்சத்து நிறைந்த உரங்களை பயன்படுத்தவும். (உதாரணம்: ஃபெர்ரஸ் சல்பேட் Fe19%).
  • உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த தயாரிப்பை எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதை அறிய உங்கள் விவசாய அறிவுரையாளரை அணுகவும்.
  • உங்கள் பயிரின் உற்பத்தியினை திட்டமிட பயிர் செய்யும் காலம் தொடங்குவதற்கு முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

வெப்பமண்டல மண் அல்லது மோசமான வடிகால் கொண்ட மண், பெரும்பாலும் குளிர்ந்த, ஈரமான இளவேனிற்காலங்களில் இரும்புச்சத்து பற்றாக்குறை கடும் பிரச்சினையாக இருக்கும். சோளம், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவை மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் பயிர்கள், கோதுமை மற்றும் மணப் புல்வகை ஆகியவை குறைவாக பாதிக்கப்படக்கூடியவை. சுண்ணாம்பிலிருந்து பெறப்படும் சுண்ணாம்பு சத்துள்ள மண், காரதன்மையுடைய மண் (ஹைட்ரஜன் அயனிச் செறிவு 7.5 அல்லது அதற்கு மேல்) ஆகியவை தாவரங்களை பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடுடையதாக ஆக்குகிறது. ஒளிச்சேர்க்கைக்கு, பருப்பு வகைகளின் வேர் நொதில்கள் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம். எனவே, இரும்பு குறைபாடு வேர்களின் அடர்த்தி, தழைச்சத்துக்களின் நிலைப்பாடு மற்றும் பயிர் விளைச்சல் ஆகியவற்றை கடுமையாக குறைக்கிறது. மதிப்பிடப்பட்ட உச்சநிலை அளவு 2.5 மி.கி / கிலோ தாவர உலர் திசுவாகும். இரும்புச்சத்து பற்றாக்குறை தாவரங்கள் கேட்மியத்தை அதிகமாக உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தாவரங்களில் கேட்மியம் அதிகமாக காணப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • இரும்புச்சத்து பற்றாக்குறை குறைவாக ஏற்படக்கூடிய தாவர வகைகளை தேர்வு செய்யவும்.
  • பயிரிடப்படும் தாவரங்களின் அருகில் டேன்டேலியன் தாவரங்களைப் பயிரிடவும்.
  • இரும்பு சத்துக்கள் கொண்ட உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • சாத்தியமானால், சுண்ணாம்பு சத்துள்ள, காரத்தன்மையுடைய மணல்களில் எளிதில் பாதிக்கக்கூடிய பயிர்களை நடவு செய்வதை தவிர்க்கவும்.மண்ணின் வடிகால்களை மேம்படுத்தி மற்றும் அதிக நீர் பாய்ச்சாதிருத்தல் வேண்டும்.
  • சுண்ணாம்பு கலக்க வேண்டாம் ஏனென்றால் இது மண்ணின் ஹைட்ரோஜென் அயனிச்செறிவின் அளவை அதிகரிக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க