இந்த இணையதளம் உங்களுக்கு நல்லதொரு வலைத்தேடல் அனுபவத்தைத் தருவதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறது Learn more.
இந்த இணையதளம் உங்களுக்கு நல்லதொரு வலைத்தேடல் அனுபவத்தைத் தருவதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறது Learn more.
Nitrogen Deficiency
அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றும், பின்னர் அவை படிப்படியாக இளம் இலைகளுக்கு நகரும். இலேசான பற்றாக்குறையில், பழைய முதிர்ந்த இலைகள் வெளிர் பச்சை நிறமாக மாறும். அவை சரிசெய்யப்படாவிட்டால், காலப்போக்கில், பரவலான பச்சை சோகை இலைகளில் தோன்றி, நரம்புகள் மற்றும் இலைக்காம்புகள் இலேசான சிவப்பு நிறமாற்றத்தோடு காணப்படும். பற்றாக்குறை அதிகரிக்கும் போது, இலைகள் இறுதியில் மஞ்சள் வெள்ளை நிறத்தில் (நரம்புகள் உட்பட) மாறும், மேலும் அவை சுருண்டு கொள்ளும் அல்லது சிதைந்து விடும். இளம் இலைகள் வெளிர் பச்சை நிறமாக இருக்கும், ஆனால் வழக்கத்தைவிட மிகவும் சிறியதாக வளரும். குறைவான கிளைகளால் தாவரங்கள் நீளமாக, மெல்லியதாய் காணப்படும், ஆனால் அவற்றின் உயரம் பொதுவாக சாதாரணமாக இருக்கும். நீரின் அழுத்தத்திற்கு தாவரங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன மற்றும் இலைகள் வாடுதல் மிகவும் பொதுவானது. இலைகள் முன்கூட்டியே வாடி, உதிர்ந்து, குறைவான விளைச்சலை ஏற்படுத்துகிறது. உர வடிவில் தழைச்சத்து பயன்படுத்திய சில நாட்களுக்கு பிறகு மீண்டும் மீட்சி அடைகிறது.
தாவரங்களின் வளர்ச்சியின் போது, தழைச்சத்து உயர் விகிதத்தில் இருப்பது மிகவும் முக்கியம். சாதகமான பருவ காலங்களில், வேகமாக வளரும் பயிர்களுக்கு அதிகப்படியான தழைச்சத்து வழங்குவது மிகவும் முக்கியம், இதனால் தாவரங்களின் அதிகபட்ச வளர்ச்சியினையும், பழங்கள்/பயிர்களின் அதிகப்படியான விளைச்சலையும் அடைய முடியும். தழைச்சத்து குறைப்பாட்டை குறைந்த கரிமப் பொருட்கள் கொண்ட வடிகட்டிய நல்ல மணலில் காணலாம். அடிக்கடி மழைப்பொழிவு, வெள்ளம் அல்லது அதிகப்படியான நீர் பாசனம் மண்ணில் உள்ள தழைசத்துக்களை கழுவிச்சென்றுவிடும், இதனால் தழைச்சத்து குறைபாடு ஏற்படலாம். வறட்சி அதிகமாக இருக்கும் காலங்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது, இதன் விளைவாக சமச்சீரற்ற ஊட்டச்சத்துக்கள் அளிக்கப்படுகிறது. இறுதியாக, மண்ணில் உள்ள ஹைட்ரஜன் அயனிச்செறிவு அளவும் தாவரங்களுக்கு தழைச்சத்து கிடைப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. மண்ணில் உள்ள குறைந்த அல்லது உயர்ந்த ஹைட்ரஜன் அயனிச்செறிவு இரண்டுமே தழைச்சத்துக்கள் தாவரங்கள் மூலம் உறிஞ்சப்படுவதை பாதிக்கிறது.
மண்ணின் அதிக அளவிலான கரிமப்பொருள் மண் அமைப்பை அதிகரித்து, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்க வைத்துக் கொள்ள மண்ணின் திறனை மேம்படுத்துகிறது. உரம், கலப்பு உரம், கரி, அல்லது வெறுமனே செடி கசடுகள், பறவைகளின் எச்சம், கொம்பு உணவு அல்லது நைட்ரோ லைம் ஆகிய கரிமப்பொருட்களை மண்ணில் சேர்க்கலாம். பூனைக்காஞ்சொறிச் செடி வகையின் கசடுகளை நேரடியாக இலைகளின் மீதும் தெளிக்கலாம்.
- தழைச்சத்து (நைட்ரஜன்) அடங்கிய உரங்களைப் பயன்படுத்தவும். - உதாரணம்: யூரியா, என்.பி.கே, அம்மோனியம் நைட்ரேட். - உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த பொருளை எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதை அறிய உங்கள் விவசாய அறிவுரையாளரை அணுகவும். பிற பரிந்துரைகள்: - உங்கள் பயிரின் உற்பத்தியினை திட்டமிட பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. - தழைச்சத்தினை பயிர்ப் பருவம் முழுவதும் பிரித்து பயன்படுத்துவது சிறந்ததாகும். - அறுவடை நெருங்கும் நேரத்தில் தழைச்சத்தினை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.