நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

மணிச்சத்து பற்றாக்குறை

Phosphorus Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • ஓரங்களிலிருந்து தொடங்கி ஊதா நிற இலைகள்.
  • சுருண்ட இலைகள்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

பாஸ்பரஸ் குறைபாடு அறிகுறிகள் அனைத்து நிலைகளிலும் தோன்றும் ஆனால் இளம் தாவரங்களில் இன்னும் அதிகமாக காணப்படுகிறது. மற்ற ஊட்டச்சத்துகளுக்கு மாறாக, இந்த குறைப்பாட்டின் அறிகுறிகள் பொதுவாக மிகவும் வெளியே தெரிவது இல்லை மற்றும் அவற்றை அடையாளம் காணுவது கடினம். குறைவான பாதிப்புகளில், இந்த பற்றாக்குறையின் சாத்தியமான அறிகுறிகளினால், தாவரங்கள் குள்ளமானதாகவும் அல்லது வளர்ச்சி குன்றியதாகவும் இருக்கும். எனினும், தெளிவான அறிகுறிகள் இலைகளில் தெரிவதில்லை. கடுமையான குறைபாடுகளில், தண்டு மற்றும் இலைக்காம்புகள் கரும்பச்சை முதல் ஊதா நிறமாற்றத்தோடு காணப்படுகின்றன. பழைய இலைகளின் கீழ் பக்கங்களில் ஊதா நிறமேற்றங்கள் காணப்படுகின்றன. முனைகள் மற்றும் விளிம்புகளில் தொடங்கி, பின்னர் எஞ்சிய இலைப்பகுதி முழுவதும் விரிவடைகிறது. இந்த இலைகள் தோல்கள் மாதிரி மாறும், நரம்புகள் பழுப்பு நிற வலைப்பின்னலாக மாறக்கூடும். சில சந்தர்ப்பங்களில், பாஸ்பரஸ் குறைபாடு எரிந்த முனைகள் மற்றும் இலை விளிம்புகளில் பச்சை சோகை உருவாகும் மற்றும் சிதைந்த திட்டுக்கள் காணப்படும். மலர்கள் மற்றும் பழங்கள் உற்பத்தியாகும், ஆனால் பழ விளைச்சல் குறைவாக இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மண்ணில் உள்ள பாஸ்பரஸின் அளவுகள், பண்ணை உரம் அல்லது பிற பொருட்கள் (கரிம தழைக்கூளம், கலப்பு உரம் மற்றும் பறவைகளின் எச்சம்) அல்லது கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைவு செய்யப்படலாம். அறுவடைக்குப் பிறகு மண்ணில் எச்சங்களை புதைப்பதனால், நீண்டகாலத்திற்கு மண்ணில் பாஸ்பரஸை சமச்சீராய் பராமரிப்பதற்கும், மண் அமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. கரிம பொருட்களின் சிதைவு, தாவரங்களுக்கு நிலையான பாஸ்பரஸை வழங்குகிறது.

இரசாயன கட்டுப்பாடு

  • பாஸ்பரஸ் அடங்கிய உரங்களைப் பயன்படுத்தவும்.
  • உதாரணம்: டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP), ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP).
  • உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த பொருளை எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதை அறிய உங்கள் விவசாய அறிவுரையாளரை அணுகவும்.

பிற பரிந்துரைகள்:

  • உங்கள் பயிரின் உற்பத்தியினை திட்டமிட பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

பல்வேறு பயிர்களுக்கு இடையில் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுவதில் வேறுபாடுகள் உள்ளன. மண் நீரில் கரைக்கப்படும்போது வேர்கள் பாஸ்பேட் அயனிகளை உறிஞ்சிக் கொள்கின்றன. அதிக கால்சியம் செறிவுகளுடன் சுண்ணாம்பு மண் பாஸ்பரஸ் குறைபாடுடையதாக இருக்கக்கூடும். இருப்பினும், மிகவும் பொதுவாக, இந்த ஊட்டச்சத்து மிகவும் குறைவாகவே கிடைக்கிறது ஏனென்றால் பாஸ்பரஸ் மண் துகள்களில் ஒட்டிக்கொள்கின்றன, ஆதலால் அவற்றை தாவரங்களால் எடுத்துக்கொள்ள முடியாது. காரத்தன்மையுடைய மண் மற்றும் அமிலத் தன்மையுடைய மண் இரண்டிலும் பாஸ்பரஸ் குறைந்தே காணப்படுகிறது. குறைந்த கரிம பொருட்கள் அல்லது இரும்புச் சத்து நிறைந்த மண் கூட சிக்கலாக இருக்கலாம். வலுவான வளர்ச்சி மற்றும் வேர்கள் செயல்பாட்டை தடுக்கும் குளிர் காலநிலை இந்த குறைபாட்டுக்கு வழிவகுக்கும். வறட்சி நிலைகள் அல்லது நோய்கள், வேர்கள் மூலம் நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சுவதை குறைப்பதால் பாஸ்பரஸ் குறைபாட்டை தூண்டலாம். மண் ஈரப்பதம், இந்த ஊட்டச்சத்தை அதிகரித்து, அதிக விளைச்சலைக் கொடுக்கும்.


தடுப்பு முறைகள்

  • மண்ணிலிருந்து மணிச்சத்துக்களை திறம்பட அகழ்ந்து எடுக்கும் தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவும்.
  • பயிர்களின் சமச்சீர் மற்றும் திறம்வாய்ந்த உரங்களை பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.
  • அறுவடைக்குப்பின் எஞ்சிய தாவரக் கழிவுகளை மண்ணில் புதைத்து விடவும்.
  • மண்ணின் ஊட்டச்சத்து சமநிலையை பராமரிக்க தாது மற்றும் கரிம உரங்களுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்.
  • தேவையான மண் pH-ஐ அடைய, தேவைப்பட்டால் சுண்ணாம்பு மண்ணை பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க