கோதுமை

மெக்னீசியம் பற்றாக்குறை

Magnesium Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • வெளிறிய பச்சை நிற புள்ளிகள் அல்லது ஓரங்களில் இருந்து தொடங்கி இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • பிரதான இலை நரம்புகள் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • இலை பரப்பில் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள்.
  • உலர்ந்த இலை திசு இறந்து விடுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

கோதுமை

அறிகுறிகள்

மெக்னீசியம் குறைபாடுள்ள தாவரங்களில், பொதுவாக முதிர்ந்த இலைகளின் நரம்புகளுக்கு இடையிலிருக்கும் திசுக்களில் புள்ளிகளுடன் வெளிர் பச்சை நிறம் அல்லது வெளிறிய தோற்றம் காணப்படும். பெரும்பாலும் இது விளிம்புக்கு அருகிலிருந்து தொடங்கும். தானியங்களில், மிதமான குறைபாடுகள் கொண்ட இலைகளில் பச்சை நிறத்தில் நேர்கோட்டில் வட்ட வடிவங்கள் தோன்றுகின்றன. இது பின்னர், நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகையாக மாறும். கடுமையான குறைபாடுகளில், வெளிறிய சோகை இலைகளின் மையம் வரை முன்னேறிவிடும். இதனால் சிறு நரம்புகளும் பாதிக்கப்படும். சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் இலை பகுதியில் தோன்றும். பின்னர், அதிகப்படியான வெளிறிய திசுக்களில் சிதைந்த பகுதிகளாக உருவாகி இலைகளுக்கு ஒரு கரடுமுரடான சிதைக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கும். இறுதியாக, இந்த மஞ்சள் முழு இலையையும் ஆட்கொண்டு, இறுதியில் உரிய காலத்திற்கு முன்பே இறந்துவிடுவதற்கும், ஆரம்ப நிலையிலேயே உதிர்ந்துவிடுவதற்கும் வழிவகுக்கும். வேரின் வளர்ச்சி தடைபடுவதனால் தாவரத்தின் வீரியம்குறைந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாசி சுண்ணாம்பு, டோலமைட் அல்லது சுண்ணாம்பு மெக்னீசியம் போன்ற மெக்னீசியம் நிறைந்த பொருள்களைப் பயன்படுத்துங்கள். மண்ணில் அடங்கியுள்ள ஊட்டச்சத்தை சமன் செய்ய இயற்கை உரம், கரிம தழைக்கூளங்கள் அல்லது கூட்டுரங்களை (கம்போஸ்ட்) பயன்படுத்துங்கள். இவை மண்ணில் மெதுவாக வெளியேறக்கூடிய கரிம பொருட்களையும், பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

  • மெக்னீசியத்தைக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துங்கள்.
  • உதாரணம்: மெக்னீசியம் ஆக்சைட், மெக்னீசியல் சல்பேட்
  • உங்கள் மண் மற்றும் பயிருக்குத் தகுந்த ஊட்டச்சத்துக்களைப் பற்றி அறிய உங்கள் விவசாய அறிவுரையாளருடன் ஆலோசனை செய்யவும்.

பிற பரிந்துரைகள்:

  • அதிக மகசூலைப் பெற, பயிரிடும் காலத்திற்கு முன்பாக மண் பரிசோதனை செய்வது முழுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.
  • மெக்னீசியத்தினை நேரடியாக மண்ணிலோ அல்லது இலைவழித் தெளிப்பான்களாகவோ பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மெக்னீசியம் பற்றாக்குறை என்பது இலேசான, மணல் சார்ந்த பகுதியிலும், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்ட அமில மண்ணிலும் காணப்படும் பொதுவான பிரச்சனை ஆகும். இந்த நிலங்களில், ஊட்டச்சத்துக்கள் எளிதில் அகற்றப்படலாம். பொட்டாசியம் அல்லது அம்மோனியம் நிறைந்த மண்ணிலும், இந்தச் சத்துக்களை அதிகப்படியாக பயன்படுத்தும்போதும் சிக்கலாகலாம், ஏனென்றால் அவை மண்ணில் மெக்னீசியத்துடன் போட்டியிடும். மெக்னீசியம் சர்க்கரையைக் கொண்டு செல்வதில் ஈடுபடுகிறது. மேலும் அது பச்சைய மூலக்கூறுகளின் ஒரு முக்கிய பகுதியாகும். மெக்னீசியம் போதுமான அளவு இல்லையென்றால், தாவரங்கள் புதிதாக, வளரும் இலைகளுக்கு வழங்குவதற்காகப் பழைய இலைகளில் உள்ள பச்சைய மூலக்கூறுகளை சிதைக்கத் தொடங்கும். இது, நரம்புகளுக்கு இடையே பச்சைய சோகை தோன்றுவதை விளக்குகிறது. ஒளியின் தீவிரமும் அறிகுறிகளின் தோற்றத்தைப் பாதிக்கிறது. ஒளியின் மிகுதி, குறைபாட்டின் விளைவுகளை மோசமாக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • உகந்த வரம்பைப் பெற தேவைப்பட்டால் மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவையும், சுண்ணாம்பு சத்தினையும் சரிபாருங்கள்.
  • வயல்களில் நல்ல வடிகால் வசதியினை திட்டமிடுங்கள்.
  • பயிர்களுக்கு அதிக அளவில் நீரை வழங்க வேண்டாம்.
  • பொட்டாஷ் கொண்டு அதிகமாக உரமிட வேண்டாம்.
  • மண்ணின் ஈரப்பதம் நிலையாக இருக்கக் கரிம தழைக்கூளத்தைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க