சோயாமொச்சை

சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை (கால்சியம் பற்றாக்குறை)

Calcium Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும்.
  • இலைகள் சுருண்டுக்கொள்ளும்.
  • இளம் தளிர்கள் அல்லது தண்டுகள் மற்றும் பழங்களின் வளர்ச்சி குறையும்.
  • தாவரங்கள் வாடி, குன்றிய வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

59 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

சோயாமொச்சை

அறிகுறிகள்

புதிய தளிர்கள் மற்றும் இலைகள் போன்ற வேகமாக வளர்ந்து வரும் திசுக்களில்தான் முக்கியமாக அறிகுறிகள் காணப்படுகின்றன. இளம் தளிர்கள் வளர்ச்சி குறைந்து காணப்படுகின்றது, காலப்போக்கில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. துவக்கத்தில், புதிய அல்லது இடைநிலை இலைகளின் பாகங்களில், முறையற்ற சிதறிய வெளிறிய கறைகள் காணப்படுகின்றன. சரிசெய்யப் படவில்லையெனில், அவை கீழ்நோக்கியோ அல்லது மேல்நோக்கியோ சுருளத் தொடங்கி, அவற்றின் நுனிகள் படிப்படியாக ஒரு சிதைந்த, பொசுங்கிய தோற்றத்தைக் கொள்கின்றன. முதிர்ந்த, பழைய இலைகள் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை. வேர்களின் வளர்ச்சி குறைந்துவிடுகிறது. மேலும் பயிர்கள் வாடி, வளர்ச்சி குன்றி காணப்படுகின்றன. கடுமையான பற்றாக்குறையானால், பூக்கள் உதிர்ந்துவிடக் கூடும், புதிய இலைகளின் வளரும் இடங்கள் எரிந்த தோற்றத்தைப் பெறக்கூடும் அல்லது அப்படியே இறந்துவிடக்கூடும். பழங்கள் சிறியதாகவும், சுவையற்றதாகவும் இருக்கும். மேலும் வெள்ளரி, மிளகு, தக்காளி ஆகியவற்றின் மலரின் நுனியில் அழுகல் தோன்றலாம். விதைகளின் முளைக்கும் விகிதம் குறைந்துவிடுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிறிய விவசாயிகள் மற்றும் தோட்டக்காரர்கள், நொறுக்கிய முட்டை ஓடுகளை நன்கு பொடியாக அரைத்து, மென்மையான அமிலத்துடன் (வினிகர்) கலந்து உபயோகிக்கலாம். இல்லையென்றால், பாசி சுண்ணாம்பு, கருங்கல் மாவு, எரித்த சுண்ணாம்பு, டோலமைட், ஜிப்சம், மற்றும் கசட்டு சுண்ணாம்பு போன்ற கால்சியம் நிறைந்த பொருட்களை உபயோகிக்கலாம். ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை மண்ணில் மேம்படுத்துவதற்காக இயற்கை உரம் அல்லது கூட்டுரம் (கம்போஸ்ட்) போன்ற வடிவத்தில் கரிம பொருளைச் சேர்க்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

  • கால்சியம் கலந்திருக்கும் மண் உரங்களைப் பயன்படுத்தவும்.
  • உதாரணம் : கால்சியம் நைட்ரேட், சுண்ணாம்பு, ஜிப்சம்.
  • உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த பொருளை எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதை அறிய உங்கள் விவசாய அறிவுரையாளரை அணுகவும்.

பிற பரிந்துரைகள்:

  • உங்கள் பயிரின் உற்பத்தியினை திட்டமிட பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • முன்பே இருக்கும் கால்சிய குறைபாட்டை, முழுமையாகக் கரையக்கூடிய கால்சியம் நைட்ரேட் கொண்ட இலைவழித் தெளிப்பானை (ஃபோலியார் ஸ்ப்ரேஸ்) அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும்.
  • 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் கால்சியம் குளோரைடினை தெளிப்பானாக பயன்படுத்தக்கூடாது.
  • நிலத்தினை தயார்படுத்தும்போது, மண்ணின் pH அமிலத்தன்மையுடன் இருந்தால் சுண்ணாம்பினையும், pH காரத் தன்மையுடன் இருந்தால் ஜிப்சத்தினையும் பயன்படுத்தவும்.
  • பயிர் நடுவதற்கு இரண்டு முதல் நான்கு மாதங்கள் முன்பு வரை சுண்ணாம்பு கலப்பைச் செய்யலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மண்ணில் குறைந்த அளவு இருப்பதை விட, இந்த ஊட்டச்சத்து பயிர்களுக்கு கிடைக்கும் அளவைப் பொறுத்தே அறிகுறிகள் அமைகின்றன. தாவரங்களுக்குள் கால்சியம் நகரக் கூடியது இல்லை. இதன் உறிஞ்சும் தன்மை தாவரங்கள் தண்ணீரை உறிந்து எடுத்துச் செல்வதுடனும், கால்சியத்தை உட்கொள்வதுடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது. குறைபாட்டின் அறிகுறிகள் ஏன் புதிய இலைகளில் தோன்றுகின்றன என்பதை இது விளக்குகிறது. கனரக மண் மற்றும் பாசன மண் கால்சியத்தை கரைத்து, தாவரங்களுக்கு வழங்கும் திறன் கொண்டவை. ஆனால், தண்ணீரைக் குறைந்த அளவிலே தக்க வைத்துக்கொள்ளக் கூடிய மணல், வறட்சியால் பாதிக்கப்படக் கூடியது என்பதால், அதை உட்கொள்வது மட்டுப்படுத்தப்படுகிறது. நீர்ப் பாசனங்களுக்கு இடையே மண்ணைக் காயவிடுவதும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம். குறைந்த ஹைட்ரோஜன் அயனிச்செறிவு, உயர் உப்புத் தன்மை கொண்ட அல்லது அம்மோனியம் நிறைந்த மண் வகைகள் சிக்கலானவை. காற்றில் அதிக ஈரப்பதம், மண்ணில் நீர்த்தேக்கம் இருப்பது போன்றவையும் திசுக்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதை தாமதம் செய்கின்றன, எனவே குறைந்த அளவு கால்சியமே உட்கொள்ளப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • மண்ணில் இருந்து கால்சியத்தை சிறந்த முறையில் உறிஞ்சும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • 7.0 மற்றும் 8.5 க்கு இடையிலான உகந்த வரம்பிற்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் மண்ணின் ஹைட்ரோஜன் அயனிச்செறிவையும், சுண்ணாம்பு சத்துக்களையும் சோதித்துப்பார்த்து உறுதி செய்துக்கொள்ளவும்.
  • மண்ணில் போதுமான அளவு கால்சியம் கிடைக்காமல் போவதைத் தவிர்க்க அம்மோனியம் சார்ந்த உரங்கள் பயன்படுத்துவதை குறைக்கவும்.
  • பழங்கள் உருவாக ஆரம்பிக்கும்போது நைட்ரஜன் கொண்டு அதிகமாக உரமிடுவதைத் தவிர்க்கவும்.
  • தாவரங்களின் அருகே வேலை செய்யும்போது, வேர்களைச் சேதப்படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
  • அடிக்கடி நீர்ப்பாசனம் செய்யுங்கள், ஆனால் அதிக அளவில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டாம்.
  • இயற்கை உரம் அல்லது கரிம தழைக்கூளம் அல்லது கூட்டுரம்(கம்போஸ்ட்) போன்ற கறிமப் பொருட்களை மண்ணில் சேர்க்கவும்.
  • பச்சை தழைக்கூளம் (வைக்கோல், சிதைந்த மரத்தூள்) அல்லது பிளாஸ்டிக் தழைக்கூளம் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
  • வயலை அடிக்கடி கண்காணிக்கவும்.
  • அறிகுறிகளுடன் தோன்றும் பழங்களை நீக்கிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க