சோயாமொச்சை

சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை)

Potassium Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • ஓரங்களிலிருந்து தொடங்கி இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • முக்கிய நரம்புகள் அடர் பச்சை நிறத்திலேயே இருத்தல்.
  • சுருண்ட இலைகள்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

58 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

சோயாமொச்சை

அறிகுறிகள்

அறிகுறிகளை முக்கியமாக முற்றிய இலைகளில் காணலாம். அவை கடுமையான குறைபாடுகளின் போது மட்டுமே, இளம் இலைகளில் தோன்றுகின்றன. இலைகளின் விளிம்புகளிலும், நுனிகளிலும் இலேசான மஞ்சள் நிறம் தோன்றுவதும், பின்னர் தொடர்ந்து முனை எரிந்து விடுவதும், இலேசான பொட்டாசியம் குறைபாடின் இயல்பாகும். இலைப் பகுதி சற்றே பளபளப்பாக மாறும், ஆனால் முக்கிய நரம்புகள் கரும் பச்சை நிறத்திலேயே இருக்கின்றன (நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகை). சரிசெய்யப்படவில்லை என்றால், இந்த வெளிறிய பகுதிகள், பெரும்பாலும் இலை விளிம்பிலிருந்து மையப்பகுதி வரையிலும் உலர்ந்த, தோலின் பழுப்பு நிறத்தில் அல்லது கறும்பழுப்பு நிறத்தில், பொசுங்கிய ஒரு வடு போல் மாறிவிடும் (திசு இறப்பு). இருப்பினும், முக்கிய நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும். இலைகள் சுருண்டு, சுருங்கி, உரிய காலத்திற்கு முன்னரே விழுந்துவிடும். இளம் இலைகள் சிறிதாகவும், பொலிவற்றும், ஒரு கிண்ணத்தைப் போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கும். பொட்டாசியம் குறைபாடுள்ள தாவரங்கள் வளர்ச்சி குன்றியும், நோய்களாலும் மற்றும் வறட்சி, பனி போன்ற பிற அழுத்தங்களாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில், பழங்கள் கடுமையாக உருச்சிதைந்து போய்விடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது மண்ணுக்குச் சாம்பல் அல்லது தாவர தழைக்கூளத்தின் வடிவில் கரிமப்பொருட்களை சேர்க்கவும். மரச் சாம்பலிலும் அதிகமாக பொட்டாசியம் உள்ளடங்கி உள்ளது. அமில மண்ணில் சுண்ணாம்பு கலப்பதால், சத்துக்கள் கறைந்து போவதை குறைத்து, சில மண்ணில் பொட்டாசியம் தக்கவைப்பை அதிகரிக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

-பொட்டாசியம் அடங்கிய உரங்களைப் பயன்படுத்தவும்.

  • உதாரணம்: முரியேட் ஆஃப் பொட்டாஷ் (MOP), பொட்டாசியம் நைட்ரேட் (KNO3).
  • உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்கு தகுந்தாற்போல் சிறந்த பொருளை எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதை அறிய உங்கள் விவசாய அறிவுரையாளரை அணுகவும்.

பிற பரிந்துரைகள்:

  • உங்கள் பயிரின் உற்பத்தியினை திட்டமிட பயிரிடும் முன்பு மண் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • பொட்டாசியத்தை வயல்களை தயார் செய்யும்போது அடிப்படை உரங்களாகவும், பூக்கும்போது இரண்டாவது பிரிவாகவும் சேர்க்க வேண்டும்.
  • இலைத்திரள் தெளிப்பான்களாக பொட்டாசியத்தினைப் பயன்படுத்துவதை விட மண்ணில் உரங்களாகப் பயன்படுத்தினால் பயிர்கள் சிறப்பாக பொட்டாசியத்தினைக் கிரகித்துக்கொள்ளும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண்ணில் குறைந்த அளவு பொட்டாசியம் இருப்பது அல்லது தாவரத்திற்கு குறைவான அளவு கிடைப்பது போன்ற காரணங்களால் குறைபாடுகள் ஏற்படலாம். குறைவான ஹைட்ரஜன் அயனிச்செறிவு கொண்ட நிலம், குறைந்த கரிமங்களைக் கொண்ட இலேசான அல்லது மணல் சார்ந்த நிலம், போன்றவை ஊட்டச்சத்து பற்றாக்குறை, வறட்சி போன்றவற்றால் எளிதாகப் பாதிக்கப்பட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதிக நீர்ப்பாசனமும், அதிக மழையும் வேர் மண்டலத்திலிருந்து ஊட்டச்சத்துக்களைக் கழுவி அகற்றி, குறைபாட்டை ஏற்படுத்தலாம். சூடான வெப்பநிலை அல்லது வறட்சி நிலைகள் தாவரங்களுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வந்து சேர்வதை தடுக்கின்றன. அதிகளவில் இருக்கும் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்களும் கூட பொட்டாசியத்தோடு போட்டி போடலாம். நீர் போக்குவரத்து, திசுக்களின் உறுதிப்பாடு மற்றும் வளிமண்டலத்தோடு வாயுக்கள் பரிமாற்றம் ஆகியவற்றில் பொட்டாசியம் முக்கிய பங்கை வகிக்கிறது. பொட்டாசியம் பின்னர் தாவரங்களுக்கு சேர்க்கப்பட்டாலும் கூட, பொட்டாசிய குறைபாட்டின் அறிகுறிகளை மாற்ற முடியாது.


தடுப்பு முறைகள்

  • அதிக அமிலம் அல்லது காரத் தன்மை கொண்ட மண், பெரும்பாலும் பெரிய அளவிலோ, சிறிய அளவிலோ தனிம குறைபாடுகளை ஏற்படுத்தும்.
  • உகந்த வரம்பைப் பெறுவதற்கு தேவைப்பட்டால் மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மற்றும் சுண்ணாம்பு சத்தினை சரிபாருங்கள்.
  • பொட்டாசியத்தை உறிஞ்சிக் கொள்ளும் திறன் கொண்ட வகைகளைப் பயிரிடவும்.
  • தாவரத்திற்குச் சரியான ஊட்டச்சத்துக்களை வழங்க உரங்களை சீரான முறையில் பயன்படுத்தவும்.
  • உரம் அல்லது தாவர தழைக்கூளத்தின் வடிவில் மண்ணில் கரிமப் பொருளைச் சேர்க்கவும்.
  • தாவரங்களுக்கு முறையாக நீர்ப்பாசனம் செய்யவும், மேலும் அதிக நீர்த் தேக்கத்தை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க