முலாம்பழம்

அரும்பின் அடி அழுகல் நோய்

Calcium Deficiency Rot

குறைப்பாடு

சுருக்கமாக

  • பழுப்பு அல்லது சாம்பல் நிற கறை இளம் கனிகளுக்குக் கீழே காணப்படும்.
  • கனிகளில் உள்புற அழுகல் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


முலாம்பழம்

அறிகுறிகள்

அழுகல் நோயினை பழங்களின் நுனியில் தோன்றும் ஒழுங்கற்ற திட்டுக்கள் இருப்பதன் மூலம் அறியலாம். இந்த திட்டுக்கள் அளவு மற்றும் நிறத்தில் மாறுபடுகின்றன. தொடக்கத்தில் இது வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். கனிகள் முதிரும்போது பழுப்பு மற்றும் கருப்பு நிறமாக இந்த திட்டுக்கள் மாறும். கனிகளில் உள்ள திசுக்கள் நிலைத்தன்மையை இழந்து, பள்ளம் போன்று ஏற்படும் மற்றும் ஓரங்கள் தட்டையான தோற்றத்துடன் காணப்படும். பழங்களில் உட்புற கரு நிற அழுகல் சிறிய அறிகுறிகளோடு அல்லது வெளிப்புற அறிகுறிகளன்றி ஏற்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கால்சியம் சத்து அதிகமுள்ள பொருட்களான சுண்ணாம்பு பாசி, சுட்ட சுண்ணாம்பு, ஜிப்சம், டோலோமைட், கருங்கல் மாவு மற்றும் கசடு சுண்ணாம்பு போன்றவற்றினை மண்ணில் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கால்சியம் குளோரைடினை இலை தொகுதி தெளிப்பானாக அவசர கால நடவடிக்கையாக பயன்படுத்தலாம். ஆனால் இதே முறையினை அளவுக்கு அதிகமாகவும் அல்லது அடிக்கடியும் பயன்படுத்தக் கூடாது.

இது எதனால் ஏற்படுகிறது

கனிகளின் திசுக்களில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதன் காரணமாக உருவாவது அழுகல் நோய் என்னும் உடலியல் கோளாறு ஆகும். இதற்கு பூச்சிகளோ, நோய்க் கிருமிகளோ காரணம் அல்ல. கால்சியம் சத்து, திசுக்களின் பலம் மற்றும் உறுதியினை ஊக்குவிக்கும். மண்ணில் கால்சியம் சத்து இல்லாதது அல்லது தாவரத்தினால் கால்சியத்தினை உறிஞ்ச இயலாமை, அதை கனிகளுக்கு கொண்டு செல்ல இயலாமை ஆகிய காரணங்களினால் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படலாம். இதன் காரணமாக திசுக்களின் அமைப்பு அழியும், இதன் விளைவாக, இருண்ட, மூழ்கிய பகுதிகள் ஏற்படும். ஒழுங்கற்ற நீர்ப்பாசனம் அல்லது வேர்களில் பாதிப்பு போன்ற காரணத்தினால் கூட கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.


தடுப்பு முறைகள்

  • மண்ணின் ஹைட்ரஜன் அயனிச் செறிவினை சரிபடுத்தவும், உதாரணமாக சுண்ணாம்பினை சேர்த்தல்.
  • மண்ணின் ஈரப்பதத்தினை பாதுகாக்க தழைக்கூளங்கள் பயன்படுத்தவும்.
  • ஆழ்ந்த சாகுபடி செயல்களால் வேர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும்.
  • தழைச்சத்து குறைவாக உள்ள மற்றும் கால்சியம் அதிகப்படியாக உள்ள உரமிடுதலை உறுதிப்படுத்தவும்.
  • வறட்சி காலங்களில் சரியான நீர் பாசனத்தினை அளிக்கவும்.
  • அதிகப்படியான நீர் பாசனத்தினைத் தவிர்த்து வயல்களில் நல்ல வடிகாலினை அமைக்கவும்.
  • அம்மோனியம் வடிவிலான தழைச்சத்துக்களை அளிப்பதற்குப் பதிலாக நைட்ரேட் வடிவிலான தழைச்சத்துக்களை பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க