Coridius janus
பூச்சி
துர்நாற்றப் பூச்சிகள், இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் என இரண்டும், தாவரச் சாற்றை உறிஞ்சுவதன் மூலம் பயிர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவை எந்தப் பகுதியை உண்ணுகின்றன என்பதைப் பொறுத்து இவை இலைகளில் மஞ்சள் நிறத்தையும், தண்டுகள் மற்றும் பழங்களில் சிறிய மூழ்கிய பகுதிகளையும் ஏற்படுத்தும். தாவரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் எதிர்மறையாக பாதிக்கப்படும். விளைச்சல் குறையும். துர்நாற்றப் பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது இவை சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்கும் புதிய, நுட்பமான வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
பூச்சியானது இயற்கையான எதிரிகளைக் கொண்டுள்ளது, ஆனால் இது வெளியிடும் வலுவான துர்நாற்றம் வேட்டையாடும் பூச்சிகளுக்கு எதிராக வலுவான பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. அத்தியாவசிய எண்ணெய் கலவைகளின் தயாரிப்புகளை இயற்கை பைரெத்ரின்களுடன் சேர்த்து தெளிக்கவும் அல்லது வேப்ப எண்ணெயை தெளிக்கவும். இரசாயனக் கட்டுப்பாட்டு பிரிவில் குறிப்பிடப்பட்டிற்கும் அதே கொள்கைகளை மனதில் கொள்ளுங்கள். உங்கள் பயிர்களில் அறிகுறிகளைக் கண்டறியும்போது, ஏதேனும் பூச்சிகளை மற்றும் முட்டைகளை அகற்றும்போது இந்த தெளிப்பு முறையையும் சேர்த்து பயன்படுத்தவும்.
சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பெரிய தொற்று ஏற்பட்டால், உங்கள் பகுதியில் இத்தகையப் பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படும் தொடர்பு பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவும். முதிர்ந்த பூசிகள் சுறுசுறுப்பாக இருக்கும் காலை வேளையில் தெளிக்கவும், மேலும் தெளிப்புகளை வேர்கள் மற்றும் இலைகளின் அடிப்பகுதியை நோக்கி தெளிக்கவும். நீங்கள் இலைத் தழைக்கூளம் பயன்படுத்தினால், மறைந்திருக்கும் இடங்களிலிருந்து பூச்சிகளை வெளியேற்ற உங்கள் இலைத் தழைக்கூளம் மீது தண்ணீரைத் தெளித்து, அவற்றின் மேல் இந்த தெளிப்புகளைத் தெளிக்கவும்.
கொரிடியஸ் ஜானஸ் என்ற துர்நாற்றப் பூச்சியால் இந்த நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பூச்சி முக்கியமாக வெள்ளரி செடிகளில் காணப்படுகிறது. பூச்சிகள் தாவர குப்பைகள் மற்றும் களைகளுக்கு இடையில் முதிர்ந்த பூச்சிகளாக குளிர்காலத்தைக் கடந்து செல்கின்றன. ஒவ்வொரு பெண் பூச்சியும் 100 முட்டைகள் வரை இலைகள், தண்டுகள் அல்லது புரவலன் தாவரங்களின் பிற பகுதிகளில் இடும். முதிர்ந்த பூச்சிகள் பறக்காது. முதிர்ந்த பூச்சி கருப்பு நிறத்தில் தலை, ஆரஞ்சு நிறத்தில் உடல் மற்றும் கருப்பு இறக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பூச்சிகள் இலை தழைக்கூளத்தில் மறைந்து கொள்ள விரும்புகின்றன. இவை காலையிலும் மாலையிலும் சுறுசுறுப்பாக இருக்கும், ஆனால் பகலில், இவை இலைகளின் கீழ் தஞ்சம் அடைந்துகொள்ளும்.