அரிசி

காய் வண்டு

Riptortus pedestris

பூச்சி

சுருக்கமாக

  • பழுப்பு நிறத்தில் நடுத்தர அளவிலான தாவரத் தத்துப்பூச்சியைக் காணலாம்.
  • பச்சை நிற காய்கள் உதிரும்.
  • கரும்புள்ளிகளுடன் காய்கள் சரியாக நிரம்பியிருக்காது மற்றும் உட்புறம் தானியங்கள் சுருங்கியிருக்கும்.


அரிசி

அறிகுறிகள்

காய்களில் பூச்சிகள் கூட்டமாகக் காணப்படும். இவை பழுப்பு அல்லது வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் பச்சைக் காய்களில் இருந்து பழுக்காத விதைகளின் சாற்றை உறிஞ்சும். தாக்கப்பட்ட காய்கள் சுருங்கி மஞ்சள் திட்டுகளுடன் தென்படும் மற்றும் சிறிய விதைகளுடன் பழுப்பு நிற உண்ணும் வடுக்கள் காணப்படும். தாக்குதல் கடுமையாக இருந்தால், செடியின் மென்மையான பாகங்கள் சுருங்கி இறுதியில் காய்ந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நீர் மற்றும் எண்ணெய் ஊற்றிய ஒரு பாத்திரத்தில் பூச்சிகளைக் கைமுரையாகச் சேகரிக்கவும். பூக்கும் மற்றும் காய்கள் உருவாகும்போது, ​​சிறிய பகுதிகளில் உள்ள பூச்சிகளை கையால் சேகரித்து அழிக்கலாம். கருப்பு சோப்பு மற்றும் மண்ணெண்ணெய் கலவையைப் பயன்படுத்துங்கள்: 170 கிராம் கருப்பு சோப்பை 150 மில்லி தண்ணீரில் கரைக்கவும். சோப்பு/மண்ணெண்ணெய் கலவையின் அடர்த்தியான செறிவை உருவாக்க 1 லிட்டர் மண்ணெண்ணையில் இதைக் கரைக்கவும். 400 மில்லி கலவையை 5 லிட்டர் தண்ணீரில் கரைக்கவும். காய்கள் வளர்ந்த பிறகு வார இடைவெளியில் தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

டைமெத்தோயேட், மெத்தில் டெமெட்டான், இமிடாகுளோபிரிட் அல்லது தியாமெத்தாக்சம் ஆகியவை தெளிக்கக்கூடிய திறன் வாய்ந்த பூச்சிக்கொல்லிகளாக இருக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

காய் வண்டுக்கு வெயில் காலம் மற்றும் அதிக ஈரப்பதம் கொண்ட சூழல் உகந்ததாக இருக்கிறது. இதுபோன்ற வானிலைக்குப் பிறகு, நீங்கள் நோய்த்தொற்றைக் காணலாம். தாவர தத்துப்பூச்சி பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும், நீண்ட கால்களுடன் நீளமானதாகவும் குறுகியதாகவும் இருக்கும் . இளைய பூச்சிகள் மென்மையாக இருக்கும், கிரீமி மஞ்சள் நிறமாகவும், பின்னர் பச்சை கலநத பழுப்பு நிறமாகவும் மாறும். பின்னர் அடர் பழுப்பு நிற எறும்புகளைப் போன்றிருக்கும். முதிர்ந்த பூச்சிகள் பழுப்பு நிறமாகவும், மெல்லியதாகவும், விரைவாக பறக்கக்கூடியதாகவும், குதிக்கக்கூடியதாகவும் இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட சாகுபடி வகைகளைப் பயிர் செய்யவும்.
  • கடுமையான தொற்று நிலவும் காலங்களைத் தவிர்க்க முன்கூட்டியே நடவு செய்யுங்கள்.
  • வண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க சோளம் அல்லது பச்சைப்பயறை ஊடுபயிராகப் பயிரிடவும்.
  • மக்காச்சோளத்தை ஊடுபயிர் செய்ய வேண்டாம்.
  • நடவு செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு தாவரங்களைக் கண்காணிக்கவும்.
  • பயிர்களைத் தவறாமல் பரிசோதிக்கவும், குறிப்பாக பூச்சிகள் சுறுசுறுப்பாக இருக்கும் காலை நேரங்களில் பரிசோதிக்கவும்.
  • மீதமுள்ள பயிர் குப்பைகளில் பூச்சிகள் உயிர்வாழ்வதைத் தடுக்க பழைய தாவரத்தின் தண்டுகளைச் சுத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க