Megacopta cribraria
பூச்சி
கருமையான புள்ளிகளுடன் சிறிய, நீள்வட்ட வடிவ, வெளிர் பழுப்பு நிற பூச்சிகளைக் காண்பீர்கள். தண்டுகளில் வண்டுகள் கூடியுள்ளனவா எனச் சரிபார்க்கவும். தாவரத் தண்டுகளில் வண்டுகள் உண்பதும், ஒன்றுதிரண்டு இருப்பதும் அதிகமாக இருக்கும். ஒழுங்கற்ற காய் வளர்ச்சி மற்றும் இலைகளில் சிதைந்த புள்ளிகள் உள்ளதா என தாவரங்களைப் பரிசோதிக்கவும். காய்கள் சரியாக வளராது, விதைகள் சிறியதாகவும் கனமில்லாமலும் இருக்கும், ஒவ்வொரு காயிலும் குறைவான விதைகள் இருக்கும். பூச்சிகள் தாவரங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, இலைகள் மற்றும் தண்டுகளை வாடச் செய்யும். தாவரங்களில் உள்ள கருமையான, இறந்த புள்ளிகள், பூச்சிகள் தாவரத்தின் ஊட்டச்சத்துக்களை துளைத்து உறிஞ்சும் இடத்தைக் காட்டுகின்றன. முதிர்ந்த பூச்சிகள் தண்டுகளை உண்கின்றன, சிறிய தலைமுறை பூச்சிகள் இலை நரம்புகளை உண்கின்றன. அவற்றைத் தொந்தரவு செய்யும்போது அல்லது நசுக்கும்போது அவை வெளியிடும் வாசனையைக் கவனியுங்கள். குட்ஸூ வண்டுகள் இலைகளில் ஒட்டும், சர்க்கரைப்பாகு மாதிரியான திரவத்தை விட்டுச் செல்கின்றன. இந்தத் திரவமானது ஒரு வகை பூஞ்சைக்கு உணவாக இருக்கிறது, இது இலைகளில் கருப்பு நிற பூச்சுகளை உருவாக்கி, சூரிய ஒளியைத் தடுக்கிறது மற்றும் ஒளிச்சேர்க்கைக்கு இடையூறு விளைவிக்கிறது.
பவேரியா பாஸியானா குட்ஸூ வண்டுகளைப் பாதிக்கும் ஒரு பூஞ்சை ஆகும், மேலும் இது இந்த நோய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்த உதவும். இது இயற்கையாக நிகழ்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்: பாதிக்கப்பட்ட பழுப்பு நிற குட்ஸூ வண்டுகள் வெள்ளை நிறத்தில், நுரையுடைய பூஞ்சைப் பூச்சைக் கொண்டிருக்கும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பெரிய வண்டுகள் மீது தெளிப்பு பயனுள்ளதாக இருக்காது: இளைய தலைமுறை வண்டுகள் மீது தெளிக்க வேண்டும். பருவத்தின் ஆரம்பத்தில் ஒரு செடிக்கு 5 முதிர்ந்த வண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது மட்டும் தெளிக்கவும். முதிர்ந்த வண்டுகள் குடியேறட்டும், இளம் தலைமுறை வண்டுகள் முட்டையிலிருந்து வெளியே வரும்போது தெளிக்கவும். பயனுள்ள பூச்சிக்கொல்லிகளில் பைரெத்ராய்டுகள் (β-சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின், சுமிசிடின்) மற்றும் ஆர்கனோபாஸ்பேட்டுகள் ஆகியவை அடங்கும். இமிடாக்ளோபிரிட் மருந்தும் பூச்சி தாக்குதலைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. காய்கள் உருவாகும் தொடக்கத்தில் பரிந்துரைக்கப்படும் தெளிப்பு வண்டுகளின் எண்ணிக்கையை நிர்வகிக்கலாம் மற்றும் தேவையான பயன்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். நன்மை பயக்கும் பூஞ்சையான பவவேரியா பாஸியானா பூச்சிகளின் குறைக்க பயனுள்ளதாக இருக்கலாம் என்றாலும் தெளிப்பதற்கு முன் கவனமாகப் பாருங்கள். அது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்!
வண்டுகள் இலைக் குப்பைகளிலோ அல்லது மரத்தின் பட்டைகளிலோ குளிர்காலத்தைக் கழிக்கும். பெண் வண்டுகள் தங்கள் நீளமான முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் இடும். இந்த முட்டைகளில் இருந்து குஞ்சு பொரிக்கும் இளம் தலைமுறை வண்டுகள் முதிர்ந்த பூச்சிகளைப் போன்ற உடல் வடிவத்தைக் கொண்டுள்ளன. இவை வயல் ஓரங்களில் தொடங்கி உள்நோக்கிப் பரவும். குறைந்த வெப்பநிலையில் மற்றும் நாளின் நீளம் குறைகையில், இவை கூடுகளில் ஒளிந்துகொண்டு குளிர்காலத்தைக் கழிக்கின்றன, மேலும் அடுத்த கோடையில் சூடான வெப்பநிலை நிலவும்போது பயிர்களில் புதிய வாழ்க்கைச் சுழற்சியைத் தொடங்குகின்றன.