அரிசி

தென்பகுதி பச்சை நிற துர்நாற்றப் பூச்சி

Nezara viridula

பூச்சி

சுருக்கமாக

  • உலர்ந்த மற்றும் சுருங்கிய தளிர்கள் காணப்படும்.
  • பழங்கள் சரியாக வளர்ச்சி அடையாமல் இருக்கும், கீழே கொட்டியும் விடலாம்.
  • பூக்கள் உதிர்ந்து போகலாம்.
  • பழங்களில் கருப்பு நிறத்தில் கடினமான புள்ளிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

12 பயிர்கள்
விதையவரை
பாகற்காய்
கத்திரிக்காய்
கொய்யா
மேலும்

அரிசி

அறிகுறிகள்

பூச்சிகள் பெரும்பாலும் பழங்கள் மற்றும் வளரும் தளிர்களை உண்ணுகின்றன. வளரும் தளிர்கள் உலர்ந்து மீண்டும் கீழே சாயும். பூச்சிகள் பழங்களை உண்பதால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பழங்கள் முழுவதுமாக வளர்ச்சி அடையாமல், அதன் வடிவம் மாறலாம், கீழே உதிர்ந்தும் விடலாம். பல சமயங்களில் பூச்சிகள் பழங்களை உண்பதால் பழத்தின் மேற்பரப்பில் கருப்பு நிறத்தில் கடினமான புள்ளிகள் தோன்றும். பூ மொட்டுகளை பூச்சிகள் உண்பதால் பூ உதிரக்கூடும். பழத்தின் சுவை பாதிக்கப்படலாம். பழத்தில் பூச்சி உண்ட இடங்கள் வழியாக நோய்க்கிருமிகள் உள்ளே நுழைந்து அதிகப்படியான சேதம் ஏற்படலாம். இலைகளின் அடிப்பகுதியில் இப்பூச்சியின் முட்டை கொத்துக்கள் இருப்பதை நீங்கள் காணலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

முட்டை ஒட்டுண்ணியான டிரிசோல்கஸ் பாசலிஸ் மற்றும் டச்சினிட் ஈக்களான டச்சினஸ் பென்னிப்ஸ் மற்றும் டிரைக்கோபோடா பைலிப்ஸ் ஆகியவை இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்த வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் பொதுவாக தேவையில்லை/தேவையிருக்காது, இருப்பினும் துர்நாற்றம் வீசும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தெளிப்புகள் தேவைப்படலாம். இந்தப் பூச்சியை கார்பமேட் மற்றும் ஆர்கனோபாஸ்பேட் கலவைகள் மூலம் வேதியியல் முறையில் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், இந்தக் கலவைகளில் பெரும்பாலானவை சிகிச்சையளிக்கப்பட்ட தாவரத்தில் நீண்ட காலம் நீடிக்காததால், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பயிர் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பூச்சி செயலில் இருக்கும் பொது மற்றும் இலைத்திரள்களுக்குள் மறைந்து கொள்ளாமல் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டின் செயல்திறனை மேம்படுத்தலாம். எனவே, பூச்சிக்கொல்லிகள் அவற்றின் மீது நேரடியாகப்படக்கூடும். துர்நாற்றம் வீசும் பூச்சி அதிகாலை மற்றும் பிற்பகல் வேளைகளில் தாவரங்களை உண்ணுவதைக் காணலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

உலகம் முழுவதும், குறிப்பாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் நெசரா விரிடுலா என்ற பூச்சியால் இந்தச் சேதம் ஏற்படுகிறது. இவை "துர்நாற்ற வண்டுகள்" என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் இவை அச்சுறுத்தலாக உணரும்போது கடுமையான துர்நாற்றத்தை வெளியிடுகின்றன. பூச்சிகள் அவற்றின் மெல்லிய துளையிடும் வாய் பகுதிகளால் (கொடுக்குகள்) பயிரைத் துளைத்து உண்ணுகின்றன. பூச்சிகளின் உண்ணும் துளைகள் உடனடியாகத் தெரியாது. முதிர்ந்த மற்றும் இளம் பருவ பூச்சிகள் இரண்டும் தாவரங்களை உண்ணும். அவை தாவரத்தின் மென்மையான பகுதிகளை (வளரும் தளிர், பழம், பூ) உண்ண விரும்பும். அது குஞ்சு பொரிக்கும் போது, இளம்பருவ பூச்சி முட்டைகளுக்கு அருகில் இருக்கும். முதிர்ந்த பூச்சிகள் பறந்து சென்று, அதிகம் சுற்றித் திரியும். இவை பொதுவாக பச்சை நிறத்தில் இருப்பதால் தாவரங்களில் இவற்றை அடையாளம் காண்பது கடினம். பூச்சியின் நிறம் அவை வளருகையில் மாற்றமடைந்து, ஒவ்வொரு கட்டத்திலும் இன்னும் பசுமையாக மாறும். பொதுவாக இவை அதிகாலையில் தாவரங்களின் உயரமான பகுதிகளுக்குச் செல்லும்.


தடுப்பு முறைகள்

  • இலைக் குப்பைகளை அகற்றவும்.
  • உங்கள் வயலில் உள்ள களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும்.
  • சீக்கிரமாகவும், பெரிய வரிசை அகலத்துடனும் பயிர்களை நடவு செய்யவும்.
  • பயிறு வகைகள் மற்றும் முட்டைக்கோசு வகை தாவரங்கள் போன்ற சீக்கிரம் முதிர்ச்சியடையும் பொறிப் பயிர்களை நடவு செய்யவும், ஏனெனில் இவை பூச்சிகளைக் கவரும்.
  • தென்பகுதி பச்சை நிற துர்நாற்றப் பூச்சிகள் வளர்ந்து, பிரதான பயிருக்குச் செல்வதற்கு முன் பொறிப் பயிரை உழவு செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க