புகையிலை

புகையிலையின் கொம்புப்புழு

Manduca sexta

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளின் வெளிப்புறத்தில் உண்ணும் துளைகள் காணப்படும்.
  • இலைகள் காணாமல் போகும்.
  • அடர் நிற எச்சங்கள், கம்பளிப்பூச்சிகளின் இருப்பு காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


புகையிலை

அறிகுறிகள்

கம்பளிப்பூச்சிகள் இளம் இலைகள் மற்றும் வளரும் தளிர்களை உண்டு, கண்ணில் புலப்படும் துளைகளையும் வெளிப்புற சேதத்தையும் உருவாக்குகின்றன. அவற்றின் இருப்பை இலைகளில் அடர் நிற எச்சங்கள் மூலம் அறியலாம். நீங்கள் தாவரத்தை உன்னிப்பாக ஆய்வு செய்தால், பச்சை அல்லது பழுப்பு நிற கம்பளிப்பூச்சிகளை நீங்கள் காணலாம். கம்பளிப்பூச்சிகள் புகையிலைச் செடியின் அனைத்து இலைகளையும் உண்டு, தண்டு மற்றும் முக்கிய நரம்புகளை மட்டுமே விட்டுவைக்கக்கூடும் பரவலான நோய்த்தொற்றுகளின்போது, ​​முழு வயல்களையும் முழுவதுமாக உதிர்த்து விடலாம். தக்காளிச் செடிகளில், கடுமையான தொற்றுநோய்களின்போது, கம்பளிப்பூச்சிகள் வளரும் பழங்களை உண்பதால், பழங்களில் பெரிய, திறந்த வடுக்களை காண இயலும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

லேபிள் மற்றும் உள்ளூர் வழிகாட்டுதல்களின்படி பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) தயாரிப்புகளைப் பயன்படுத்தவும். Bt என்பது ஒரு பாக்டீரியாவாகும், இது கம்பளிப்பூச்சி இதனை உட்கொள்ளும்போது கொன்றுவிடும், மேலும் இயற்கை விவசாயத்திற்குப் பாதுகாப்பானது. கூடுதலாக, பறவைகள், சிறிய பாலூட்டிகள், கரும்புள்ளி வண்டுகள், கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணி குளவிகள் போன்ற இயற்கை வேட்டையாடும் பூச்சிகள் கொம்புப் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகின்றன. உங்கள் செடிகளில் புகையிலை கொம்புப் புழுக்கள் காணப்பட்டால், கையுறைகளை அணிந்துகொண்டு, அவற்றைக் கையால் அகற்றி, அவற்றைக் கொல்வதற்கு சோப்புத் தண்ணீர் உள்ள ஒரு வாளியில் வைக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

புகையிலை கொம்புப் புழு மற்றும் பிற கம்பளிப்பூச்சிகளை நிர்வகிப்பதற்கு பல இரசாயன பூச்சிக்கொல்லிகள் உள்ளன. மாலத்தியான், டயஸினான், கார்பரில் மற்றும் ஃபெனிட்ரோதியான் ஆகியவை பூச்சிகளின் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைக் குறிவைக்கும் பூச்சிக்கொல்லிகள் ஆகும், ஆனால் இவை குறிப்பாக தீவிரமாக உண்ணும் கம்பளிப்பூச்சிக்கு எதிராக செயல்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் அல்லது ஏதேனும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, ​​கண் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புப் பொருட்களை அணிவது மற்றும் லேபிளில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம். நாட்டிற்கு ஏற்ப விதிமுறைகள் மாறுபடும், எனவே உங்கள் பகுதிக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும். இது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் வெற்றிகரமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் பூச்சிகளால் ஏற்படுகின்றன. இந்தப் பூச்சிகள் சொலனேசியஸ் தாவரங்களை மட்டுமே உண்கின்றன, இவை பொதுவாக புகையிலை மற்றும் தக்காளிகளில் காணப்படுகின்றன. கம்பளிப்பூச்சி வயது வந்தவரின் ஆள்காட்டி விரலின் நீளத்திற்கு வளரக்கூடியதாக இருக்கும் மற்றும் அதன் உடலின் முடிவில் சிவப்பு அல்லது கருப்பு "கொம்பு" இருக்கும். கம்பளிப்பூச்சி பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும், ஆனால் பழுப்பு நிறமாகவும் இருக்கலாம் மற்றும் அதன் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு மூலைவிட்ட வெள்ளை கோடுகளைக் கொண்டிருக்கும் மற்றும் அதன் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் நீல மற்றும் கருப்பு கலந்த கண் புள்ளியும் இருக்கும். பெண் புகையிலை கொம்புப்புழு அந்துப்பூச்சி தன் முட்டைகளை புரவலன் செடியின் இலைகளில் இடும். கம்பளிப்பூச்சிகள் ஏற்கனவே சாப்பிட்ட தாவரங்களில் இவை பொதுவாக முட்டையிடாது. முட்டை குஞ்சு பொரித்து, கம்பளிப்பூச்சி தாவரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை உண்ணும். கம்பளிப்பூச்சி அதன் தோலை செயலற்று இருக்கும் கட்டம் வரையில் பல முறை உரிக்கும், செயலற்று இருக்கும் கட்டத்தின்போது கம்பளிப்பூச்சி வயது வந்த அந்துப்பூச்சியாக மாறும். செயலற்று இருக்கும் கட்டமானது நிலத்திற்கு அடியில் அல்லது இலைக் குப்பைக்கு அடியில் ஆழமாக காணப்படும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கப்பெற்றால், எதிர்ப்புத் திறன் கொண்ட புகையிலைப் பயிர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தாமதமாக நடவு செய்ய வேண்டாம்; இது உங்கள் இளம் தாவரங்களை மற்ற வயல்களில் இருக்கும் பூச்சிகளுக்கு வெளிப்படுத்தலாம்.
  • சரியான அளவு நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்தி, அதிகப்படியாக பயன்படுத்துவதைத் தவிர்த்து, நோய்ப்பூச்சிகளை ஊக்குவிக்காமல் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கவும்.
  • உங்கள் பயிரில் ஏதேனும் நோய்த்தொற்று அல்லது ஆரோக்கியப் பிரச்சனைகள் உள்ளதா எனப் பார்க்கவும், குறிப்பாக இளம் இலைகள் மற்றும் தளிர்களில் இருக்கிறதா எனப் பார்க்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்க மண்ணில் உள்ள பூச்சிகளை நிர்வகிக்கவும்: புகையிலைச் செடிகளின் இரண்டாம் நிலைத் தண்டுகளை வெட்டி, அவற்றை வயலுக்கு வெளியே அப்புறப்படுத்தி, பின்னர் உழவு செய்யவும்.
  • வயலை சுத்தமாக வைத்திருக்க அறுவடை செய்த பின் தண்டுகளை விரைவாக அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க