Daktulosphaira vitifoliae
பூச்சி
டக்துலோஸ்பைரா விட்டிஃபோலியே இரண்டு கட்டி உற்பத்தி செய்யும் நிலைகளைக் கொண்டுள்ளது; ஒன்று இலையில் கட்டி உற்பத்தி செய்யும் நிலை, இன்னொன்று வேரில் கட்டி உற்பத்தி செய்யும் நிலை. இலையின் கீழ்ப்பரப்பில் சிறிய கட்டிகள் உற்பத்தி செய்யப்படும். கட்டியின் அளவு அரை பட்டாணி அளவு இருக்கும். சில நேரங்களில், முழு இலையும் கட்டிகளால் மூடப்பட்டிருக்கும். திராட்சை உற்பத்தியில் இலையில் ஏற்படும் கட்டி பொதுவாக குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், கடுமையான தொற்றுநோய்கள் பருவத்தின் பிற்பகுதியில் பாதிக்கப்பட்ட இலைகளின் கணிசமான சிதைவு மற்றும் உதிர்வை ஏற்படுத்துகின்றன. சில நாடுகளில் ஃபைலோக்செராவின் கட்டி வடிவங்கள் இலையில் அரிதாகவே காணப்படுகின்றன. வேர்களில் கட்டி உற்பத்தி செய்யப்படாமல் இலையில் கட்டி வடிவங்கள் உற்பத்தி செய்யப்படாது என்பதை நினைவில் கொள்க. மறுபுறம், வேர்களின் தொற்று கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருக்கலாம், மேலும் வேர் வீக்கம், கொடிகள் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். வேர் மண்டலத்தின் சிதைவு இரண்டாம் நிலை பூஞ்சை தொற்றுநோயை ஏற்படுத்தும். கடுமையான வேர் தொற்றுக்கள் இலையுதிர்வை உண்டாக்கி, தளிர் வளர்ச்சியைக் குறைக்கும். 3 - 10 ஆண்டுகளுக்குள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கட்டிகள் பட்டுப்போகலாம். பொதுவாக, 10 ஆண்டுக்கு மேற்பட்ட வீரியமுள்ள கொடிகளில் அறிகுறிகள் குறைவாகவே இருக்கும்.
திராட்சை பைலோக்ஸெராவின் உயிரியல் கட்டுப்பாடு பற்றி சிறியளவு தகவல்களே உள்ளன; இயற்கை எதிரி பூச்சிகளை விட சுற்றுச்சூழல் மற்றும் வேர் நிலைமைகள் முக்கியம்.
வேதியியல் கருவிகளுடன் பைலோக்ஸெராவுக்கு சிகிச்சையளிப்பது எப்போதும் சாத்தியமில்லை. மிகவும் உணர்திறன் வாய்ந்த பயிர்வகைகளில், குறிப்பாக இளம் தாவரங்களில், வசந்த காலத்தில் முதல் கட்டிகள் உருவாகியவுடன் சிகிச்சை செய்வது அவசியம். கட்டிகள் தோன்றியவுடன், முட்டைகள் எப்போது குஞ்சு பொரிக்கத் தொடங்குகின்றன என்பதைக் கண்டறிய, அவற்றை ரேஸர் பிளேடால் தினமும் வெட்டிப் பார்க்க வேண்டும். சிறிய முட்டைப்புழுக்கள் தென்பட்டவுடன் இரசாயனக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தவும். கண்காணிப்பு மற்றும் ஆரம்ப சிகிச்சை பயன்பாடு உறுதி செய்யப்பட வேண்டும், இதனால் வெவ்வேறு வாழ்க்கைச் சுழற்சிகள் இணைந்துள்ள பல தலைமுறை பூச்சிகள் ஏற்படாமல் தடுக்க முடியும். பல தலைமுறைகளாக இருக்கும் பூச்சிகளிடத்தில் பூச்சிக்கொல்லிகள் மிகக் குறைவான பலனையே கொண்டிருக்கின்றன. உங்கள் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட தயாரிப்புகளை எப்போதும் பயன்படுத்தவும்.
டக்துலோஸ்பைரா விட்டிஃபோலியேவின் வாழ்க்கைச் சுழற்சி சிக்கலானது. இந்தப் பூச்சி கனமான களிமண் மற்றும் வறண்ட நிலைகளை விரும்புகிறது. வசந்த காலத்தில், பெண் பூச்சிகள் திராட்சைக் கொடி மீது இடப்பட்ட கருவுற்ற முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து, இலைக்கு இடம்பெயரும், அங்கு அவை கட்டியை உற்பத்தி செய்கிறது. 15 நாட்களுக்குள், பெண் முதிர்ச்சியடைந்து, கட்டியை முட்டைகளால் நிரப்பிவிட்டு, விரைவில் இறந்துவிடும். இந்த முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்து வெளியாகும் இளம் பூச்சிகள் கட்டியிலிருந்து தப்பித்து, புதிய இலைகளுக்கு அலைந்து திரியும். இவை புதிய கட்டிகளையும் முட்டைகளையும் உற்பத்தி செய்யும். கோடை காலத்தில், 6 அல்லது 7 தலைமுறைகள் இருக்கலாம். இலையுதிர்காலத்தில், இளம் பூச்சிகள் குளிர்காலத்தில் வேர்களுக்கு இடம்பெயரும், அங்கு அவை குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். அடுத்த வசந்த காலத்தில் இவை மீண்டும் சுறுசுறுப்பாக மாறி வேர் கட்டிகளை உருவாக்கும். இறக்கையற்ற பெண் பூச்சிகள் ஆண்டுதோறும் வேர்களில் காலவரையின்றி வாழ்க்கைச் சுழற்சியை மேற்கொள்ளக்கூடும். கோடையின் பிற்பகுதியிலும் இலையுதிர்காலத்திலும், வேர்களில் வசிக்கும் சில பைலோக்ஸெரா முட்டைகளை இடும், அவை இறக்கைகள் கொண்ட பெண்களாக உருவாகும். இறக்கைகள் கொண்ட பெண் பூச்சிகள் வேர்களில் இருந்து தண்டுகளுக்கு இடம் பெயரும், அங்கு அவை இரண்டு அளவிலான முட்டைகளை இடும், சிறியவை ஆண்களாகவும், பெரியவை பெண்களாகவும் வளரும். இனச்சேர்க்கை நிகழ்ந்து பின்னர் பெண்பூச்சி ஒற்றை கருவுற்ற முட்டையை இடும், அது திராட்சை தண்டின் மீது குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். இந்த முட்டைதான் இலையில் வாழும் தலைமுறைகளை உருவாக்கும். புவியியல் காரணிகளைப் பொறுத்து, வெவ்வேறு வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்ட தலைமுறைகள் ஒரே நேரத்தில் உருவாகலாம்.