முட்டைக்கோசு

முட்டைக்கோஸின் இலை பிணைக்கும் புழு

Crocidolomia binotalis

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளில் துளைகள்.
  • இலைகள் மற்றும் முட்டைக்கோஸின் மையப்பகுதியில் கம்பளிப்பூச்சிகளின் கழிவுகள்.
  • முன் இறக்கையில் கருப்பு புள்ளி மற்றும் வெளிர் பழுப்பு நிற ஜிக்ஜாக் கோடுகளுடன் சாம்பல் கலந்த பழுப்பு நிற அந்துப்பூச்சிகள்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
முட்டைக்கோசு
பூக்கோசு.

முட்டைக்கோசு

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகள் இலைகளைச் சுற்றி காணப்படும் பட்டு போன்ற வலையால் வகைப்படுத்தப்படுகின்றன. உண்ணும் சேதத்தை இலைகளில் காணலாம், இவை இலைகளை எலும்புக்கூடு போல் ஆக்குகின்றன. முட்டைக்கோஸ்களின் உள் இலைகள் பெரும்பாலும் சேதமடைகின்றன. இவை மலர் மொட்டுகளை உண்ணுகின்றன, மேலும் துளைகளை காய்களில் ஏற்படுத்துகின்றன. முட்டைக்கோஸ்களின் இலைகள் மீது மற்றும் நடுப்பகுதிகளில் கம்பளிப்பூச்சிகளின் கழிவுகள் காணப்படும். முட்டைகளை இலைகளின் கீழ் பக்கத்தில் காணலாம். இலை சேதம் காரணமாக பாதிக்கப்பட்ட தாவரங்களின் ஆரோக்கியம் மோசமடைகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சேதம் காணப்பட்டவுடன் பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸைப் பயன்படுத்தவும் (மாலையில் பயன்படுத்த வேண்டும்). பூச்சிக்கொல்லியை உட்கொள்ள வைத்து கம்பளிப்பூச்சிகளைக் கொல்லும் நோக்கம் இருப்பதால், கவனமாக தெளித்து தாவரங்களை நன்கு மூடி வைக்கவும். முட்டைகள் பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸிற்கு எளிதில் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் சிறிய முட்டைப்புழுக்கள் முழுமையாக வளர்ந்தவைகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன. புதிதாக பறித்த வேம்பு, எலுமிச்சை, இஞ்சி அல்லது பிற தாவர பூச்சிக்கொல்லிகளை 1 லிட்டர் / 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் பயன்படுத்துங்கள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பரந்த அளவிலான வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகளை (பைரெத்ராய்டுகள் மற்றும் ஆர்கனோபாஸ்பேட்டுகள் போன்றவை) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை இயற்கை இரைப்பிடித்துண்ணிகளை கொல்லும். போசலோன், ஃபென்வலரேட், சைபர்மெத்ரின் அல்லது டெல்டாமெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும். ஒரே மாதிரியான செயல்பாடுகளை உடைய பூச்சிக்கொல்லிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

இது எதனால் ஏற்படுகிறது

குரோசிடோலோமியா பைனோடலிஸின் முட்டைப்புழுக்களால் சேதம் ஏற்படுகிறது. முட்டைப்புழுக்கள் அரிதாக நாற்றுகளைத் தாக்குகின்றன, ஆனால் தாவரங்களின் அனைத்து நிலைகளிலும் அவற்றை உண்ணுகின்றன. முட்டைகள் வெளிப்புற இலைகளின் கீழ் பக்கத்தில் 40 முதல் 100 வரை கொத்தாக இடப்படுகின்றன. இவை முதலில் வெளிர் பச்சை நிறத்தில் தோன்றும், பின்னர் இவை குஞ்சு பொரிக்கும் முன்பு பிரகாசமான மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாறும். புதிதாக குஞ்சு பொரித்த கம்பளிப்பூச்சி முட்டைப்புழுக்கள் சுமார் 2 மி.மீ நீளம் கொண்டவை, மேலும் இவை முதிர்ச்சியடையும் போது நீளமான முடிகளுடன் 20 மி.மீ வரை வளரும். பிந்தைய கட்டங்களில், இவை இலைகளுக்கு மேல் தடிமனான வலைகளை உருவாக்குகின்றன மற்றும் கம்பளிப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியை உண்ணுகின்றன. அந்துப்பூச்சிகள் பொதுவாக இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன, மேலும் ஆரம்ப கட்டங்களிலிருந்து அறுவடை காலம் வரை பயிர்களை பாதிக்கக்கூடும். இது முள்ளங்கி, கடுகு, டர்னிப் மற்றும் பிற முட்டைக்கோஸ் வகைகளையும் பாதிக்கிறது. வெளியேற்றமானது காய்கறியை உண்ண முடியாததாக ஆக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்வதற்கு பூச்சிகள் இல்லாத விதைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • முட்டை கொத்துகள் மற்றும் இளம் கம்பளிப்பூச்சிகள் ஏதேனும் தென்படுகிறதா என நாற்றுப்பண்ணையில் உள்ள நாற்றுகளை சரிபார்க்கவும்.
  • கண்டுபிடிக்கப்பட்டால், இலைகள் அல்லது முழு தாவரத்தையும் அகற்றி அவற்றை அழிக்கவும்.
  • கடுகு (பிராசிகா ஜுன்சியா) அல்லது சீன முட்டைக்கோஸ் ஆகியவற்றை முட்டைக்கோஸ் பயிர் வரிசைகளுக்கு இடையே ஒரு பொறி பயிராகப் பயன்படுத்தவும்.
  • முட்டைக்கோஸ் நடவு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பு கடுகின் முதல் வரிசையையும், நடவு செய்த 25 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது வரிசையையும் நடவு செய்யவும்.
  • வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கம்பளிப்பூச்சி நுழைவதைத் தடுக்கவும், பூச்சிகளால் நுழைய முடியாத வலை அல்லது மென்முடி கற்றைகளைக் கொண்டு தாவரங்களை மூடி வைக்கவும்.
  • வளரும் பருவத்தில் பாதிக்கப்படக்கூடிய தாவரங்களை தினந்தோறும் கண்காணித்து, காணப்படும் முட்டை அல்லது கம்பளிப்பூச்சிகளை அகற்றவும்.
  • தாவரத்திற்குள் கம்பளிப்பூச்சிகளுடன் பிண்ணப்பட்ட இலைகளை அகற்றி அழிக்கவும்.
  • அறுவடைக்குப்பிறகு உடனே பயிர் கழிவுகளை அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க