மாங்கனி

மாம்பழ இலை வலைப்பூச்சி

Orthaga euadrusalis

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளின் மீது உரசித்தேய்த்தது போன்ற தோற்றம்.
  • மென்மையான தளிர்கள் மற்றும் இலைகளை வலைப்பின்னல் மூலம் ஒன்றாக இணைத்தல்.
  • இலைகள் உலர்ந்து, பழுப்பு நிறமாக தோன்றுதல்.
  • கருப்பு மற்றும் வெள்ளை பட்டை கோடுகளுடன் பச்சை நிறத்தில் முட்டைப்புழுக்கள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

அறிகுறிகளானது இலைகளில் முக்கியமாக காணப்படுகிறது. நரம்புகளுக்கு இடையேயான மேற்பரப்பை சுரண்டுவதன் மூலம் முட்டைப்புழுக்கள் மென்மையான இலைகளை உண்ணுகின்றன. பிறகு இவை இலைகளை சுவாரஸ்யமாக உண்டு, மைய நரம்பு மற்றும் நரம்புகளை மட்டுமே விட்டு வைக்கின்றன. இதன் விளைவாக உலர்ந்த, வலைப்பின்னலுடன், வாடிய இலைகள் கொத்துக்களாக காணப்படும். கடுமையான நோய்த்தொற்றின் கீழ், தளிர்கள் வறண்டு போகின்றன, இதனால் ஒளிச்சேர்க்கை கட்டுப்படுத்தப்படுகிறது.பாதிக்கப்பட்ட மரங்கள் ஆரோக்கியமற்றதாகத் தோன்றும், மேலும் இவற்றினை பழுப்பு நிற, உலர்ந்த, கொத்துக்களான இலைகள் மூலம் எளிதில் கண்டறிய முடியும். மலர் தண்டு உருவாக்கமும் பாதிக்கப்படுகிறது, இது பூக்கும் மற்றும் பழம்தரும் செயல்முறைகளை பாதிக்கிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பிராக்கிமேரியா லாசஸ், ஹார்மியஸ் இன பெடியோபியஸ் ப்ரூசிசிடா போன்ற இலை வலைப்பூச்சியின் ஒட்டுண்ணிகள் மற்றும் கராபிட் வண்டு மற்றும் ரிடூவீட் வண்டு போன்ற இயற்கை இரைப்பிடித்துண்ணிகளான இயற்கை எதிரிகளை பயன்படுத்தவும். அதிக ஈரப்பதத்தின் போது பெளவேரியா பாசியானாவை இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குயினல்போஸ் (0.05%) உடன், 15 நாட்கள் இடைவெளியில் மூன்று தெளிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. லாம்ப்டா-சைஹலோத்ரின் 5 ஈசி (2 மிலி / லிட்டர் நீர்) அல்லது குளோசோபைரிபோஸ் (2 மிலி / லிட்டர்), அசிபேட் (1.5 கிராம் / லிட்டர்) ஆகியவற்றின் அடிப்படையிலான இரசாயனங்களை தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

ஆர்த்தகா யூட்ருசலிஸின் முட்டைப்புழுக்களால் சேதம் ஏற்படுகிறது. பெண் அந்துப்பூச்சிகள் மா இலைகளில் மந்தமான மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் முட்டைகளை இடுகின்றன, இவை வழக்கமாக ஒரு வாரத்திற்குள் குஞ்சு பொரிக்கின்றன. வானிலை நிலைமைகளைப் பொறுத்து, முட்டைப்புழுவின் காலம் 15 முதல் 30 நாட்களுக்கு இடையில் மாறுபடலாம், ஏனெனில் முட்டைப்புழுக்கள் பொதுவாக ஐந்து வளர்ச்சி நிலைகளை கொண்டுள்ளன. முட்டைப்புழுவின் கடைசி வளர்ச்சி நிலைக்குப்பிறகு, முட்டைப்புழு வலைப்பின்னலில் கூட்டுப்புழுவாகி, நிலத்தில் ஒரு அதிர்வுடன் விழுந்து, மண்ணில் இந்த செயல்முறையை தொடரும். கூட்டுப்புழுவாக இருக்கும் காலம் வெப்பநிலையைப் பொறுத்து 5 முதல் 15 நாட்கள் வரை வேறுபடலாம். அடர்த்தியாக நடப்பட்ட பழத்தோட்டங்கள் சாதாரண இடைவெளி மற்றும் விதானமாக நிர்வகிக்கப்படும் பழத்தோட்டங்களை விட அதிக தொற்று விகிதங்களைக் கொண்டுள்ளன. பூச்சி தொற்று பொதுவாக ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கி டிசம்பர் வரை தொடர்கிறது. ஒப்பு ஈரப்பதம் இலை வலைப்பூச்சி எண்ணிக்கையுடன் கணிசமான அளவில் தொடர்புடையதாக இருக்கிறது.


தடுப்பு முறைகள்

  • ஒரு மாதத்திற்கு ஒரு முறை பழத்தோட்டத்தை கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தளிர்களை இயந்திர முறையில் அகற்றி அவற்றை எரிக்கவும்.
  • வலைப்பின்னலுடன் காணப்படும் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்ற மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி மண்ணை கிளறவும்.
  • மரத்தின் விதானம், போதுமான காற்று மற்றும் சூரிய ஒளியை அனுமதிக்க, எல்லா பக்கங்களிலும் திறந்திருக்கும் வகையில் அடர்த்தியான பழத்தோட்டங்களை சீர்திருத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க