கொய்யா

மாதுளை பழ துளைப்பான்

Deudorix Isocrates

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • ஆரம்ப கட்டத்தில் பழம் ஆரோக்கியமாக தோன்றும்.
  • பிந்தைய கட்டங்களில், பழம் அழுகி, கீழே விழுந்துவிடும்.
  • நீல பழுப்பு பட்டாம்பூச்சி காணப்படும்.
  • முழுமையாக வளர்ந்த முட்டைப்புழுக்கள் சிறிய முடி மற்றும் வெள்ளை திட்டுகளுடன் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
கொய்யா
மாதுளை

கொய்யா

அறிகுறிகள்

நோய்த்தொற்றின் பிற்பகுதிகளில் அறிகுறிகள் பெரும்பாலும் வெளியே தெரியும். மலர் மொட்டுகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. பழச்சாறுகளால் நுழைவு துளைகள் குணமாகிவிடும் என்பதால், பழங்கள் முதலில் ஆரோக்கியமாகவே தோன்றும். நோய் அதிகரிக்கையில், முட்டைப்புழுக்களின் இறுதிப் பகுதியால் பழங்கள் செருகப்படுவதால் முட்டைப்புழுவின் நிலை துளைகளைக் கண்டறிய முடியும். முழுமையாக வளர்ந்த முட்டைப்புழுக்கள் தனது கடினமான ஓடு மூலம் பழங்களை துளையிட்டு வெளியேறி, பழம் அல்லது தண்டு முக்கிய கிளையுடன் இணையும் வகையில் வலையை பிண்ணும். பாதிக்கப்பட்ட பழங்கள் பின்னர் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றன, இதனால் அவை அழுகி, இறுதியாக கீழே விழுந்துவிடும். கம்பளிப்பூச்சிகளின் கழிவுகளால் பழங்களில் அருவருப்பான வாசனை ஏற்படுகிறது. கழிவுகள் நுழைவு துளைகளிலிருந்து வெளியே வந்து இறுதியில் காய்ந்து, பழங்களை மனிதன் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக ஆக்குகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி டிரைக்கோகிராம்மா இனங்கள் பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். 10 நாட்கள் இடைவெளியில் நான்கு முறைகள் வயலில் ஏக்கருக்கு 1.0 லட்சம் என்ற அளவில் விடுவிக்கவும். இவற்றை வயலின் ஓரங்களிலும், நடுவிலும் வைக்கலாம். டி. ஐசோக்ரேட்டுகளின் இரைப்பிடித்துண்ணிகளில் கண்ணாடி இறக்கை பூச்சி, பொன் வண்டு, சிலந்தி, சிவப்பு எறும்பு, தும்பி, கொள்ளை ஈ, ரிடுவீட் வண்டு மற்றும் வேட்டையாடும் மான்டிஸ் பூச்சிகள் ஆகியன அடங்கும். மேலும், குளவிகள், பெரிய கண் உடைய வண்டு (ஜியோகோரிஸ் இனம்), இயர்விக்ஸ், தரை வண்டு, பெண்டடோமிட் வண்டு (ஈகாந்தெகோனா ஃபர்செல்லாட்டா) ஆகியவை பழம் துளைப்பானுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பறவை இனங்கள் கம்பளிப்பூச்சிகளையும் உண்ணும். பழ துளைப்பான் மலர்களின் புல்லியிதழில் முட்டையிடுவதால் புள்ளியிதழ் குழாயை மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக கிள்ளி அகற்றி வேண்டும். இதைத் தொடர்ந்து பூக்கும் கட்டத்தில் வேப்ப எண்ணெய் (3%) பயன்படுத்த வேண்டும். பூச்சியிலிருந்து பாதுகாக்க பழத்தின் அடிப்பகுதியைச் சுற்றி சுத்தமான மண்ணை (சூரியனால் சூடேற்றப்பட்ட) அமைக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூக்கும் கட்டத்தில், அசாதிராச்டின் 1500 பிபிஎம் @ 3.0 மிலி / லிட்டர் தண்ணீரை 15 நாட்கள் இடைவெளியில், பூக்க துவங்கியதிலிருந்து அறுவடை வரை, பழம் துளைப்பானின் இருப்புக்கு உட்பட்டு, தெளிக்கவும். டைமெத்தோயேட் (2 மிலி / லிட்), இண்டோக்ஸாகார்ப் (1 கிராம் / லிட்), சைபெர்மெத்ரின் (1.5 மிலி / லிட்) அல்லது புரோஃபெனோபோஸ் (2 மிலி / லிட்) இவற்றில் ஏதேனுமொன்றை பூக்க துவங்கியது முதல் பழம் வளர்ச்சி அடையும் வரை பதினைந்து நாள் இடைவெளியில் தெளிக்கவும். மாதுளை பழ துளைப்பானை திறம்பட கட்டுப்படுத்த லாம்ப்டா-சைஹலோத்ரின் வேதியியல் பயன்பாடுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. எமமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி.யின் இரண்டு தெளிப்புகள் 0.25 கிராம் / லிட்டர் நீர் என்ற விகிதத்தில் அல்லது ஸ்பினோசாட் 45 எஸ்சி 0.20 மில்லி / லிட்டர் என்ற விகிதத்தில் தெளிப்பது பழ சேதத்தில் அதிக குறைப்பை பதிவு செய்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

மாதுளைக்கு ஏற்படும் சேதம் டியூடோரிக்ஸ் ஐசோக்ரேட்டுகளின் முட்டைப்புழுவால் ஏற்படுகிறது, இது பொதுவாக மாதுளை பட்டாம்பூச்சி அல்லது மாதுளை பழ துளைப்பான் என்று அழைக்கப்படுகிறது. இது மாதுளை பழத்தின் மிகவும் அழிவுகரமான பூச்சி. பட்டாம்பூச்சிகள் பகல்நேரங்களில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன மற்றும் பழங்கள், மென்மையான இலைகள், மலர் மொட்டுகள் மற்றும் தண்டுகளில் தனித்தனியாக முட்டைகளை இடுகின்றன (முட்டையிடுதல்). பெண் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் சராசரியாக 6.35 முட்டைகளுடன் 20.5 முட்டைகளை இடுகின்றன. டி. ஐசோக்ரேட்டுகள் அண்டவிடுப்பிலிருந்து முதிர்ந்த பூச்சியாகி பறக்கும் வரை ஒரு வாழ்க்கைச் சுழற்சியை முடிக்க சுமார் 33 - 39 நாட்கள் ஆகிறது. குஞ்சு பொரித்தபின், முட்டைப்புழுக்கள் வளரும் பழங்களுக்குள் துளையிட்டு, கூழ், வளரும் விதைகள் மற்றும் திசுக்களை உண்ணுகின்றன. 30 முதல் 50 நாட்கள் வரையிலான இவற்றின் காலத்தில் உண்ணும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜூலை மாதத்தில் மாதுளை பட்டாம்பூச்சியின் படையெடுப்பு மிகவும் கடுமையானதாக இருக்கும் மற்றும் ஒப்பு ஈரப்பதத்துடன் இது குறிப்பிடத்தக்க நேர்மறையான தொடர்பைக் காட்டுகிறது. இதன் படையெடுப்பு மார்ச் மாதத்தில் குறைவாக இருக்கும், மேலும் செப்டம்பரில் உச்சக்கட்டத்தை அடையும் வரை இவற்றின் படையெடுப்பு படிப்படியாக அதிகரிக்கும் .


தடுப்பு முறைகள்

  • உலர்ந்த கிளைகள் ஏதேனும் இருக்கிறதா என உங்கள் வயலை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • முதிர்ந்த பட்டாம்பூச்சிகளைக் கண்காணிக்க ஏக்கருக்கு @ 1 / ஒளிப் பொறிகளை நிறுவவும்.
  • சேதமடைந்த பழங்களை சேகரித்து அவற்றை வயலில் இருந்து அகற்றி அழிக்கவும்.
  • மகரந்தச் சேர்க்கை முடிந்த உடனேயே மலர்களின் புள்ளிவட்டத்தை பிடுங்கிவிடுவது முட்டை பழங்களின் மீது படிவத்தை தடுத்து, சேதத்தின் அளவைக் குறைக்க உதவும்.
  • மாற்று புரவலன்களாக செயல்படும் களைகளையும் தாவரங்களையும் அகற்றவும்.
  • ஆரம்ப கட்டத்திலிருந்தே பழங்களை (அவை சுமார் 5 செ.மீ பெரியதாக இருக்கும்போதே) வெண்ணெய் காகிதம், கரடுமுரடான துணி அல்லது 300 காஜ் தடிமன் கொண்ட மெல்லிய துணியால் துளைப்பான் துளைக்காத வகையில் பழங்களை சுற்றி வைக்கவும்.
  • கொள்ளையடிக்கும் பறவைகள், பிற இயற்கை எதிரிகள் மற்றும் சூரியனுக்கு கூட்டுப்புழுவை வெளிப்படுத்த அறுவடை முடிந்த உடனேயே மாதுளை மரத்தை சுற்றி தோண்டவும் அல்லது நிலத்தை உழவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க