கத்திரிக்காய்

மொட்டுப்புழு

Scrobipalpa sp.

பூச்சி

சுருக்கமாக

  • மலர் மொட்டுகள் மற்றும் மேல் தளிர்கள் சுருங்குதல் மற்றும் உதிர்தல்.
  • இலைகள் தொங்குதல் மற்றும் காய்ந்துபோகுதல்.
  • இறந்த இதய அறிகுறியை வெளிப்படுத்துதல்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்
கத்திரிக்காய்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
புகையிலை

கத்திரிக்காய்

அறிகுறிகள்

தாவரத்தின் மொட்டுகள், பூக்கள் மற்றும் தண்டுகளில் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்களின் மேல் தளிர்கள் தொங்கி, வாடிவிடும். முதிர்ந்த தாவரங்களின் வளர்ச்சி குன்றும். மலர் மொட்டுகள் சுருங்கி உதிர்தலானது பழம் தாங்கும் செயல்முறையை கடுமையாக பாதிக்கிறது. இலைகள் வாடிய மற்றும் உலர்ந்த தோற்றத்துடன் காணப்படும். தளிர்கள் மற்றும் பழங்களில் கழிவுகளுடன் குடைந்த துளைகள் காணப்படும். தளிர்களை குடைவதன் மூலம், மொட்டுப்புழு முனைய தளிர்களை வாடச்செய்யும், இது இறந்த இதயங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மைக்ரோகாஸ்டர் எஸ்பி., பிரக்கோன் கிச்சனெரி, பிலெண்டா ரூஃபிகாண்டா, செலோனஸ் ஹெலியோபா உள்ளிட்ட ஒட்டுண்ணிகளை மொட்டுப்புழு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். பிரிசோமரஸ் டெஸ்டேசியஸ் மற்றும் க்ரீமாஸ்டஸ் ஃப்ளாக்கூர்பிட்டலிஸ் போன்ற முட்டைப்புழு ஒட்டுண்ணிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும். ப்ரோஸ்கஸ் பங்டேடஸ், லியோகிரில்லஸ் பிமாகுலேட்டஸ் போன்ற இயற்கை எதிரிகளை ஊக்குவிக்க வேண்டும். வேப்ப விதை சாறு @ 5% அல்லது வேப்ப எண்ணெய் கொண்ட அசாதிரச்டின் ஈ.சி. போன்றவற்றை தெளிக்கவும். நோய்க்கிருமிகள் பேசிலஸ் துரிஞ்ஜியென்சிஸ், பெளவெரியா பாஸியானா (பூச்சியுண்ணும் பூஞ்சை) போன்றவற்றை அடிப்படையாக கொண்ட தயாரிப்புகளை பூச்சி முதன்முதலில் கண்ணில் தென்பட்டவுடனே பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் செய்யலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். 3 - 10% இளம் தாவரங்கள் சேதமடையும் போது நடவடிக்கை எடுக்கவும், ஆனால் தேவையற்ற தெளிப்பு மற்றும் பரந்த வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை நன்மை பயக்கும் பூச்சிகளைக் கொல்லக்கூடும். பழம் முதிர்ச்சி அடையும் மற்றும் அறுவடை செய்யும் நேரத்தில் தெளிக்க வேண்டாம். பூச்சியைக் கட்டுப்படுத்த குளோர்பைரிஃபோஸ், எமாமெக்டின் பென்ஸோயேட், ஃப்ளூபெண்டயமைடு, இண்டோக்சிகார்ப் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

முக்கிய சேதம் ஸ்க்ரோபிபல்பாவின் (பிளாப்சிகோனா இனங்கள்) முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. அந்துப்பூச்சிகள் நடுத்தர அளவிலானவை, இவை வெண்மை நிறத்தில் இருந்து செப்பு சிவப்பு நிறத்தில் இறக்கை விளிம்புகளை கொண்டவை. முன் இறக்கைகள் வெண் பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் இறக்கைகள் சாம்பல் நிறத்தில், கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ வெள்ளை இளஞ்சாயத்துடன் காணப்படும். ஆரம்பத்தில், அவற்றின் முட்டைப்புழுக்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் வெளிர் நிறத்திலும், அதன் தலை மற்றும் மார்பு பகுதி கரும்பழுப்பு நிறத்திலும் தோன்றும், இது பழுப்பு நிற கம்பளிப்பூச்சிகளாக வளரும். இது நாற்றுகளின் தண்டுகளை தானாகவே குடைந்து, உள்சென்று, உட்புற திசுக்களை உண்ணும். இது தண்டில் கட்டிகள், முளைத்த பக்க கிளைகள், குன்றிய அல்லது சிதைந்த வளர்ச்சி மற்றும் வாடிய தாவரங்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மொட்டுப்புழு மலர் மொட்டுகளை துளைக்கும்போது, அது பூவை உதிரச்செய்யும், இதையொட்டி, தாவரங்களால் பல பழங்களை உற்பத்தி செய்ய முடியாது. இந்த கம்பளிப்பூச்சிகள் பொதுவாக பகலில் தாமதமாக உண்ணுகின்றன, மேலும் இவை புகையிலை தாவரத்தின் முக்கியமான பூச்சியாகவும் கருதப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பயிரை வாரத்திற்கு இரண்டு முறை, குறிப்பாக தாவர வளர்ச்சியின் ஆரம்ப நிலையில், முட்டை மற்றும் முட்டைப்புழுக்கள் ஏதேனும் தென்படுகிறதா என கண்காணிக்கவும்.
  • பொதுவாக, கம்பளிப்பூச்சிகள் தாவரத்தின் உள்ளே தானே குடைந்து செல்வதற்குமுன் தீவிரமான நோய்த்தொற்றை கண்டறிந்து, தடுப்பது எளிது.
  • கைமுறையால் முட்டைகள் மற்றும் முட்டைப்புழுக்களை எடுத்து, சேகரித்து, அவற்றை அழித்துவிடவும்.
  • முதிர்ந்த அந்துப்பூச்சிகளை ஈர்க்கவும், கண்காணிக்கவும், கொல்லவும், பெரோமோன் பொறிகள் (12 / ஹெக்டேர்) மற்றும் ஒளி பொறிகளை (1 / ஹெக்டேர் நிறுவ வேண்டும்.
  • உங்கள் வயலைச் சுற்றி காட்டுப்பூக்கள் மற்றும் சோளத்தை நடவு செய்வதன் மூலம், நீங்கள் மொட்டுப்புழுவின் இயற்கை எதிரிகளை ஈர்க்கலாம்.
  • விதைப்படுகைகள் மற்றும் வயல்களில் இருந்து பாதிக்கப்பட்ட தாவர பாகங்கள் மற்றும் களைகளை (குறிப்பாக சோலனேசியஸ் களைகளை) அகற்றி அழிக்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, தாவர எச்சங்களை பிடுங்கி எரிக்கவும்.
  • நிலத்தை வெயிலில் காயவைத்தலுடன் நிலத்தை சிறிது காலத்திற்கு தரிசாக விடுதலானது வாழ்க்கைச் சுழற்சியை உடைக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • பயிர் சுழற்சி பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் புகையிலை (புரவலன் தாவரம்) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • மேலும், அருகிலுள்ள வயல்களில் புகையிலை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க