Spodoptera exigua
பூச்சி
ஆரம்பத்தில், இளம் முட்டைப்புழுக்கள் கீழ்ப்புறக் கவிகைகளில் உள்ள முதிர்ந்த இலைகளின் அடிப்புறத்தைக் கூட்டமாக உண்ணும். பெரிய முட்டைப்புழுக்கள் மிகவும் தனித்ததாகி, பயிர்கள் முழுவதும் பரவி, இலைகளில் ஒழுங்கற்றத் துளைகளை ஏற்படுத்தும். முதிர்ந்த முட்டைப்புழுக்கள் சிறிய தாவரங்களில் உள்ள இலைகளை முழுவதுமாக உதிரச்செய்துவிடும் அல்லது நரம்புகளைத் தவிர திசுக்கள் அனைத்தையும் உண்டு, இலைகளை எலும்புக்கூடு போன்று ஆக்கிவிடும். இலைகள் அனைத்தையும் உண்டு முடித்த பிறகு, கம்பளிப்புழுக்கள் நெற்றுகளையும் தாக்கக்கூடும், ஆனால் தண்டுகள் அவற்றின் பட்டியலில் இல்லை. பொதுவாக, இவை இரவில் உண்டு, பகல் நேரத்தில் நிலத்தில் அல்லது தாவரங்களின் நிழலான அல்லது ஈரப்பதமான பாகங்களில் மறைந்துகொள்ளும். ஸ்போடோப்டெரா எக்சிகுவாவின் உண்ணும் செயல்பாட்டினால் இளம் நாற்றுகள் இறந்துபோகக்கூடும், ஆனால் நோய்த்தொற்று கடுமையாக இல்லையென்றால், முதிர்ந்த தாவரங்கள் அவற்றிலிருந்து மீளுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஸ்போடோப்டெரா எக்சிகுவாவின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு பொன்விதி அவற்றின் இயற்கை எதிரிகளை மேம்படுத்துவதாகும். மலர் வண்டுகள் (ஆந்தோகொரிடே), (தீ) எறும்புகள், ஒட்டுண்ணிக் குளவிகள் (ஹைபோசோட்டர் டிடிமேட்டர்), ஈக்கள் மற்றும் சிலந்திகள் இந்த நோய்ப்பூச்சியின் முட்டைப்புழுக்கள் மற்றும் முட்டைகளைத் தாக்கும். பூச்சியுண்ணும் பூஞ்சைகள், பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ், என்.பி.வி மற்றும் நூற்புழுக்கள் முட்டைப்புழுக்களையும் முதிர்ந்த பூச்சிகளையும் பாதிக்கும். மலர்ச்சியான வேம்பு, எலுமிச்சைபுல் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தாவரவியல் பூச்சிக்கொல்லிகளும் திறன்மிக்க வகையில் செயல்படும். அதேபோல, முட்டை மற்றும் இளம் குஞ்சுகள் இரண்டும் 5% பருத்தி விதை எண்ணெயின் இலைத்திரள் பயன்பாட்டினால் கட்டுப்படுத்தப்படும். இவற்றின் இனச்சேர்க்கைக்கு இடையூறு செய்து, இனப்பெருக்கத்தைத் தடுக்க அல்லது குறைக்க பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும் (97% வரையிலான செயல்திறன்).
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை ஏனெனில் இவை நன்மை பயக்கும் பூச்சிகளையும், எஸ்.எக்சிகுவாவின் இயற்கை எதிரிகளையும் அழித்துவிடக்கூடும். இதையொட்டி, நோய்ப்பூச்சிகளின் எண்ணிக்கைத் திடீரென அதிகரிக்கக்கூடும். மேலும், இந்தப் பூச்சி பல ரசாயனங்களுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளக்கூடிய திறனை அதிகம் கொண்டவை.
இந்த நோய்க்கான சேதங்களானது ஸ்போடோப்டெரா எக்சிகுவா என்னும் செங்கிழங்குப் படைப்புழுவின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இந்தப் பூச்சி ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் மற்றும் குளிர்ந்த காலநிலையிலுள்ள கண்ணாடிக் கூடிகளில் ஏற்படுகிறது. பருத்தி, செங்கிழங்கு மற்றும் மக்காச்சோளம் போன்ற பல்வேறு பயிர்களை இவை தாக்குகின்றன. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கைகள் ஒழுங்கற்ற அமைப்புடன் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் புள்ளிகளைக் கொண்டிருக்கும் மற்றும் அவை நடுப்பகுதியில் வெளிர் நிறத்தில் அவரை வடிவ புள்ளிகளைக் கொண்டிருக்கும். பின் இறக்கைகள் ஓரங்களுக்கு அருகே கருநிற வரிகளுடன் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். பெண்பூச்சிகள் இலைகளின் கீழ்ப்புறத்தில் வெள்ளை அல்லது சாம்பல் நிற முடிகளால் மூடப்பட்ட முட்டைகளைக் கொத்துக்களாக இடும். இளம் முட்டைப்புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில், அதன் முதுகுப்பகுதியில் நீளவாக்கில் கரு நிறக் கோடுகளைக் கொண்டிருக்கும். முதிர்ந்த முட்டைப்புழுக்கள் பச்சை நிறத்தில், அதன் ஒவ்வொரு விலாப்புறத்திலும் மஞ்சள் நிறக் கோடுகளையும், அதன் முதுகுப்பகுதியில் அகன்ற மஞ்சள் கலந்த பச்சை நிறப் பட்டைகளையும் கொண்டிருக்கும்.