பருத்தி

பருத்தியின் தண்டு அந்துப்பூச்சி

Pempherulus affinis

பூச்சி

சுருக்கமாக

  • பருத்தித் தண்டு அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்கள் தாவரத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்டுகளுக்குள் ஊடுருவி, உள்ளிருந்து ஓட்டம் பெற்று, கடத்துத் திசுக்களைச் சேதப்படுத்தி, தண்டுகளில் உருக்குலைவை ஏற்படுத்தும்.
  • விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும், வலுவான காற்று வீசும்போது தாவரங்களின் முனைகள் உடையக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பருத்தித் தண்டு அந்துப்பூச்சியினால் ஏற்படும் நோய்த்தொற்றின் மிகவும் தனித்துவமான அறிகுறி நிலத்திற்கு மேலேயுள்ள தண்டுகளில் காணப்படும் முடிச்சு போன்ற வீக்கமாகும். இது தண்டுகளுக்குள் முட்டைப்புழுக்களின் உண்ணும் செயல்பாட்டினால் கடத்துத் திசுக்கள் சேதமடைவதனால் ஏற்படுகிறது. சேதத்தின் விளைவாக இளம் தாவரங்கள் தவிர்க்க முடியாமல் இறந்துவிடுகின்றன. முதிர்ந்த தாவரங்களில் முதலில் வாடும் அறிகுறிகள் தென்படும், பின்னர் படிப்படியாக உலரும். இவை உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு, ஆனால் குறைவான வீரியத்தையும், குன்றிய வளர்ச்சியினையும் கொண்டிருக்கும். பாதிக்கப்பட்டத் தண்டுகள் வலுவான காற்று வீசும்போது அல்லது கனமான காய்களின் சுமை காரணமாக எளிதில் சாய்ந்துவிடக்கூடும். குறைந்த எண்ணிக்கையிலான காய்கள், தரம் குறைவான பருத்தி இழைகள் போன்றவை இவற்றின் பிற அறிகுறிகளாகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அடிப்படை உரமிடும்போது, வேப்பம் புண்ணாக்கைப் பண்ணை எருக்களுடன் சேர்த்து பயன்படுத்துவது தண்டு மற்றும் தளிர் அந்துப்பூச்சியின் நோய்த்தொற்றுகளைக் குறைக்கக்கூடும் (ஒரு ஹெக்டேருக்கு 10 டன்கள் பண்ணை எரு + 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு). மேலும், முதிர்ந்த அந்துப்பூச்சிகள் இலைகளில் முட்டையிடுவதைத் தடுப்பதற்கு இளம் தாவரங்களை வேப்ப எண்ணெய் கரைசல்கள் கொண்டு நனைக்கலாம். அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் பெரோமோன் பொறிகள் (பூச்சிக்கொல்லியுடன் சேர்த்து) பயன்படுத்தப்படுகிறது .

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதைகளின் தடுப்பு சிகிச்சை (10 மில்லி குளோர்பைரிஃபோஸ் 20 இசி / கிலோ விதைகள்) பூச்சிகள் பரவுவதைக் குறைக்கப் பயன்படுகிறது. குளோர்பைரிஃபோஸ் 20 இசி கொண்டு தண்டுப் பட்டைகளில் தெளிக்கும் சிகிச்சை; தண்டு மற்றும் தளிர் அந்துப்பூச்சிகளுக்கு எதிராகவும் திறன்மிக்க வகையில் செயல்படுகிறது (2.5 மில்லி / லி நீர்த்தது). முளைத்த 15-20 நாட்களுக்குப் பிறகு, 15 நாட்கள் இடைவெளியில் தாவரங்களை நனைக்க வேண்டும். அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் பெரோமோன் பொறிகள் (பூச்சிக்கொல்லியுடன் சேர்த்து) பயன்படுத்தப்படுகிறது .

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது பெம்பெருலஸ் அஃபினிஸ் என்னும் பருத்தித் தண்டு அந்துப்பூச்சியினால் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சிறியதாக, கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும், அவற்றின் இறக்கைகளிலும் தலைப்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படும். பெண் பூச்சிகள் தனது முட்டைகளை இளம் தாவரங்களின் வளரும் தளிர்களில் இடும். முட்டையிலிருந்து குஞ்சு வெளியானதும், அந்த முட்டைப்புழுக்கள் மரப்பட்டைக்கு இடையே உள்ள தண்டுகளுக்குள் புதைந்து, கடத்துத் திசுக்களை உண்ணத் தொடங்கும். இது நிலப்பகுதிக்கு சற்று மேலே இருக்கும் தண்டுகளில் வழக்கமாக வீக்கங்களை ஏற்படுத்தும். பருத்தியின் தளிர் அந்துப்பூச்சியும் (அல்சிடோட்ஸ் அஃபாபெர்) இதே மாதிரியே செயல்படும். எனவே, அதே சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், பருத்தியின் தளிர் அந்துப்பூச்சிகள் தனது முன் இறக்கைகளில் வெளிர் நிறப் பட்டைகளுடன் கருஞ்சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாட்டில், பருத்தித் தண்டு அந்துப்பூச்சி அவ்வப்போது கடுமையான பூச்சியாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகளைத் தடுக்க தாவரங்களுக்கு இடையில் அகண்ட இடைவெளியைப் பயன்படுத்தவும்.
  • நாற்றுகளின் வரிசை நெடுகிலும் மண் வைத்து அணைத்து அந்துப்பூச்சியைத் தடுக்கவும்.
  • ஒரே தாவரத்தைப் பயிர் செய்யும் எண்ணிக்கையைக் குறைக்கவும் எ.கா.
  • நிலத்தைச் சிறிது காலத்திற்கு தரிசாக விடுவதன் மூலம் அல்லது பயிர் சுழற்சியைத் திட்டமிடுவதன் மூலம் குறைக்கலாம்.
  • வயலிலும் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள மாற்றுப் புரவலன்களை அகற்றவும் (செம்பருத்தி, இந்திய மால்லோ).
  • வயல்களைக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றவும்.
  • அறுவடைக்குப்பிறகு பாதிக்கப்பட்டத் தாவரங்களை அகற்றி, எரித்து விடவும்.
  • அந்துப்பூச்சியின் இருப்பைக் கண்காணிக்க பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க