நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

ஓரியண்டல் சிலந்திப்பேன்

Eutetranychus orientalis

சிலந்திப்பேன்

சுருக்கமாக

  • ஓரியண்டல் சிலந்திப் பேன் நார்த்தை சிவப்பு சிலந்திப்பேனின் உண்ணும் சேதத்திற்கு ஒற்றுமையைக் கொண்டுள்ளது.
  • இலைகள் வெளிறிய நிறமாகி, கடுமையான நோய்த்தொற்றின்போது முன்கூட்டிய இலை உதிர்தல், கிளை இறப்பு, பழங்களின் தரம் குறைதல் மற்றும் மரங்களின் வீரியம் குறைதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.
  • நல்ல முறையில் நீர் வழங்குவதானது இந்த பூச்சியால் ஏற்படும் பாதிப்புகளையும் சேதத்தையும் குறைக்கிறது.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இலையின் மேற்பரப்பில் காணப்படும் உண்ணும் சேதங்கள் மூலம் இந்த நோயின் சேதம் வகைப்படுத்தப்படுகிறது, இந்த சேதங்கள் முக்கியமாக மைய நரம்பு நெடுகிலும், பக்கவாட்டு நரம்புகளிலும் பரவி காணப்படுகிறது. மைய நரம்பு மற்றும் இலை நரம்புகள் நெடுகிலும் வெளிறிய-மஞ்சள் நிற கோடுகள் உருவாகும், இறுதியாக இலைகள் வெளிறிய நிறமாகும். சில நேரங்களில், இலைகள் தூசியால் நன்கு மூடியிருப்பதை போன்று தோன்றும், சிறிய வலைகளும் காணப்படும். பாதிக்கப்பட்ட இளம் இலைகளின் ஓரங்கள் மேல்நோக்கி சுருண்டுகொள்ளும். அதிகப்படியான நோய்த்தொற்றின்போது, சிலந்திப்பேன்கள் மொத்த இலை மேற்பரப்பினை உண்டு, அதன் மீது முட்டைகளை இடும். இது முன் கூட்டியே இலை உதிர்வு, கிளைகள் நுனியிலிருந்து இறந்து போகுதல் மற்றும் பழ உதிர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அடுத்த ஆண்டினுடைய பூப்பூக்கும் தன்மையும் கடுமையாக பாதிக்கப்படலாம். மரங்கள் நீர் அழுத்தத்தில் இருந்தால், குறைந்த அளவிலான பூச்சிகளின் எண்ணிக்கை கூட பழங்களில் வெளிறிய சோகை மற்றும் முன்கூட்டிய இலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயுடெட்ரானிக்கஸ் ஓரியண்டலிஸ் என்பவற்றுக்கு ஏராளமான இரைப்பிடித்துண்ணிகள் மற்றும் பிற இயற்கை எதிரிகள் உள்ளன, அதன் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான சமயங்களில் இவை போதுமானது. நார்த்தை ஓரியண்டல் சிலந்திப்பேனை திறம்பட கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பல பைட்டோசெய்டே மற்றும் ஸ்டிக்மெய்டே சிலந்திப்பேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, எ.கா.: இயுசியஸ் ஸ்டிபுலேட்டஸ், டைஃப்ளோட்ரோமஸ் ஃபியாலடஸ், நியோசீலஸ் கலிஃபோர்னிகஸ், பைட்டோசீயுலஸ் பெர்சிமிலிஸ். ஸ்டெத்தொரஸ் எஸ்பிபி மற்றும் ஓரியஸ் த்ரிபோபோரஸ் போன்ற கொள்ளை வண்டுகளும், கண்ணாடி இறக்கை பூச்சிகளும் சிலந்திப்பேன்களை உண்ணுகின்றன. பூச்சியிலிருந்து விடுபட உங்கள் தாவரங்கள் மீது கந்தகத்தை தூவவும் அல்லது தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். 20% இலைகள் மற்றும் / அல்லது பழங்கள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு சிகிச்சையளிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் பரந்த-வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகள் நிலைமையை மோசமாக்கும். பல வகையான சிலந்தி பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு எதிர்ப்பு திறனின் வளர்ச்சியைத் தவிர்க்கிறது. ஃப்ளூபென்ஸிமைன், ஓமெத்தோயேட் மற்றும் டைகோஃபோல் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் நல்ல பயனுள்ள நடவடிக்கையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது இயுடெட்ரானிக்கஸ் ஓரியண்டலிஸ் எனப்படும் நார்த்தை ஓரியண்டல் சிலந்திப்பேனின் முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகளின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இவை நீள்-வட்ட வடிவில், தட்டையான உடல் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் இவற்றின் நிறம் வெளிர்-பழுப்பு, செம்-பழுப்பு முதல் அடர்-பச்சை நிறம் வரையில் வேறுபடுகிறது. இவை கரும் புள்ளிகளையும், உடலளவு நீளம் கொண்ட வெளிர்நிற கால்களையும் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் நார்த்தை மரங்களையும், எப்போதாவது பாதாம், வாழைப்பழங்கள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பருத்தி போன்ற பயிர்களையும் பாதிக்கின்றன. பொதுவாக, இலையின் மேற்பரப்பில் காணப்படும் இவை, முக்கியமாக காற்று வழியாக பரவுகிறது. ஆண்டுக்கு 8 - 27 தலைமுறைகள் என்ற புவியியல் நிகழ்வு வரம்பைப் பொறுத்து, ஒவ்வொரு பெண் பூச்சிகளும் தங்கள் வாழ்நாளில் (2-3 வாரங்கள்) 30-40 முட்டைகளை இடுகின்றன. மிகக் குறைந்த அல்லது அதிக ஈரப்பதம், அதிக காற்று, வறட்சி அல்லது மோசமாக வளர்ந்த வேர் அமைப்பு நிலைமையை மோசமாக்கும். ஓரியண்டல் சிலந்திப் பூச்சிக்கான உகந்த நிலைமைகள் 21-27 ° செல்சியஸ் மற்றும் 59-70% ஈரப்பதம் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு வாரந்தோறும் பழத்தோட்டங்களை பூதக்கண்ணாடி கொண்டு கண்காணிக்கவும்.
  • பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை எதிர்மறையாக பாதிக்கும்.
  • மரத்திற்கு ஒழுங்காக தண்ணீர் ஊற்றவும், வெப்பமான காலநிலையில் வறட்சிக்கான அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
  • கிளைகள் நிலத்தில் இருக்கும் புற்கள் அல்லது களைகள் மீது படாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • பழத்தோட்டத்தை களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • அறுவடைக்குப் பிறகு கழிவு மற்றும் குப்பைகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க