நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

சிவப்பு செதில் பூச்சி

Aonidiella aurantii

பூச்சி

சுருக்கமாக

  • சிறிய சிவப்பு செதில் பூச்சிகள் இலைகள், தண்டுகள், கிளைகள் மற்றும் பழங்களைத் தாக்கும்.
  • இலைகள் வாடி, முதிர்ச்சியடைவதற்கு முன்னரே உதிர்ந்து விடும்.
  • சிதைந்த பழங்கள் குறைவான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும்.
  • கடுமையான நோய்த்தொற்றுகள் தற்போதைய பருவத்தின் விளைச்சலை மட்டுமல்லாமல், அடுத்து வரும் பருவங்களின் விளைச்சலையும் குறைக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

ஏராளமான, சிறிய கரும் பழுப்பு முதல் சிவப்பு நிறம் வரையிலான செதில்கள் இலைகள் (பெரும்பாலும் முக்கிய நரம்புடன்), சிறுகிளைகள், கிளைகள் மற்றும் பழங்களில் காணப்படும். இவை ஓரளவு தெளிவான மையப்பகுதியுடன் உப்பிய, கூம்பு வடிவப் புள்ளிகள் போன்று காணப்படும் (எரிமலை போன்ற வடிவம்). அவை உண்ணும் இடங்களில் அந்த புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் நிற ஒளிவட்டங்கள் காணப்படும். கடுமையான தொற்றுநோய்களில், இலைகள் வாடி, இலை உதிர்வு ஏற்பட்டு, முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இலைகள் கீழே விழுந்துவிடும். பாதிக்கப்பட்ட சிறுகிளைகள் இறந்து, கடுமையான நோய்த் தொற்றுகளில் அவை பெரும் கிளைகள் வரை பரவக்கூடும். பழங்களில் எண்ணற்றச் செதில்கள் படிந்து, பழங்கள் உருக்குலைந்ததாக வளர்ந்து, இறுதியாக உலர்ந்து, மரம் கீழே விழக்கூடும். எண்ணற்றக் கிளைகள் இறந்துபோனால், இளம் மரங்களின் வளர்ச்சி கடுமையாக் குன்றிப்போகும் அல்லது இறந்துவிடவும் கூடும். சிவப்பு செதில் பூச்சிகள் தேன்துளிகளையும் வெளிப்படுத்தும், இது இலைகள் மற்றும் பழங்கள் மீது பூசணம் உருவாக வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அயோனிடியெல்லா அவுரண்டியின் இயற்கை எதிரிகளுள் ஒட்டுண்ணிக் குளவிகளான அஃபிடிஸ் மெலினஸ் மற்றும் காம்பெரியெல்லா பிஃபாசியேட்டா மற்றும் ஊர்ப்புழுக்களைத் தாக்கும் இரைப்பிடித்துண்ணிகளான ஹெமிஸார்கோப்டெஸ் மலுஸ் உள்ளிட்டவை அடங்கும். எறும்புகளைக் கட்டுப்படுத்துதல் சிவப்பு செதில் பூச்சிகளின் உயிரியல் கட்டுப்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இயற்கை எதிரிகளிடமிருந்து செதில் பூச்சிகளைக் காப்பாற்றும். இலைகள் மற்றும் பழங்களில் உள்ள செதில் பூச்சிகளை அகற்றுவதற்கு இயற்கையானது என அனுமதிக்கப்பட்ட பெட்ரோலியம் எண்ணெய்த் தெளிப்பான்களையும் பயன்படுத்தலாம். அறுவடைக்குப் பிறகு உங்களது பழங்கள் மீதுள்ள செதில்களை அகற்றுவதற்காக அதிக அழுத்தத்தில் நீர் பாய்ச்சி கழுவவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குறுகிய வீச்சினை உடைய தெளிப்பான்கள் இயற்கை எதிரிகளின் மீது குறைந்தப்பட்ச இடையூறை மட்டுமே ஏற்படுத்தும், மேலும் இவற்றைக் கோடைகாலத்தின் நடுப்பகுதியில் சிறப்பாகப் பயன்படுத்தலாம். 25% க்கும் அதிகமான பழங்கள் பாதிக்கப்படும்போது, சரியான இரசாயணத் தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட வேண்டும். செதில்பூச்சிகளின் எண்ணிக்கை எல்லையை மீறும்போது, குளோர்பைரிஃபோஸ், கார்பரில், மாலத்தியான் அல்லது டைமெத்தோயேட் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழத்தோட்டங்களின் பாகங்கள் மீது பயன்படுத்தலாம். நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கும் வகையில், பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது அயோனிடியெல்லா அவுரண்டி என்னும் சிவப்பு செதில் பூச்சிகளின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இது உலகளாவிய நார்த்தை மரங்களின் முக்கியமான நோய்ப்பூச்சியாகும். இது வெப்பமண்டலப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. அறுவடைக்குப்பிறகு இது மரத்திலும் இலைகளிலும் உயிர்வாழ்ந்து, அடுத்து வரும் பருவத்தில் புதிதாக வளரும் தாவரங்களைப் பாதிக்கக்கூடும். நகரும் நிலையில், உண்ணுவதற்கான இடத்தைத் தேடும்போது பெண் பூச்சிகளானது ஒளியால் பெரிதும் கவரப்படுகின்றன. இவை முட்டைகள் இடுவதில்லை, மாறாக மிகவும் சுறுசுறுப்பான ஊர்ப்புழுக்களை ஈன்றெடுக்கின்றன. இவை இலைகளின் மேற்புறத்தில் அல்லது அழுத்தத்தினால் இளம் பழங்களின் மீது ஒருமுறை தங்கியதும், இவை செயலற்றதாக மாறிவிடும். பஞ்சு போன்ற பொருட்களால் மூடியிருக்கும் குறுகிய கட்டத்தைக் கடந்த பிறகு, இவை இறுதியில் வட்ட வடிவில் தட்டையான வடிவத்தையும், தனித்துவமான சிவந்த-பழுப்பு நிறத்தையும் பெறும். இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி வெப்பநிலை மற்றும் மரத்தின் ஆரோக்கியத்துடன் மிகவும் தொடர்புடையதாக உள்ளது. எனவே, மரங்கள் ஈரப்பத அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது கோடைகாலத்தின் இறுதியில் மிகப்பெரிய சேதம் ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • பெண் பூச்சிகளைக் கவர்வதற்கும், நோய்த்தொற்றின் தீவிரத்தை மதிப்பீடு செய்வதற்கும் பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • செதில் பூச்சிகளின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனத் தொடர்ந்து தோட்டங்களைக் கண்காணித்து, அவை குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டால், அவற்றை அப்புறப்படுத்தவும்.
  • பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுகிளைகள் அல்லது கிளைகளை அகற்றவும்.
  • கவிகைக்குள் காற்றோட்டத்தை அதிகரிக்கவும், செதில்களுக்கு சாதகமற்ற சூழலை உருவாக்கவும், போதுமான அளவு மரங்களைச் சீர்திருத்தம் செய்யவும்.
  • செதில்களுக்கு உணவாக இருக்கும் எறும்புகளைப் பிடிக்க அல்லது தடுக்கப் பொறிகள் அல்லது தடைகளை அமைக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கும் வகையில் பரந்த அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாதீர்கள்.
  • சாலைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும் மரங்களை அலசுவதன் மூலம் இலைகள் மற்றும் பழங்களின் மீது தூசு படிவதைக் குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க