நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

பழுப்புநிற மென் செதில் பூச்சி

Coccus hesperidum

பூச்சி

சுருக்கமாக

  • பழுப்பு நிற மென் செதில் பூச்சிகள் தண்டுகள், இலைகள், சிறு கிளைகள் மற்றும் சில நேரங்களில் பழங்களையும் உண்ணுகின்றன.
  • இவற்றின் உண்ணும் சேதங்களானது இலைகள் மஞ்சள் நிறமாவது மூலம் வெளிப்படுகிறது, கடுமையான பாதிப்புகளில் இலை உதிர்தலும் ஏற்படுகின்றன.
  • நேரடியாக செதில் பூச்சிகளின் மூலம் ஏற்படும் சேதங்களை விடக் கரும்பூசண நோயால் மறைமுகமாக ஏற்படும் சேதங்கள் அதிகம்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

அறிகுறிகளானது தாக்குதலின் தீவிரத்தையும், நார்த்தையின் ரகத்தையும் சார்ந்து இருக்கும் (எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் குறிப்பாகப் பாதிக்கப்படும்). செதில் பூச்சிகளானது பொதுவாக நிலப்பகுதிக்கு அருகே உள்ள தண்டுகள், இலைகள், சிறு கிளைகள் மற்றும் எப்போதாவது பழங்கள் முதலியவற்றை உண்ணும். இந்த நோய்ப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை, இவற்றினால் ஏற்படும் நேரடியான சேதங்கள் வெளிப்படையாகத் தெரியாது. இவற்றின் உண்ணும் சேதங்களானது இலைகள் மஞ்சள் நிறமாவது மூலம் வெளிப்படுகிறது, கடுமையான பாதிப்புகளில் இலை உதிர்தலும் ஏற்படுகின்றன. செதில் பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படும் தேன்துளிகளானது கரும் பூசணத்தால் பாதிக்கப்படக்கூடும், இது இலைகளையும் பழங்களையும் கருப்பு நிறமாக்கும். இது செதில் பூச்சிகள் ஏற்படுத்துவதை விட அதிகமான சேதங்களை ஏற்படுத்தும். பலவீனமான மரங்களில் குறைந்த அளவிலான பழங்கள் மட்டுமே காய்க்கும், அத்தகைய பழங்கள் முதிர்ச்சி நிலையை அடைந்தாலும், அவை சிறிய அளவில் இருக்கும். சி. ஹெஸ்பெரிடம் இவற்றின் புரவலனை அரிதாக அழித்தாலும், இளம் நார்த்தை மரங்கள் அதன் வளர்ச்சி மற்றும் எதிர்கால உற்பத்தியில் பாதிப்படையும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணிக் குளவிகள் மெட்டாஃபைகஸ் லூட்டியோலஸ், மைக்ரோடெரிஸ் நீட்னெரி, மெட்டாஃபைகஸ் ஹெல்வோலஸ், என்சிர்டஸ் எஸ்பிபி, என்கார்சியா சிட்ரினா மற்றும் எறும்பு சகிப்புத்தன்மையுள்ள கோகோபாகஸ் எஸ்பிபி உள்ளிட்டவை இந்த நோய்ப்பூச்சியின் இயற்கை எதிரிகளுள் அடங்கும். ஒட்டுண்ணி ஈக்கள், கண்ணாடி இறக்கைப் பூச்சி (க்ரிசோபா, கிரைசோபெர்லா) மற்றும் ஸ்குடெல்லிஸ்டா சையனியா, அதேபோல் பெண்வண்டுகள் ரைசோபியஸ் லோபந்தே போன்றவை மிகவும் பொதுவான இரைப்பிடித் துண்ணிகளாகும். பூச்சியுண்ணும் பூஞ்சை (வெர்டிகுல்லியம் லெகாணி) மற்றும் நூற்புழு ஸ்டெய்னெர்னெமா ஃபெல்டியே ஆகியவை ஒப்பீட்டளவில் அதிக ஈரப்பதமான சூழலின் கீழ் சிறப்பாகச் செயல்படுகின்றன. தாவர எண்ணெய்கள்/சாறுகள் உள்ளிட்டவை கரிம தெளிப்பான்களுள் அடங்கும் (எடுத்துக்காட்டாக பைரெத்ரம் அல்லது கொழுப்பு அமிலங்கள்).

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பழுப்பு நிற மென் செதில் பூச்சிகள் ஆச்சரியத்தக்க விதமாகக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். குளோர்பைரிஃபோஸ், கார்பரில், டைமெத்தோயேட் அல்லது மாலத்தியான் ஆகியவற்றைக் கொண்ட தயாரிப்புகள் இந்த நோய்ப்பூச்சிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன. இந்தச் சிகிச்சைகளுக்கு ஈடு செய்யும் வகையில் குறுகிய வரம்பு எண்ணெய்த் தெளிப்பானையும் பயன்படுத்தலாம். கரும்பூசண நோயின் ஆதிக்கத்தைத் தடுக்கப் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பரந்த-அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இவை நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது காக்கஸ் ஹெஸ்பிரிடம் என்னும் பழுப்பு நிற மென் செதில் பூச்சியின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இது நார்த்தை மரங்களைத் தாக்கும் பொதுவான நோய்ப்பூச்சியாகும். இது குறிப்பாக வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களிலும், கண்ணாடிக் கூடியிலும் காணப்படுகின்றன. இவற்றின் உச்சகட்டப் பருவமானது கோடைகால நடுப்பகுதி முதல் இலையுதிர் காலத்தின் ஆரம்பமாகும். ஆண் பூச்சிகள் நகரக்கூடியது மற்றும் இவை இரட்டை இறக்கைக் குளவிகள் அல்லது ஈக்களைப் போன்று இருக்கும், ஆனால் இவற்றைக் காணுவது அரிது. பெண்பூச்சிகளானது நீள் வட்ட வடிவில், தட்டையாகவும், மென்மையாகவும், இலைகளின் அடிப்புறத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இவை முதிர்ச்சியடைகையில், இவற்றின் நிறம் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாகும். இவை ஒரு வகையான அடைகளுக்குள் முட்டைகளை இடும். அங்கிருந்து, சிறிய பூச்சிகள் சிறு கிளைகள், இலைகளின் மையநரம்பு நெடுகில் அல்லது பழங்களில் தான் உண்ணுவதற்கான இடத்தை விரைவாகத் தேடி அங்கு சென்றடையும். காற்றும் அவற்றை அருகிலுள்ள மரங்களுக்கு எடுத்துச் சென்று, இந்த நோய்ப்பூச்சிகளைப் பரவச்செய்யும்.


தடுப்பு முறைகள்

  • கண்ணாடிக்கூடியில் அல்லது வயல்களில் நடவு செய்வதற்கு முன் அனைத்துத் தாவரப் பொருட்களையும் செதில் பூச்சிகளுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனப் பரிசோதிக்கவும்.
  • சேத்தில் பூச்சிகளுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனத் தோட்டங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • அவை குறைவான எண்ணிக்கையில் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிடவும்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகளையும் சிறுகிளைகளையும் அகற்றி, எரித்து விடவும்.
  • கவிகைகளில் காற்றோட்டத்தை மேம்படுத்த, செதில் பூச்சிகளுக்கான சாதகமற்ற சூழலை உருவாக்க, போதுமான அளவு மரங்களை சீர்திருத்தம் செய்யுங்கள்.
  • செதில் பூச்சிகளுக்கு உணவு வழங்கும் எறும்புகளைத் தடுக்க, தண்டுகள் மற்றும் மரப்பட்டைகளைச் சுற்றித் தடுப்புகள் அல்லது பொறிகளை அமைக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கும் வகையில், பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க