நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நார்த்தை சில்லிட்

Diaphorina citri

பூச்சி

சுருக்கமாக

  • முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகளின் உண்ணும் செயல்பாடானது மொட்டுகள், மலர்கள், மென்மையான தளிர்கள் மற்றும் சிறிய பழங்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தி, அவற்றை பலவீனமாக்குகின்றன.
  • சாம்பல் நிறப் பூசண வளர்ச்சியானது ஒளிச்சேர்க்கை செயல்பாட்டினைக் குறைக்கின்றன.
  • புதிய இலைகள் முறுக்கிக்கொண்டு, சுருங்கிக்கொள்ளுதல், தளிர்களின் நீளம் குன்றுதல் போன்றவை பெரும்பாலும் 'சூனியக்காரர்களின் தலை' போன்று, சிறிய கிளைகளுடன் தாவரங்கள் அசாதாரண வளர்ச்சியுடன் தோற்றமளிப்பதற்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

நார்த்தை சில்லிட் பருவகாலத்தைப் பொறுத்து நார்த்தை மரங்களைப் பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகளின் உண்ணும் செயல்பாடானது பருவகாலத்தின் புதிய படைப்புகள் அதாவது, மொட்டுகள், மலர்கள், மென்மையான தளிர்கள் மற்றும் சிறிய பழங்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தி, அவற்றை பலவீனமாக்குகின்றன. சர்க்கரை தாவரச்சாறுகளை உண்ணும்போது உற்பத்தியாகும் எண்ணற்ற தேன்துளிகள் கரும்பூசண வளர்ச்சிக்கும், இலைகளின் ஒளிச்சேர்க்கைச் செயல்பாடு குறைவதற்கும் வழிவகுக்கிறது. இறுதியாக, பூச்சியின் அதிகப்படியான எண்ணிக்கையின்போது, புதிய இலைகள் முறுக்கிக்கொண்டு, சுருங்கிக் கொள்ளுதல், தளிர்களின் நீளம் குன்றுதல் போன்றவை பெரும்பாலும் 'சூனியக்காரர்களின் தலை' போன்று, சிறிய கிளைகளுடன் தாவரங்கள் அசாதாரண வளர்ச்சியுடன் தோற்றமளிப்பதற்கு வழிவகுக்கும். அதிக எண்ணிக்கையிலான பூச்சிகள் இளம் மரங்களின் வளர்ச்சியைத் தடுத்து, விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது. இந்த பூச்சி மிகவும் சேதம் விளைவிக்கக்கூடும், ஏனெனில் இது நார்த்தை பசுமை நோய்ப்பூச்சியின் முக்கியக் காரணியாகவும் இருக்கிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில்லிட்ஸ்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் காலத்தில் உதாரணமாக, சூடான, வறண்ட காலநிலையில், இரைப்பிடித்துண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஓரளவுக்கு நல்ல கட்டுப்பாட்டை அளிக்கும். தமரிக்ஸியா ரேடியேட்டா அல்லது சில்லேபேகஸ் இயூபிலூரே உள்ளிட்டவை ஒட்டுண்ணிக் குளவிகளில் அடங்கும். கொள்ளை வண்டு ஆந்தோகோரிஸ் நெமோராலிஸ், கண்ணாடி இறக்கைப் பூச்சி க்ரைசோபெர்லா கார்னியா மற்றும் பெண் வண்டு காக்கினெல்லா செப்டெம்பன்க்டாடா உள்ளிட்டவை இரைப்பிடித்துண்ணி பூச்சிகளுள் அடங்கும். வேப்ப எண்ணெய் அல்லது தோட்டக்கலை எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிச் சோப்புகளும் நோய்ப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகின்றன, ஆனால் இளம் பூச்சிகள் பாதுகாப்பு மெழுகு சுரப்பியை உற்பத்தி செய்வதற்கு முன் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். டைமெத்தோயேட் அடிப்படையிலான பூச்சிகளைச் சரியான நேரத்தில் தெளித்தல், சில்லிட்ஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் இதை கடைசி வழிமுறையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூச்சிகளுக்கு சில எதிர்ப்புத் திறனை அளிக்கும் பாதுகாப்பு மெழுகினை அவை உற்பத்தி செய்வதற்கு முன்பு இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியாக பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தலானது சில்லிட்ஸ்களிடத்திலும் பிற நோய்ப்பூச்சிகளிடத்திலும் எழுச்சியினை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். முதிர்ந்த நோய்ப்பூச்சிகள் மரத்தின் மேலும் கீழும் செல்வதைக் குறைப்பதற்கு டைமெத்தோயேட் பசை (0.03%) கொண்டு மரப்பட்டைக்குச் சிகிச்சை அளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது டையஃபோரினா சிட்ரி என்னும் நார்த்தை சில்லிட்டின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் பழுப்பு கலந்த கருநிறத் தலை மற்றும் கழுத்துப்பகுதி, வெளிர் பழுப்பு நிற வயிற்றுப்பகுதி மற்றும் புள்ளிகளையுடைய மெல்லிய இறக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு 3 முதல் 4 மிமீ வரையிலான நீளத்தினைக் கொண்டிருக்கும். இவை மரப்பட்டை அல்லது முதிர்ந்த இலைகளில் உள்ள அடைக்கலமான பகுதிகளில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். வெப்பநிலையைப் பொறுத்து முதிர்ந்த சில்லிட்டின் சராசரி ஆயுட்காலம் இருக்கும், இவற்றுக்கு உகந்த வெப்பநிலை 20 - 30 °செல்சியஸ் ஆகும். குளிர்ச்சியான காலநிலை இவற்றின் ஆயுட்காலத்திற்கு உகந்ததாக இருக்கும், சூடான வெப்பநிலை இவற்றின் ஆயுட்காலத்தைக் குறைக்கும். பெண் பூச்சிகள் வசந்த காலத்தில் புதிய தளிர்கள் மற்றும் மொட்டுகளில் 800 ஆரஞ்சு முட்டைகள் வரை இடுகின்றன. இளம் பூச்சிகள் பொதுவாக மஞ்சள் நிறத்தில் தட்டையாக இருக்கும், இவை உற்பத்தி செய்யும் வெள்ளை நிற மெழுகு போன்ற சுரப்பி அவற்றை மூடிக்கொண்டு பாதுகாக்கும். வெள்ளை மெழுகு போன்ற வளர்ச்சி அல்லது நூல்கள் இவற்றை இலைப்பேன்களில் இருந்து தெளிவாக வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. முதிர்ந்த பூச்சிகளோடு ஒப்பிடுகையில், அவற்றைத் தொந்தரவு செய்யும்போது இளம் பூச்சிகள் குறைவான தூரம் மட்டுமே நகர்ந்து செல்லும். திசுக்களுக்கு ஏற்படும் சேதங்களானது அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டச்சத்துக்களை விநியோகிக்கும் தாவரத்தின் திறனைக் குறைத்து விடும்.


தடுப்பு முறைகள்

  • வசந்த காலத்தின் தொடக்கத்தில், சில்லிட் பூச்சியின் கூட்டங்கள் ஏதேனும் தென்படுகிறதா எனத் தாவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • முதிர்ந்த பூச்சிகளைப் பிடிக்க, ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்யும்போது தாவரங்களுக்கு இடையே போதுமான அளவு இடைவெளி விடவும்.
  • பரந்த அளவிலான பூச்சிகளின் அதிகப்படியான பயன்பாட்டினால் இரைப்பிடித்துண்ணும் பூச்சிகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளவும்.
  • சில்லிட் பூச்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்க, இலைத்திரள்களுக்கு போதுமான காற்றோட்டமும், நல்ல சூரிய வெளிச்சமும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • பருவகாலத்தின்போது அதிகப்படியான உரப் பயன்பாட்டினைத் தவிர்க்கவும்.
  • வறட்சியினால் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு, உலர் பருவத்தில் தோட்டங்களுக்குத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவும்.
  • அறுவடைக்குப் பின் முதிர்ந்த கிளைகள் மற்றும் குப்பைகள் இல்லாமல் பழத்தோட்டங்களைச் சுத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க