Termitidae
பூச்சி
கரையான்கள் நாற்றுகள் முதல் முதிர்ச்சியடைந்த தாவரங்கள் வரை, தாவரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாக்கும். இவை வேர்களைச் சேதப்படுத்தும், இது தாவரங்களின் மேல்பகுதி வாடிப்போகுதல் மூலம் முதலில் வெளிப்படும். கரையான் இருப்பை உறுதிப்படுத்த, பாதிக்கப்பட்டத் தாவரங்களைப் பிடுங்கி, உயிருள்ள கரையான்கள் அல்லது பொந்துகள் ஏதேனும் தென்படுகிறதா என வேர்கள் மற்றும் தண்டுகளின் அடிப்பகுதியைக் கண்காணிப்பது அவசியமாகும். தாவரங்களின் வேர்கள் மற்றும் தண்டுகள் முற்றிலும் குடையப்பட்டு, மண் கழிவுகளால் நிரப்பப்படும். சில தாவரங்கள் வலுவான காற்றின் போது சாய்ந்துவிடக்கூடும், இவை பெரும்பாலும் மண்ணால் மூடப்பட்டிருக்கும், அவற்றுக்கு அடியில் கரையான்கள் காணப்படும். அதிகாலையில் அல்லது அந்தி மாலையில் தாவரங்களை முக்கியமாகக் கண்காணிக்க வேண்டும், ஏனெனில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, கரையான்கள் மண்ணின் அடிப்பகுதிக்கு சென்று மறைந்துகொள்ளும்.
கரையான்களைத் தாக்கும் நூற்புழுக்கள் அடிப்படையிலான தயாரிப்புகள் இந்த நோய்ப்பூச்சிக்கு எதிராகத் திறன்மிக்க வகையில் செயல்படுகின்றன. பூஞ்சை பெளவேரியா பாசியானா அல்லது மெட்டார்ஹீலியம் அடிப்படையிலான சில இனங்களைக் கரையான் பொந்துக்குள் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். பூஞ்சை வித்துக்களும் எதிர்ப்பிகளாக செயல்படக்கூடும். வேப்பங்கொட்டைச் சாறுகளை மரங்களின் மீதும், வயல்களில் உள்ள பயிர்களின் மீதும் தெளித்தல், கரையான்களுக்கு எதிரான சிறந்த பலனைக் கொடுக்கிறது. கரையான்களை எதிர்க்க, அவற்றின் கூடுகளில் மரச் சாம்பல் அல்லது வேப்ப இலை அல்லது விதைகளின் தூள்களைக் கொட்டுவதும் இன்னொரு தீர்வாகும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குளோரைரிபோஸ், டெல்டாமெத்ரின் அல்லது இமிடாக்ளோபிரிட் அடிப்படையிலான தயாரிப்புகளைக் கரைசல்களாக கரையான் பொந்துகளில் செலுத்தலாம்.
கரையான்கள் பல தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் இனப்பெருக்க வடிவங்களைக் கொண்ட பெரிய குடியேற்றங்களில் வாழ்கின்றன. அவற்றின் கூடுகள் சில நேரங்களில் மிக விரிவாக இருக்கும். சில கரையான்கள் ஈரமான இறந்த மரத்துண்டுகளில் கூடுகட்டும், சில நிலப்பகுதிக்கு அடியில் கூடுகட்டும். நிலப்பகுதிக்கு அடியில் உள்ள பொந்துகள் மூலம் பாதுக்காப்பான கூட்டில் இருந்து இவை வெளியேறி, தாவர வேர்களையும் மற்றும் வயல்களில் உள்ள பிற பொருள்களையும் உண்ணுகின்றன. வேறு எந்த உணவும் கிடைக்கவில்லை என்றால், அவை தாவரங்களைத் தாக்கக்கூடும், எனவே மண்ணில் அதிகமான கரிமப் பொருட்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். இனப்பெருக்கம் செய்யும் கரையான்கள் இறக்கைகளைக் கொண்டிருக்கும். பொதுவாக அடர் நிறத்தில், நன்கு வளர்ச்சி அடைந்த கண்களுடன், இறக்கைகளை உடைய எண்ணற்ற ஆண் மற்றும் பெண் கரையான்கள் திரளாக மொய்ப்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. கன மழை தொடங்கிய பிறகு, பெரும்பாலும் அந்தி வேளையில் திரள் மொய்ப்பு நிகழ்கிறது. அவை பறந்த பிறகு, அவை இறக்கைகளை இழந்து, இனப்பெருக்கம் செய்து, புதிய குடியேற்றத்தைக் கண்டுபிடிப்பதற்காக மண்ணில் உள்ள துளைகளையும், மரத்தில் உள்ள வெடிப்புகளையும் குடையும்.