Oxycarenus hyalinipennis
பூச்சி
பருத்திக் கறை வண்டு என்றும் அழைக்கப்படும் இந்த பூச்சியும் அதன் இளசுகளும் முக்கியமாக ஓரளவுக்கு வெடித்த பருத்திக் காய்களைத் தாக்கி, பஞ்சுகளில் கறை, காய் நிறமாற்றம், அழுகல் மற்றும் எப்போதாவது உதிர்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது (பருத்தி மென்பகுதியை உண்ணும்போது பரவும் பேக்டீரியாவினாலும் ஓரளவு ஏற்படுகிறது). முறையாக முதிர்ச்சியடையத் தவருகிற, சரியாக வளர்ச்சியடையாத லேசான விதைகள் இவற்றின் பிற அறிகுறிகளாகும். அதிகப்படியான நோய்த்தொற்றினால் ஏற்படுகிற கறை படிந்த பஞ்சுகள், அவற்றின் தரத்தில் கடுமையான இழப்பை ஏற்படுத்துகிறது, எனவே இது கறை வண்டு என்னும் பெயர் பெற்றது. வெண்டைக்காய் போன்ற பிற புரவலன் தாவரங்களை உண்ணும்போது, எரிச்சலூட்டும் காரமான வாடை மற்றும் பிசுபிசுப்பான கசிவுகள் போன்றவை இவற்றின் பொதுவான அறிகுறிகளாகும்.
ஆப்பிரிக்காவில், சில வகை ஒட்டுண்ணிப் பேன்கள் வண்டுகள் மீது காணப்படுகின்றன, இதனால் இந்த நோய்ப்பூச்சி மந்தமாகி விரைவில் இறக்கின்றன. சில சிலந்திகள் இந்த பூச்சியைத் தாக்குகின்றன. நீர்த்த வேப்ப எண்ணெய் (5%), பெளவேரியா பாசியானா மற்றும் மெட்டார்ஹீலியம் அனிசோபிலியே போன்ற என்டோமோபாத்தோஜெனிக் பூஞ்சைகளுடனான இலைத்திரள் தெளிப்பான்கள் பூச்சியின் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டின் மீது சில விளைவைக் காட்டியுள்ளன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குளோர்பைரிஃபோஸ், எஸ்பென்வலேரேட், பைஃபென்திரின், டெல்டாமெத்ரின், லாம்ப்டா சைஹலோத்ரின் அல்லது இண்டோக்சாகார்ப் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிக் கலவையின் இலைத்திரள் பயன்பாடு இளஞ்சிவப்பு காய்ப்புழுவுக்கு எதிராக செயல்படுகிறது, இது தூசு படிந்த பருத்திக் கறை வண்டுகளின் எண்ணிக்கையையும் நன்கு குறைப்பதாகக் காணப்படுகிறது. இருப்பினும், இந்தப் பூச்சி பொதுவாக பருவத்தின் இறுதியில் வயல்களைப் பாதிப்பதால், அறுவடையில் எற்படும் கழிவுகளின் காரணமாக இரசாயணக் கட்டுப்பாடு பெரும்பாலும் சாத்தியமில்லை. பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் திறனும் விவரிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகளானது ஆக்சிகரேனஸ் ஹையாலினிபென்னிஸ் என்னும் தூசு படிந்த பருத்திக் கறை வண்டுகளால் ஏற்படுகிறது. பல தீனிகளை உண்ணுகிற இந்த நோய்ப்பூச்சியானது பருத்திப் பயிரில் கடுமையான சேதத்தினை ஏற்படுத்தக்கூடும். முதிர்ந்த பூச்சிகள் 4-5 மிமீ வரையிலான நீளத்தினைக் கொண்டிருக்கும், மேலும் இவை தூசு படிந்த பழுப்பு நிறத்தில் தெளிவான இறக்கைகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் பூச்சியைவிட சற்று சிறியதாக இருக்கும். விதைகளுக்கு அருகேயுள்ள வெடித்த காய்களின் பஞ்சுகளில் 4 வரை வெண்ணிற-மஞ்சள் நிற முட்டைகள் கொத்துக்களாக இடப்படும். இளம் பூச்சிகள் 2.5 மி.மீ. நீளத்தினைக் கொண்டிருக்கும், மேலும் மொத்தமாக 40-50 நாட்கள் வரை நீடிக்கும், இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் இவை இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரை மாறுபடும். நோய்த்தொற்றானது, பெரும்பாலான காய்கள் ஏற்கனவே திறந்திருக்கும் நிலையில், பருவகாலத்தின் முடிவில் ஏற்படும். மேலும் வெண்டைக்காய் மற்றும் மால்வேசியே குடும்பத்தின் பிற தாவரங்கள் இவற்றின் புரவலன் தாவரங்களாகும்.