சோயாமொச்சை

சோயாமொச்சையின் பட்டைத்துளை வண்டு

Obereopsis brevis

பூச்சி

சுருக்கமாக

  • கிளை அல்லது தண்டு மீது இரண்டு வட்ட வெட்டுக்கள்.
  • இலைகள் தாழ்ந்து, உலர்ந்து போகுதல்.
  • இளம் தாவரங்கள் வாடி, இறந்து போகுதல்.
  • மஞ்சள் கலந்த சிவப்பு நிற தலை மற்றும் மார்பு, பழுப்பு நிற இறக்கைகளால் மூடப்பட்ட வண்டுகள்.
  • முட்டைப்புழுக்கள் அடர்நிற தலைப்பகுதியுடன் வெள்ளை நிறத்தில் தோன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

காணக்கூடிய அறிகுறிகளானது நாற்றுகளாக இருக்கும் நிலையில் கிளை அல்லது தண்டு மீது காணப்படும் இரண்டு வட்ட வெட்டுக்கள் மூலம் வகைப்படுத்தப்படும். நாற்றுகள் மற்றும் இளம் தாவரங்கள் வாடிவிடக்கூடும் அல்லது இறந்துவிடக்கூடும், அதே நேரத்தில் முதிர்ந்த தாவரங்களின் இலைகள் வாடி அல்லது பழுப்பு நிறமாகவும், அனைத்தும் உலர்ந்துவிடவும் கூடும். பாதிக்கப்பட்ட கிளைகளில் வட்ட வடிவிலான வளையங்கள் காணப்படும். பயிரில் வெட்டுக்கு மேலே பாதிக்கப்பட்ட பாகங்கள் வறண்டுவிடும். நோய்த்தொற்றின் பிந்தைய நிலையில், நிலத்திற்கு மேலே சுமார் 15 - 25 செ.மீ உயரத்தில் தாவரங்கள் துண்டிக்கப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பயனுள்ள கரிம சிகிச்சை இன்று வரை எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்ல வயல் நடைமுறைகளைப் பின்பற்றி பட்டைத்துளை வண்டுகளை கட்டுக்குள் வைத்திருப்பது இன்னொரு வழிமுறையாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சேதம் 5% பொருளாதார வரம்பை மீறிவிட்டால், பட்டைத்துளை வண்டுகள் முட்டைகள் இடுவதை தவிர்க்க நீங்கள் என்எஸ்கேஇ 5% அல்லது அசாதிராச்டின் 10000 பிபிஎம் @ 1 மிலி / 1 லி தண்ணீர் என்பவற்றை பயன்படுத்தலாம். கார்டாப் ஹைட்ரோகுளோரைடு குறுமணியை ஏக்கருக்கு 4 கிலோ என்ற அளவில் விதைப்பு நேரத்தில் தூவலாம். விதைத்த 30 - 35 நாட்களுக்கு பிறகு ஒரு லிட்டர் தண்ணீருக்கு லாம்ப்டா-சைஹலோத்ரின் 5 ஈசி @ 10 மில்லி அல்லது டைமெத்தோட் 25 ஈசி @ 2 மில்லி என்பவற்றை தெளிக்கவும், மேலும் நோய்த்தொற்று தென்பட்டால், முதலில் தெளித்த 15 - 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தெளிக்கவும். குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி @ 150 மில்லி / ஹெக்டேர், ப்ரொஃபெனோபோஸ் மற்றும் ட்ரைசோபோஸ் ஆகியவை பூக்கும் நிலை அல்லது வளர்ச்சி நிலையில் பரிந்துரைக்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் பெரும்பாலும் ஒபரோப்சிஸ் ப்ரெவிஸின் வெள்ளை, மென்மையான உடல், இருண்ட தலை உடைய முட்டைப்புழுக்களால் ஏற்படுகின்றன. முதிர்ந்த பூச்சிகள் அதன் மஞ்சள் கலந்த சிவப்பு நிற தலை மற்றும் நெஞ்சு பகுதியின் நிறம் மற்றும் பழுப்பு நிற இறக்கை மூடிகளின் அடிப்புறங்கள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. பெண் பூச்சிகள் முட்டைகளை பட்டை துளைகளுக்கு இடையே இடுகின்றன. முட்டைப்புழுக்கள் தண்டுக்குள் துளையிட்டு, அவற்றின் உட்புறத்தை உண்டு, தண்டில் சுரங்கப்பாதையை உருவாக்கும். வெட்டுக்கு மேலே உள்ள பாதிக்கப்பட்ட பகுதி போதுமான ஊட்டச்சத்து பெற முடியாமல் உலர்ந்து போகிறது. கடுமையான விளைச்சல் இழப்புகள் ஏற்படுகின்றன. வண்டுக்கான சிறந்த காலநிலை 24 - 31 ° செல்சியஸ் இடையேயான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • என்ஆர்சி-12 அல்லது என்ஆர்சி-7 போன்ற சகிப்புத்தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • விதைகளை சரியான நேரத்தில் (அதாவது பருவமழை தொடக்கத்தில்) விதைக்கும்போது சமமாக விநியோகிக்கவும்.
  • தழைச்சத்து உரத்தை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை 10 நாட்களுக்கு ஒரு முறையாவது சேகரித்து அழிக்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, பயிர் எச்சங்களை அழிக்கவும்.
  • பயிர் சுழற்சி பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் மக்காச்சோளம் அல்லது சோளத்துடன் ஊடுபயிர் செய்வதைத் தவிர்க்கவும்.
  • கோடை மாதங்களில் மண்ணை ஆழமாக உழுவதன் மூலம் அடுத்த பருவத்திற்கு மண்ணைத் தயார் செய்யவும்.
  • ஷைஞ்சாவை பொறி பயிராகப் பயன்படுத்தலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க