ஆலிவ்

ஊதா தசை செதில் பூச்சி

Lepidosaphes beckii

பூச்சி

சுருக்கமாக

  • தாவரங்களின் மேற்பரப்பில் குட்டி புடைப்புகளைப் போன்று நீள்வட்ட வடிவ, தட்டையான, ஊதா கலந்த பழுப்பு நிற பூச்சிகள் காணப்படும்.
  • பழங்களில் பூச்சிகள் உண்ட இடத்தில் பச்சை நிற புள்ளிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


ஆலிவ்

அறிகுறிகள்

ஊதா தசை செதில் பூச்சிகள் பழங்கள், இலைகள், கிளைகள் மற்றும் தண்டு உள்ளிட்ட தாவரங்களின் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்ளும். இவை தாவரத்தின் சாற்றை உண்டு, பல காணக்கூடிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். செதில் பூச்சிகள் உண்ணும் இடத்தில் பழுத்த பழங்கள் பச்சை நிறமாக மாறத் தொடங்கும். இலைகள் மஞ்சள் நிறமாகி, செடியிலிருந்து உதிர்ந்து விடும். கடுமையான சந்தர்ப்பங்களில், கிளைகளின் முனைகள் காயத் தொடங்கலாம் மற்றும் இந்தச் சேதம் கிளைகளின் முக்கிய பகுதியை நோக்கி பின்னோக்கிப் பரவும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குளிர்காலத்தின் பிற்பகுதியில் முதல் முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்கு முன் அல்லது நீங்கள் ஆரம்பத்திலேயே தொற்றுநோயைக் கண்டறிந்தால், செயலற்ற எண்ணெய்கள் மற்றும் சுண்ணாம்பு கந்தகத்தைக் கொண்டு மரங்களில் தெளிக்கவும். சிறிய மரங்களைப் பொறுத்த வரையில், அல்லது பெரிய மரங்களின் அடையக்கூடிய பகுதிகளைப் பொறுத்தவரையில், நீங்கள் ஒரு பிளாஸ்டிக் டிஷ் ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி குழுமியிருக்கும் செதில் பூச்சிகளைத் துடைக்கலாம். பொதுவாக, இயற்கை எதிரிகள் இந்தப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கும், எனவே இவை பொதுவாக பெரிய பிரச்சனையாக இருக்காது.

இரசாயன கட்டுப்பாடு

இந்தப் பூச்சி பொதுவாக குறைந்தபட்ச சேதத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, இது கடுமையான தீங்கு விளைவிக்கும், எனவே இவ்வற்றுக்கு அநேகமாக இரசாயனக் கட்டுப்பாடு தேவைப்படும். இந்தப் பூச்சிகளை நீங்கள் கவனித்தால், இவற்றைப் பூச்சிக்கொல்லிகளால் கொல்வது கடினமாக இருக்கும், ஏனெனில் இவற்றின் கடினமான செதில்கள் இவற்றைப் பாதுகாக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, இளமையான, பாதுகாப்பற்ற பூச்சிகள் உண்ணுவதற்கு ஒரு இடத்தில் தஞ்சமடைவதற்கு முன்பாக சுற்றித் திரியும் பருவத்தின் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதாகும். செயற்கை பைரித்ராய்டுகள் போன்ற வலுவான, பரந்த வீச்சுடைய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது, ஏனெனில் இவை இந்த நன்மை பயக்கும் வேட்டையாடும் இனங்களைக் கொல்லக்கூடும். தாவரத்தால் உறிஞ்சக்கூடிய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த விரும்புங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

உங்கள் செடியில் உள்ள புடைப்புகள் முதிர்ந்த பெண் ஊதா நிற தசை செதில் பூச்சிகளாகும். இவை நகராமல், ஊதா கலந்த பழுப்பு நிற பாதுகாப்பு அமைப்பின் கீழ் மறைந்துகொள்ளும். பெண் பூச்சிகள் தன் பாதுகாப்பு செதில்களின் கீழ் முட்டைகளை இடும், அங்கு இவை குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் மே அல்லது ஜூன் மாத இறுதியில் குஞ்சுப் பொரிக்கும். இந்தப் பூச்சிகள் வருடத்திற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்யும். இளம் பூச்சிகள் நடந்து சென்று அல்லது காற்று, வாகனங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் மக்களின் உடைகள் மூலம் புதிய தாவரங்களுக்குப் பரவும். பூச்சிகளைச் சுமந்து செல்லும் தாவரப் பொருட்கள் மூலமாகவும் இவை பரவலாம்.


தடுப்பு முறைகள்

  • நோய்ப்பூச்சி இல்லாத பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • தாவரங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் தாவரங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இவை நோய்ப்பூச்சிகளை எதிர்க்க உதவும்.
  • பழத்தோட்டங்களில் செதில் பூச்சிகள் இருக்கிறதா என்று வழக்கமான சோதனைகள் மேற்கொள்வது அவசியம்.
  • முதிர்ந்த பூச்சிகள் இருக்கிறதா என இலைகள் அல்லது இளம் தண்டுகளின் அடிப்பகுதியை, குறிப்பாக நிழலான அல்லது பாதுகாக்கப்பட்ட இடங்களில் உள்ள இப்பகுதிகளைப் பரிசோதிக்க மறக்காதீர்கள்.
  • முன்கூட்டியே இப்பூச்சியைக் கண்டுபிடிப்பது கடினம்! முதிர்ந்த பூச்சிகளை வெறும் கண்ணால் எளிதாகப் பார்க்க முடியும் என்றாலும், இளைய பூச்சிகளைக் கண்டறிவது கடினம்.
  • முதல் தலைமுறை இளம் பூச்சிகளைக் கண்டறிய, முன்பு பாதிக்கப்பட்ட மரங்களின் சிறுகிளைகளைச் சுற்றி இரட்டை பக்கமுடைய ஒட்டும் டேப்பைக் கட்டவும்.
  • இளம் பூச்சிகள் சிறியதாகவும், தட்டையானதாகவும், ஒளிபுகும் விதமாகவும் மற்றும் மெல்லிய கால்களை உடையதாகவும் இருக்கும்.
  • டேப்பில் இளம் பூச்சிகள் சிக்கியுள்ளனவா என்பதை அறிய, ஒவ்வொரு நாளும் டேப்பை சரிபார்க்கவும்.
  • டேப் ஈரமாகவோ அல்லது தூசி நிறைந்ததாகவோ இருந்தால், அதை மாற்றவும்.
  • மாற்றாக, நீங்கள் ஒரு வெள்ளை காகிதத்தை கிளைகளின் கீழ் பிடித்து ஒரு குச்சியால் கிளைகளைத் தட்டலாம்.
  • வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும் தவளும் பூச்சிகள் கீழே விழுந்து வெள்ளை பின்னணியில் தெளிவாகக் கண்ணுக்குத் தெரியும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க