Bucculatrix thurberiella
பூச்சி
மிக அதிகமான சேதமானது, பயிர்களின் மூன்றில் ஒரு பங்கு பாகத்தில், உச்சியில் ஏற்படுகின்றன. இளம் புழுக்கள் இலைகளின் உட்புறத்தில் துளையிட்டு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் வளைந்து நெளிந்த சுரங்கங்களை உருவாக்குகின்றன. இவை பெரிதாக வளரும்போதும், இந்தச் சுரங்கங்களை விட்டு வெளியேறி, இலையின் மேற்பரப்பில் தங்கி, கீழ்ப்புற மேல் தோல் அல்லது மேற்புற மேல் தோலை மெல்கின்றன. இதனால் இளம் பழுப்பு நிறத்தில் ஜன்னல் போன்ற அமைப்புகள் தோன்றும். இந்த அமைப்புகள் சில நேரங்களில் உலர்ந்து, விழுந்துவிடுவதால், இலைகளில் ஒழுங்கற்ற துளைகள் காணப்படும். கடுமையாகத் தாக்கப்பட்ட செடிகளில், இலைகள் உதிர்ந்து விடுவதால், பருத்திக் காய்கள் முன்கூடியே விரிந்துவிடும் அல்லது மொட்டுக்களும் காய்களும் கொட்டிவிடக்கூடும்.
ஓரியஸின் சில இனங்களின் புழுக்கள், க்ரியைசோபாவின் புழுக்கள், கொலோப்ஸ் மற்றும் ஹிப்போடமியாவின் வளர்ந்த பூச்சிகள் போன்ற எதிரி இனங்கள், விளைநிலங்களில் பி.துர்பெரில்லாவின் முட்டைப்புழுக்களை உணவாகக் கொள்வதாக அறியப்பட்டுள்ளது. ஆய்வக சூழலில், வேறு எதிரி வகைகளும், அதாவது ஜியோகோரிஸ், ஸினியா மற்றும் ஸெலஸ்-ன் வளர்ந்த பூச்சிகள், மற்றும் நோபீஸின் புழுக்கள் போன்றவை, பருத்த இலை துளைப்பானின் முட்டைப்புழுவை உட்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நன்மை பயக்கும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைப் பராமரிக்க பரந்த நிலை பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஸ்பினோசாட்-இன் தெளிப்புகளும்கூட கரிம வகை பருத்தியில் ஏற்கத்தக்கது.
உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். பல பூச்சிக்கொல்லி தயாரிப்புகளையும் பருத்தி இலை துளைப்பான்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். சிறிய பூச்சிகள் இலைகளுக்குள்ளே பாதுகாக்கப்படுவதால், இவற்றின் சிகிச்சைகள் முதிர்ந்த முட்டைப்புழுக்களை இலக்காகக் கொள்ள வேண்டும். சில முக்கிய கூட்டு பொருட்களின் எடுத்துக்காட்டுகள்: மாலத்தியான், டைமீதோயேட் மற்றும் பல்வேறு பொருட்களின் கலவை.
புக்கலட்ரிக்ஸ் துர்பெரியெல்லா என்ற, பருத்தி இலை துளைப்பானின் முட்டைப்புழுக்களால், அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவற்றின் விட்டில் பூச்சிகளின் இறக்கையின் நீளம் சுமார் 7-9 மிமீ இருக்கும். முன் இறக்கைகள் வெண்மையானவை. ஆனால் இறக்கையின் அடிப்பகுதியிலிருந்து, நடுப்பகுதியை தாண்டி வரை உள்ள விளிம்பு கருப்பு நிறமாக இருக்கும். பின் இறக்கைகள் வெளிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த முட்டைப்புழுக்கள் பருத்தி மற்றும் சில காட்டுப் பயிர் உறவு வகைகளின், உதாரணமாக துர்பெரியா தெஸ்பேசியோய்டைஸ் போன்றவற்றின் இலைகளை உணவாகக் கொள்கின்றன. இளம் முட்டைப்புழுக்கள் தட்டையாக, மஞ்சளில் இருந்து ஆரஞ்சு நிறத்திலான புழுக்களாக, இலைகளில் துளையிட்டு, இலைபரப்புகளின் இடையில் சுரங்கங்களை உருவாக்குகின்றன. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் உட்புறத் திசுக்களைவிட்டு வெளியேறி, மேற்பரப்பையோ, கீழ் பரப்பையோ உண்ணத் தொடங்கும். இந்தக் கட்டத்தின் உண்ணும் செயல்கள் முடிந்தவுடன், இலைகளின் அடியில் இருக்கும் சிறிய பள்ளமான பகுதியில், இந்த முட்டைப்புழு ஒரு சிறிய வட்ட வடிவ, பட்டு போன்ற உறைவிடத்தை பின்னுகிறது. கடுமையான தாக்குதல்களில், இலைகளில் எலும்புக்கூடு போன்ற தோற்றமும், இலை உதிர்வும் ஏற்படக்கூடும்.