பருத்தி

பருத்தியின் இலைத் தத்துப்பூச்சி

Amrasca biguttula

பூச்சி

சுருக்கமாக

  • இலைகள் மஞ்சள் நிறமாகும், மேல்புறம் சுருண்டுக்கொள்ளும்.
  • பிந்தைய கட்டங்களில் ஓரங்களில் இருந்து தொடங்கி, இலைகளில் பழுப்பு நிறமாற்றம் ஏற்படும்.
  • காய்ந்த இலைகள் உதிரும்.
  • குன்றிய வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் ஓரங்களில் இருந்து மையநரம்பு வரை பழுப்பு நிறமாகத் தொடங்குகின்றன. இலைகள் முழுதுமாக உலர்ந்து உதிர்வதற்கு முன், மெதுவாகச் சுருண்டுபோவதன் அறிகுறிகளைக் காட்டுகின்றன. கடுமையான தாக்கங்கள் "தத்துப்பூச்சி எரிப்பு" என்னும் சேதத்தை ஏற்படுத்தி, இலைகள் பட்டுப் போய், இறுதியில் இளம் பயிர்களின் வளர்ச்சி குன்றுவதற்கு வழிவகுக்கின்றன. வளர்ச்சியின் பிற்பகுதியில் இருக்கும் தாவரங்கள் தாக்கப்பட்டால், அவற்றின் பழம் கொடுக்கும் திறன் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில் குறைவான விளைச்சலையும், பருத்தி இழைகளின் மோசமான தரத்தையும் ஏற்படுத்துகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பருத்தி இலைத் தத்துப்பூச்சிகளின் பொதுவான எதிரி இனங்கள், பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள் (கிரைஸோபெர்லா கார்னியா), ஒரியஸ் அல்லது ஜியோகோரிஸின் இனங்கள், கோக்கிநெல்லிட்ஸ் மற்றும் சிலந்திகளின் இனங்கள் போன்றவை ஆகும். இந்த இனங்களை ஊக்குவிப்பதையும், பரந்த நிலை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதையும் உறுதி செய்யவும். முதல் அறிகுறிகள் தென்படும்போது ஸ்பினோசாட் (0.35 மிலி/லி) என்பவற்றை பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். மாலதியான், சைபர்மெத்ரின் (1 மிலி/லி), சல்ஃபோக்ஸாஃபுளோர், குளோர்பைரிபாஸ் (2.5 மிலி/லி) , டைமீத்தோயேட் , லாம்ப்டாசைஹலோதிரின் (1 மிலி/லி) அல்லது குளோரன்டிரானிலிப்ரோல் லாம்ப்டாசைஹலோதிரின் (0 .5 மிலி/லி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லி தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும் அவை இலைத் தத்துப்பூச்சிகளின் இயற்கையான எதிரிகளையும் பாதிக்கலாம் என்பதால் கடுமையான நிலைமைகளிலும், சரியான நேரத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பூச்சிக்கொல்லிகளை கொண்டு விதை சிகிச்சைகளை மேற்கொள்வதும், 45-50 நாட்களுக்குப் பயிரில் இலைத் தத்துப்பூச்சிகளை அடக்கிவிடக் கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

அம்ராஸ்கா பூச்சியின் புழுக்கள், வளர்ந்த பூச்சிகள் இரண்டுமே சேதங்களை ஏற்படுத்துகின்றன. இவை தாவரத்தின் சத்துக்களை உறிஞ்சி, தம் எச்சிலின் நச்சுகளை உட்புகுத்துகின்றன. இந்த நச்சுக்கள், திசுவிற்குச் சேதம் விளைவித்து, ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கின்றன. 21 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலான மிதமானதிலிருந்து உயர்ந்த வெப்பநிலை மற்றும் 55 முதல் 85% வரையிலான ஈரப்பத வரம்புகள் இந்தப் பூச்சியின் இருப்பையும், செயல்பாடுகளையும் ஊக்குவிக்கின்றன. குறைந்த வெப்பநிலைகளும், கடுமையான காற்றுகளும் இந்தப் பூச்சிகளின் செயல்பாட்டை தடுக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி அல்லது சகிப்புத்தன்மை கொண்ட வகைகளை (கடைகளில் பல கிடைக்கின்றன) பயிரிடவும்.
  • பருத்தி இலைத் தத்துப்பூச்சியின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பழத்தோட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • சமநிலையான உரமிடுதலைப் பராமரிக்கவும்.
  • குறிப்பாக நைட்ரஜனை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க