வாழைப் பழம்

வாழைப்பழத் தழும்பூக்கி வண்டு

Colaspis hypochlora

பூச்சி

சுருக்கமாக

  • பழத்தோல் மற்றும் இளம் இலைகளில் புள்ளிகள் அல்லது கடுமையான தழும்புகள் காணப்படும்.
  • தழும்புகள் நீள்வட்ட வடிவில் இருக்கும்.
  • உண்ணும் முட்டைப்புழுக்களால் வேர்கள் சேதமடையும்.

இதிலும் கூடக் காணப்படும்


வாழைப் பழம்

அறிகுறிகள்

முதிர்ந்த வண்டுகள் பல்வேறு களைகளை உண்ணுகின்றன, அத்துடன் வாழை மரங்களின் முளைத்த இளம் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் ஆகியவற்றையும் உண்ணுகின்றன. இவை இளம் பழங்களையும் உண்டு, அதன் தோலில் புள்ளிகள் மற்றும் தழும்புகளை ஏற்படுத்தி, அதனை சிதையச்செய்து மற்றும் அதனை விற்க முடியாமல் மாற்றிவிடுகிறது. பெரும்பாலான தழும்புகள் பழங்களின் அடிப்பகுதியில் ஏற்படுகின்றன, இந்த செயலானது வண்டுகள் தான் உண்ணுவதற்கு மறைவான இடங்களையே (உதாரணத்திற்கு பூக்காம்பிலைகளுக்கு கீழ்) தேர்வு செய்கிறது என்ற தகவலைப் பிரதிபலிக்கிறது. தழும்புகள் பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் இருக்கின்றன மற்றும் இந்தத் தழும்புகள் பழ தழும்பூக்கி வண்டுகளான மெல்போனா அமல்தியேவுடன் ஒத்திருக்கும். திசுக்களில் குடியேற்றம் அடையும் சந்தர்ப்பவாத நோய்ப்பூச்சிகளால் இந்தச் சேதங்கள் மிகவும் மோசத்தை ஏற்படுத்தும். முட்டைப்புழுக்கள் இளம் வேர்களை உண்ணும், மேலும் முதிர்ந்த வேர்களின் திசுக்களை உண்ண அவற்றைத் துளையிடும். பொதுவாக, மழைக்காலத்தின் போது, இந்தப் பூச்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றுவரை இந்தப் பூச்சிக்கு எதிரான உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கவில்லை. ஒரு நல்ல களையெடுப்பு முறையை செயல்படுத்துவதே இதன் இனப்பெருக்கத்தைத் தவிர்க்க சிறந்த தடுப்பு நடவடிக்கை ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பொதுவாக, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை, உதாரணமாக, முறையான களையெடுப்பு பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, போதுமான அளவில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் தவிர்க்கிறது. பூச்சி சுமையைப் பொறுத்து சுழற்சி முறையில் பூச்சிக்கொல்லி சேர்மங்களை (0,1%) தெளிப்பான்களாகப் பயன்படுத்தலாம். எனினும், வண்டுகள் கடுமையான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் வரையில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான சேதங்களானது கொலாஸ்பிஸ் ஹைபோகுளோரா என்னும் வாழைப்பழத் தழும்பூக்கி வண்டுகளால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் சிறிய இணையான புள்ளிகளைத் தனித்துவமான வரிசைகளுடன் பழுப்பு நிற முன் இறக்கைகளைக் கொண்டு இருக்கும். இவை நன்கு பறக்கக்கூடியவை. பெண் பூச்சிகள் 5 முதல் 45 வரையிலான வெளிறிய எலுமிச்சை - மஞ்சள் நிற முட்டைகளை ஒற்றையாகவோ அல்லது கொத்துக்களாகவோ இடும். தலைப்பகுதிக்கு அருகே உள்ளே இலை உறைகளில் உள்ள குழித் துண்டுகளில் அல்லது இயற்கைத் தாக்கங்களால் வெளிப்படும் வேர்களின் மேற்பரப்பில் முட்டைகள் இடப்படும். 7 முதல் 9 நாட்களுக்குப் பிறகு, முட்டையிலிருந்து புதிதாக வெளிவந்த முட்டைப்புழுக்கள் இளம் வேர்களை உண்ணத் தொடங்கும், அல்லது முதிர்ந்த வேர்களை உண்ண மென்மையான மேல்புறத் திசுக்களை துளையிடும். இவை வெண்மையான, மெல்லிய, மற்றும் முடி உடலையும் மற்றும் அவற்றின் தலை சற்றே அரக்கு பிசின் நிறத்திலும் கொண்டு காணப்படும். கூட்டுப்புழுக்கள் அழுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும், இவை முதிர்ச்சியடைந்து பறக்கும் நிலையில் கரு மஞ்சள் நிறமாகிறது.


தடுப்பு முறைகள்

  • தோட்டங்களில் உள்ள களைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துங்கள், ஏனெனில் களைகளில் பூச்சிகள் வளரக்கூடும்.
  • வடிகால் கால்வாய்களுக்கு அருகில் வாழை மரங்கள் நடுவதைத் தவிர்க்கவும்.
  • தரைமட்டத்திற்குக் கீழே உள்ள போலித் தண்டுகளை நீக்கி மற்றும் முட்டைப்புழுக்கள் முதிர்ச்சியடையும் வேர் தண்டுகளைச் சீரமைக்கவும்.
  • தோட்டத்தில் சேதமடைந்திருக்கும் தாவர பாகங்களை அகற்றவும்.
  • இரைப்பிடித்துண்ணிகளுக்கு முட்டைப்புழுக்களை வெளிப்படுத்த மண்ணின் மேற்பரப்பைக் கிளறவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க