Nacoleia octasema
பூச்சி
வாழைப்பழ சுண்டு அந்துப்பூச்சிகளால் ஏற்படும் சேதங்களானது முட்டைப்புழுக்களின் நிலைகளால் ஏற்படுகிறது, மேலும் அவை பிரதானமாக பழங்களை சார்ந்திருக்கிறது. முட்டைப்புழுக்கள் பூவடிச்செதில்களால் பாதிக்கப்பட்ட பழ குலைகளைத் தாக்குகிறது. முட்டைப்புழுக்கள் வெளிவந்த பிறகு, அவை மஞ்சரிகள் மற்றும் வளரும் பழங்களின் மேல்புறத்தை உண்டு, அவற்றை சேதப்படுத்தும். இதன் விளைவாக வடுக்கள் ஏற்பட்டு அவை விரைவாக கருப்பு நிறமாக மாறும். காலப்போக்கில், பூவடிச் செதில் உயர்ந்து, விழுவதால், அவை குலைகளுக்கு கீழே இறங்கி, இளம் குலைகளுக்கு சென்று மேலும் பழங்களைத் தாக்கும். வேறொன்றும் கிடைக்கவில்லை என்றால், முட்டைப்புழுக்கள் குலைகளிலேயே இருந்து, ஆண் மஞ்சரிகள் அல்லது முதிர்ந்த பழங்களை உண்ணும். பெரும்பாலும், வாழைப்பழ சுண்டு அந்துப்பூச்சி உண்ணுவதனால் மட்டும் ஏற்படக்கூடிய தெளிவான ஜெல்லியைப் போன்ற பொருள் இந்த இடங்களில் காணப்படும். பழங்களில் ஏற்படும் சிரங்குகள் அவற்றை விற்பனை செய்யமுடியாமல் மாற்றிவிடும்.
இந்த பூச்சிக்கு எதிராக ஒட்டுண்ணி அல்லது இரைப்பிடித்துண்ணிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. சில குளவி ஒட்டுண்ணிகள், சிலந்திகள் மற்றும் பிற பொது இரைப்பிடித்துண்ணிகள் குறைந்த அளவு இயற்கை கட்டுப்பாட்டை வழங்குகின்றன. தாவரங்கள் மற்றும் குலைகளில் பொதுவாக காணப்படும் டெட்ராமரியம் பைகரிநேட்டம், வாழைப்பழ அந்துப்பூச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்துகிறது. ஸ்பினோசாட், பூஞ்சை பௌவரியா பாஸியானா அல்லது மெட்டார்ஹீலியம் அனிசோபிலியே அல்லது பாக்டீரியா துரிங்ஜென்சிஸ் போன்ற சூத்திரங்களைக் கொண்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளும் பயனுள்ளதாக இருக்கும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். க்ளோரோபைரிபாஸ், பைபின்திரின் மற்றும் பெண்டியோகார்ப் ஆகியவற்றின் அடிப்படையிலான கலவைகள் பொதுவாக குலைகளில் ஊசிப்போடுவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றன. தாவரங்களின் கழுத்துப்பகுதியில் குலைகள் நேராக இருக்கும்போதே சிகிச்சைகளை செய்ய வேண்டும். குலையின் உச்சியில் இருந்து மூன்றில் ஒரு பங்குக்கு கீழே 20 முதல் 40 மில்லி அடர்க்குறைந்த பூச்சிக்கொல்லிகளை சரியான விகிதத்தில் ஊசி மூலம் உட்செலுத்த வேண்டும். அதற்கு மேலே அல்லது கீழே ஊசிபோடுதல், பழத்தை சேதப்படுத்தும் அல்லது பயனுள்ளதாக இருக்காது.
சேதங்களானது நகோலியா ஆக்டசிமா என்னும் வாழைப்பழ சுண்டு அந்துப்பூச்சியால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் தனது இறக்கைகளில் கரும் புள்ளிகளுடன் வெளிர் பழுப்பு அல்லது மஞ்சள்-பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த குறைந்த வாழ்நாள் கொண்ட அந்துப்பூச்சி (4-5 நாட்கள்) அந்தி ஒளி செயல்பாட்டு பழக்கத்தை உடையது, மேலும் இவை மாலை நேரத்தின் ஆரம்பத்தில் இனப்பெருக்கம் செய்யும். பகலில் அவை, கழிவுகள் மற்றும் முதிர்ந்த இலை கணுவிடுக்கில் ஒழிந்து கொள்ளும். பெண் பூச்சிகள் வளரும் குலைகள் அல்லது இலைகள் மற்றும் பூக்காம்புகளைச் சுற்றி முட்டையிடும். முட்டைப்புழுக்கள் வெளியே வந்த பிறகு, அவை தானே குலைகளுக்குச் சென்று உண்ண ஆரம்பிக்கும். முட்டை பொரித்ததிலிருந்து, முட்டை இடுவது வரை அதன் வாழ்க்கை சுழற்சி 28 நாட்களில் நிறைவு அடையும். ஈரமான மற்றும் வெதுவெதுப்பான காலநிலை வாழைப்பழ அந்துப்பூச்சிக்கு சாதகமாக அமைந்து, ஈரமான பருவத்தில் மோசமான சேதத்தை ஏற்படுத்துகிறது. குளிர்காலம் மற்றும் உலர் குளிர்கால மாதங்களில் பொதுவாக இந்த பூச்சிகள் இருக்காது, இந்த காலப்பகுதியில் பருவகாலம் அல்லாத மழை பெய்யாமல் இருந்தால் ஒழிய. குறைவான ஈரப்பதம் மற்றும் உலர் காலநிலைகளில் முதிர்ந்த பூச்சிகள் இனப்பெருக்கம் மற்றும் முட்டைகள் இடாது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது வாழைச் சாகுபடியில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகள் ஆகும். மேலும் இவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றால் 100% குலைகளில் சேதத்தை ஏற்படுத்தும்.