Spodoptera mauritia
பூச்சி
கம்பளிப்புழுக்கள் தாவரங்களை உண்டு மற்றும் இலை பரப்புகளைத் துளையிடுதல், இலைகளை எலும்புக்கூடு போன்றாக்குதல் மற்றும் தண்டுகளைக் கருகச் செய்தல் போன்றவற்றின் மூலம் சேதங்கள் ஏற்படுத்துகிறது. கடுமையான நோய்த்தொற்றுகளில், நடவு செய்யப்பட்ட வயல்களில் பெருமளவில் மொத்தமாகப் படையெடுத்து, கால்நடைகள் செய்வது போன்று, ஒரே இரவில் பயிர்களை அழித்து விடும். படைப்புழுக்கள் இலை நுனிகள், இலை ஓரங்கள் மற்றும் தாவரங்களின் அடிப்பகுதியை வெட்டுவதன் மூலம் நெல் பயிர்களுக்குச் சேதங்கள் விளைவிக்கிறது. நாற்றங்காலில் இருக்கும் நாற்றுகள், நேரடியாக விதைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பக்கக்கன்று முளைக்கும் ஆரம்ப நிலையில் இருக்கும் அரிசி ஆகியவற்றில் இந்தச் சேதங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். பயிர்களை அழித்த பிறகு, படைப்புழுவின் முட்டைப்புழுக்கள் பக்கத்து வயலுக்கு இடம் பெயரும், இதனைப் பார்ப்பதற்கு இராணுவ படை உருவாக்கம் போன்று காட்சியளிக்கும். கடந்த காலத்தில், 10 முதல் 20 சதவிகிதம் வரை இழப்பை ஏற்படுத்தும் நெல் நாற்றுக்களின் கடுமையான பூச்சியாக இது வெளிப்பட்டுள்ளது.
சிறிய பகுதிகளில், முட்டைப்புழுக்களை உண்ணுவதற்கு வயல்களில் வாத்துகளை விடலாம். போலாஸ் சிலந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதிர்ந்த பூச்சிகளை அழிக்கலாம், இது பெண் அந்துப்பூச்சியை போன்ற பெரோமோன்களை உற்பத்தி செய்கிறது. இது ஆண் அந்துப்பூச்சிகளை ஈர்த்து மற்றும் குறைந்த அளவிலான இன சேர்க்கைக்கு வழிவகுக்கிறது. ஸ்டீனர்னேமா கார்போகாப்சே என்னும் நூற்புழுக்கள் மற்றும் நூக்லியோபாலிஹெட்ரோவைரஸ் ஆகியவற்றைக் கொண்ட தெளிப்பான் கரைசல்களின் பயன்பாடும் நெல் படைப்புழுக்களுக்கு எதிராக நன்றாகச் செயல்படுகிறது.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்த்தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில், கம்பளிப்புழுக்கள் இடம்பெயர்வதைத் தவிர்க்க பூச்சிக்கொல்லிகளை வயல்களின் ஓரங்களில் தூவவும். குளோபிரைரிபொஸை அடிப்படையாகக் கொண்ட தொடர்பு பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் கம்பளிப்பூச்சிகளைத் திறம்பட கட்டுப்படுத்துகிறது.
இந்த நோய்க்கான சேதங்கள் ஸ்போடொப்டெரா மாரிசியா என்னும் நெல் படைப்புழுக்களால் ஏற்படுகிறது. இந்த பலதீனிகளை உண்ணும் இனங்கள் எப்போதாவது நெல் பயிர்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தும். அந்துப்பூச்சிகள் சாம்பல் நிறத்தில், சுமார் 40 மி.மீ. இறக்கைப் பரப்புகளைக் கொண்டிருக்கும். பெண் பூச்சிகள் இரவில் செயல்படக்கூடியவை மற்றும் அவை வெளியான 24 மணி நேரத்தில் இனச்சேர்க்கை செய்யும். இனச்சேர்க்கை செய்த ஒரு நாளைக்குப்பிறகு, இவை சுமார் 200-300 முட்டைகளைக் கொத்துக்களாக பல்வேறு வகையான புல், களைகள் மற்றும் அரிசி இலைகளில் இடத்தொடங்கும். முட்டைப்புழுக்கள் இலைத் திசுக்களை உண்டு, ஆறு முட்டைப்புழு நிலைகளை அடைந்து, இறுதியாக 3.8 செ.மீ நீளத்தினைக் கொண்டிருக்கும். முழு வளர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் மென்மையாகவும், உருளை வடிவத்தையும், மற்றும் அடிப்புறக் கோடுகளுடன் வெளிர் நிறமுடைய உடலையும் கொண்டுள்ளன. இவற்றின் அடிப்புறத்தில் சி-வடிவத்தினைக் கொண்ட இரண்டு வரிசை கருப்பு புள்ளிகளும் காணப்படும். இவை இரவு நேரத்தில் உண்டு, பகல் நேரத்தில் மண்ணில் ஒழிந்து கொள்ளும். மண்ணில் தோண்டப்பட்ட கூட்டில் கூட்டுப்புழுக்களாகும் வளர்ச்சி நிலை நடைபெறும்.