Mythimna separata
பூச்சி
அறிகுறிகளானது இலை நுனிகள் அல்லது இலை ஓரங்கள் நெடுகிலும் காணப்படும் உண்ணும் சேதங்களாகும், இவை சில நேரங்களில் மைய நரம்புகளை மட்டுமே விட்டுவைக்கும் (இலை எலும்புக்கூடு போன்று ஆகுதல்). கடுமையான தொற்றுநோய்களின் போது, முதிர்ந்த முட்டைப்புழுக்கள் முழு இலைகளையும் உண்ணக்கூடும் மற்றும் அடியிலிருந்து சில நேரங்களில் முழு நாற்றுகளையும் உண்ணக்கூடும். கதிர்களின் அடிப்பகுதியை வெட்டுதல், மேலும் எஞ்சியிருப்பவை வளைந்து அல்லது கீழே விழுந்து விடுதல் எம்.செப்பரேட்டாவின் சிறப்பியல்புகளாகும். தாவரங்களில் அடிப்புறத்தில் கோடுகளைக் கொண்ட புல்-பச்சை நிற முட்டைப்புழுக்கள் காணப்படும். சேதங்கள் பெரும்பாலும் வயலின் ஒரு பகுதியில் மட்டுமே ஏற்படும். பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, முட்டைப்புழுக்கள் குழுக்களாக பல்வேறு வயல்களுக்கு இடம் பெயர்வதால், ஒரே நேரத்தில் பல வயல்கள் பாதிக்கப்படலாம்.
கோடீசியா ரூபிக்ரஸ் மற்றும் இயூப்டெரோமாலஸ் பார்னரே போன்ற குளவிகளின் சில வலுவான விகாரங்கள் வயலில் வெற்றிகரமாக செலுத்தப்படுகிறது. அவை எம்.செப்பரேட்டா கம்பளிப்புழுக்களின் முட்டைகளுள் முட்டையிட்டு, அதன்மூலம் அவற்றை மெதுவாகக் கொல்லும். கூட்டுப்புழுக்களாக இருக்கும் நிலையில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையை மூழ்கடிக்க நீரின் அளவை அதிகரிப்பது முக்கியமான கலாச்சார முறைகளுள் ஒன்றாகும். வெள்ள நீர் பாய்ச்சுவதும் எம்.செப்பரேட்டாவின் முட்டைப்புழுக்கள் தாவரங்களுக்கு இடையே பரவுவதைத் தடுக்கிறது. நெல் வயல்களில் உள்ள வாத்துகளும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். கம்பளிப்புழுக்கள் பிற வயல்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, சைபர்மெத்ரின் என்பவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட வயல்களைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும், இது முட்டைப்புழுக்கள் இடம்பெயர்தலைத் தவிர்க்கும். படைப்புழுவின் அதிகப்படியான நோய்த்தொற்று இருந்தால், இரசாயன தெளிப்பு அவசியம். சைபர்மெத்ரின் 1 மி.லி. / 1 லி தண்ணீர் என்ற அளவில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தெளிப்பதற்கான சிறந்த நேரம் நாளின் பிற்பகுதியாகும்.
இந்த நோயின் அறிகுறிகளானது, மிதிம்னா செபரேட்டா என்னும் அரிசிக்காது வெட்டுக் கம்பளிப்புழுக்களால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் சாம்பல் மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும் மற்றும் இவற்றுடன் கரும்-சாம்பல் அல்லது சிவந்த-மஞ்சள் இளஞ்சாயம் மற்றும் பல கரு மிளகு நிறப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். பெண் பூச்சிகள் வட்ட வடிவ, பச்சை வெள்ளை முதல் வெள்ளை நிறத்தில் இலைகளில், மூடப்படாமலோ அல்லது கரு நிறத்தில் மெல்லிய அடுக்குகளால் மூடப்பட்டோ முட்டைகளை இடும். கீழ்ப்புறத்தில் கோடுகளைக் கொண்ட புல்பச்சை நிற முட்டைப்புழுக்கள் சீக்கிரம் தாவரங்களில் தோன்ற ஆரம்பித்து மற்றும் சேதங்களை ஏற்படுத்தும். கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்த வறட்சியானது முதிர்ந்த பூச்சிகளின் நீண்ட ஆயுட்காலம், முட்டையிடும் காலத்தின் நீளம் மற்றும் முட்டையிலிருந்து குஞ்சு வெளியாகும் காலங்கள் போன்றவற்றுக்கு ஆதரவாக இருக்கும். நைட்ரஜன் நிறைந்த உரங்கள் தாவர வளர்ச்சியை அதிகரிக்கின்றன மேலும் முட்டைப்புழுக்கள் உண்ணுவதை அதிகரித்து, அவற்றின் நீண்ட உயிர்வாழ்விற்கு காரணமாகின்றன. பார்லி, கோதுமை, மக்காச்சோளம், ஓட்ஸ், சோளம், கரும்பு, மூங்கில், பருத்தி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, புகையிலை மற்றும் பிராசிகாவின் இனங்கள் ஆகியவை மாற்றுப் புரவலன்களுள் அடங்கும்.