குடைமிளகாய் & மிளகாய்

மிளகாய் இலைப்பேன்

Scirtothrips dorsalis

பூச்சி

சுருக்கமாக

  • இலைகள் மேல்நோக்கி சுருண்டுக்கொள்ளும்.
  • தாவரங்களில் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இலை உதிர்வு காணப்படும்.
  • பூக்களும் பழங்களும் பாதிக்கப்படும்.
  • கருப்பு கலந்த பழுப்பு நிற உடல் மற்றும் மஞ்சள் நிற இறக்கைகளுடன் சிறிய, மெல்லிய பூச்சிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இரண்டும் இளம் இலைகளின் அடிப்புறத்தை உண்ணும். இவை திசுக்களை உரசி, துளைத்து, அவற்றிலிருந்து வடியும் திரவங்களை உறிஞ்சும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர் பழுப்பு முதல் வெள்ளி நிறப் புள்ளிகள் உருவாகும், மேலும் உருக்குலைவுக்கான (சுருண்டுகொள்ளுதல்) அறிகுறிகளும் தென்படக்கூடும். தீவிரமான நோய்த்தொற்றின்போது, இலைகளில் மொத்த சீர்குலைவும், பின்னர் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே தாவரங்களில் இலையுதிர்வும் காணப்படும். மலர்களை உண்ணுதலானது இதழ்களில் கோடுகளாக காணப்படும், இவை உலர்தல் மற்றும் உதிர்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். பழங்களின் மீது காணப்படும் தேமல்கள், புள்ளிகள் மற்றும் உருக்குலைவு போன்றவை அவற்றின் சந்தை மதிப்பைக் குறைத்துவிடும். ஆண்டு முழுவதும் நோய்த்தொற்று ஏற்பட்டாலும், உலர்வான மாதங்களிலும், தழைச்சத்துக்கள் கொண்ட உரங்களை அதிகமாக பயன்படுத்தப்படும் மணலிலும் இந்த நோய்ப்பூச்சி உச்சகட்டத்தில் இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிறிய கொள்ளை வண்டுகளான ஓரியஸ் இனம் மற்றும் பைட்டோஷீட் இலைப்பேன்கள் நியோசியூலஸ் குக்குமெரிஸ் மற்றும் அம்பிளிசியஸ் ஸ்விர்ஸ்கி போன்ற பல்வேறு உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் மாதுளையில் இலைப்பேன்களுக்கு எதிராக திறன்மிக்க வகையில் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. இயூசியஸ் சோஜயென்ஸிஸ், ஈ. ஹைபிஸ்கி மற்றும் ஈ.டுலாரென்சிஸ் போன்ற இரைப்பிடித்துண்ணி சிலந்திப்பேன்களும் மிளகு மற்றும் திராட்சை போன்ற மாற்றுப் புரவலன்களில் இந்த நோய்ப்பூச்சியின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திறன்மிக்க வகையில் பயன்படுத்தப்படுகிறது. டையட்டோமேசியஸ் எர்த்தை தாவர அடிப்பாகத்தைச் சுற்றித் தூவி, தாவரங்களில் உள்ள இலைகள்; இலைப்பேன்களையும் மற்றும் அவற்றின் முட்டைப்புழுக்களையும் உதிரச் செய்யும் (மாலையில்). வேப்ப எண்ணெய், ஸ்பினேடோரம் அல்லது ஸ்பினோசாட் ஆகியவற்றை இலைகளின் இரண்டு பக்கத்திலும், தாவரங்களின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இலைப்பேன் கட்டுப்பாட்டுக்கு மாலத்தியான் கொண்ட இலைத்திரள் தெளிப்பான்கள் பரிந்துரைக்கப்படுகிறது. எஸ்.டார்சலிஸ் எண்ணிக்கையைக் குறைப்பதில் பிற பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, அபாமெக்டின் மற்றும் டைமெத்தோயேட் பயன்பாடும் பொதுவாக வெள்ளரி இலைப்பேன்களுக்கு எதிராக திறன்மிக்க வகையில் செயல்படும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது ஸ்கிர்டோத்ரிப்ஸ் டார்சலிஸ் மற்றும் ரிபிபோரோத்ரிப்ஸ் க்ரூயென்டேட்டஸ் என்னும் இரு வகை இலைப்பேன்களால் ஏற்படுகிறது. ஸ்கிர்டோத்ரிப்ஸ் டார்சலிஸ் முதிர்ந்த பூச்சிகள் வைக்கோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் பூச்சிகள் 50 சாம்பல் கலந்த வெள்ளை நிற அவரை வடிவ முட்டைகளை, பொதுவாக இளம் இலைகள் மற்றும் மொட்டுகளுக்குள் இடும். இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கையில், இவை முதிர்ந்த இலைப் பரப்புகளின் மேல்புறத்தைத் தேர்வு செய்யும். இவற்றின் அடைகாக்கும் காலம் 3-8 நாட்கள் ஆகும். புதிதாக வெளிவந்த இளம் பூச்சிகள் சிறியதாக, செந்நிற உடலுடன் காணப்படும், பின்னர் இவை மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகும். உருமாற்ற செயல்முறையை அடையும் இளம் பூச்சிகள் தாவரத்திலிருந்து கீழே விழுந்து, தளர்வான மண் அல்லது அதன் புரவலனின் அடிப்பாகத்தில் உள்ள இலைக் குப்பையில் தனது வளர்ச்சியை நிறைவு செய்யும். கூட்டுப்புழுக்களின் காலம் 2 - 5 நாட்கள் வரை நீடிக்கும். முதிர்ந்த ஆர்.க்ரூயென்டேட்டஸ் சிறிய, மெல்லிய, அதிகளவில் ஒளி வரி இறக்கைகளை உடைய மென்மையான உடலை உடைய பூச்சியாகும், இது மஞ்சள் நிற இறக்கைகளுடன் கரும்பழுப்பு நிறத்தில், 1.4 மிமீ நீளத்தைக் கொண்டிருக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைத் தேர்வு செய்யவும்.
  • இலைப்பேன்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க, ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • மாற்றாக, பாதிக்கப்பட்டத் தாவரங்களில் இருந்து இலைகளை நீக்கி, அவற்றை வெள்ளை நிறக் காகிதத் துண்டின் மீது மெதுவாக தட்டவும்.
  • வயலில் இருந்து பெரிதும் பாதிக்கப்பட்டத் தாவரங்களை நீக்கவும்.
  • மண்ணுக்கு நல்ல முறையில் நீர்ப்பாசனம் அளித்து, அதிகப்படியான தழைச்சத்து உரப்பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க, பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
  • சுற்றுப்புறத்தில் மாற்றுப் புரவலன்களை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • வயலிலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள களைகளை அகற்றவும்.
  • காற்று இடர்த்தடுப்புகளானது நீண்ட தூர நோய்த்தொற்றிலிருந்து வயல்களைப் பாதுகாக்கும்.
  • இலைப்பேன்களின் கூட்டுப்புழுவை மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டுவர, மண்ணை உழுது அவற்றைச் சூரிய வெளிச்சத்தில் வெளிப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க