வாழைப் பழம்

ஆமணக்கு முடியால் மூடிய அந்துப்பூச்சி

Pericallia ricini

பூச்சி

சுருக்கமாக

  • சுரண்டும் சேதங்களானது இலைத் திசுக்களில் பச்சையம் இல்லாத வெளிர் பழுப்பு நிறமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.
  • உண்ணும் சேதங்களானது விரியாத இலைகளில் ஜன்னல் போன்ற அமைப்புகளாகக் காட்சியளிக்கும்.
  • கடுமையான நோய்த் தொற்றுகளில், உண்ணும் சேதங்களானது இலை உதிர்வுக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

சேதங்கள் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. முட்டைப்புழுக்கள் இலைத்திசுக்களில் உள்ள பச்சையங்களை உண்ணுவதால் ஆரம்ப அறிகுறிகளானது இலைகளில் சுரண்டும் சேதங்களாக தோன்றுகிறது. காலப்போக்கில், இலைகள் பெரிய வெளிர்-பழுப்பு, கசியும் பகுதிகளுடன், ஜன்னல் போன்ற உண்ணும் அமைப்புகளுடன் காணப்படும். கடுமையான நோய்த் தொற்றுகளில், உண்ணும் சேதங்களானது இலை உதிர்வுக்கு வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வேப்ப விதைகளின் உட்கருச் சாறு முட்டைப்புழு வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த உதவும். எனவே, உட்கருச் சாறின் 5% கரைசலை 1 லி தண்ணீரில் கலக்கப்பட வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், குளோர்பைரிபொஸ் கொண்ட தயாரிப்புகளை இலைத்தொகுதி தெளிப்பானாகப் பயன்படுத்தலாம். பட்டியலிடப்பட்ட இரசாயனங்கள் மனித உடல்நலத்திற்கும் அதே போல் பிற பாலூட்டிகள், தேனீக்கள், மீன் மற்றும் பறவைகள் ஆகியவற்றில் நச்சு பாதிப்பைக் கொண்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

ஆமணக்கு முடியால் மூடிய அந்துப்பூச்சி இரவில் செயல்படும் அந்துப்பூச்சி இனங்களைச் சார்ந்தது. எனவே, முதிர்ந்த பூச்சிகள் மாலை நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே காணப்படும். தடிமனான முதிர்ந்த பூச்சிகளின் முன் இறக்கைகள் கரும்புள்ளிகளுடன் சாம்பல் நிறத்திலும் மற்றும் பின் இறக்கைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். முட்டைப்புழுக்கள் கருப்பு நிறத்தில் பழுப்பு நிறத் தலை மற்றும் உடல் முழுவதும் நீண்ட பழுப்பு நிற முடிகள் கொண்டு இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களைக் கண்காணிக்கவும்.
  • தொற்றுநோய்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வயலில் உள்ள முட்டைக் கொத்துக்கள், முட்டைப்புழுக்கள், பாதிக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களைக் கையால் பிடித்து மற்றும் அழித்து விட வேண்டும்.
  • கண்காணிப்பு நோக்கங்களுக்காக அல்லது கூட்டமாக அவற்றைப் பிடித்துக் கொல்வதற்காக முதிர்ந்த பூச்சிகளை ஒளிப் பொறிகளைக் கொண்டு ஈர்க்கவும்.
  • கூட்டமாகப் பிடிப்பதற்காக, இளம் பூச்சிகளை எரியும் தீப்பந்தங்களைப் பயன்படுத்தி ஈர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி மற்றும் அவற்றை எரித்து அழித்து விட வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க