Chaetanaphothrips signipennis
பூச்சி
நோய்த்தொற்று அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் ஏற்படும் மற்றும் அவை இலைகள், போலித்தண்டுகள் மற்றும் பழங்களில் காணப்படும். இலை உறைகளின் அடித்தளத்திற்கு பின்னால் முதிர்ந்த பூச்சிகள் மற்றும் முட்டைப்புழுக்கள் பொதுவாக தங்கியிருக்கும். இளம் பூச்சிகள் கூடிவாழும் மற்றும் உண்ணும் ஆர்வத்துடன், தனது வாய்ப்பகுதியினால் தாவரச் சாறுகளை உறிஞ்சி உண்ணும். ஆரம்ப அறிகுறிகளானது பழங்களின் மீது நீர் தோய்த்த பகுதிகளாக தோன்றும். காலப்போக்கில், இந்த பகுதிகள் பழங்களில் துரு போன்ற வகையான தோற்றத்தை ஏற்படுத்தும், இவை அடர்ந்த சிவப்பு முதல் கரும் பழுப்பு நிறத் தோலைக் கொண்டிருக்கும். பொதுவாக, தோல்களில் மட்டுமே சேதங்கள் காணப்படும், ஆனால் நோய்த்தொற்று அதிகமாக இருக்கும் போது, முழு பழங்களிலும் நோயின் அறிகுறிகள் காணப்படும். நன்கு முதிர்ச்சியடைந்த பழங்களில், விரிசல் காணப்படலாம். சில நேரங்களில் பழங்கள் பிளந்து திறக்கும். ஆரம்பகால வளர்ச்சி நிலைகளில் நோய்த்தொற்று ஏற்பட்டால், பழங்களின் குலைகளில் இந்த நோய் தொற்று மிகவும் கடுமையானதாக இருக்கும்.
க்ரிஸோபிடே இனத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணி பூச்சிகள் மற்றும் பெண் வண்டு இனங்கள் போன்றவற்றை பூச்சியைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். சில எறும்பு இனங்களும் பயனுள்ளவையாக இருக்கக்கூடும். இவை மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை தாக்கும். தாவரப் பொருட்கள் ஆரோக்கியமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியாவிட்டால், வெப்ப நீர் சிகிச்சை நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், கூட்டுப்புழுக்களைக் கொல்லும் பொருட்டு மண்ணிலும், அதேபோல் முதிர்ந்த பூச்சிகளைக் கொல்லும் பொருட்டு தாவரங்கள் மற்றும் பழங்களிலும் அவற்றைப் பயன்படுத்தவும். இந்த அணுகுமுறையே மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளும் சாத்தியமான வழியாகும்.
நோய் அறிகுறிகள் முக்கியமாக சேடனாபோத்ரைப்ஸ் சிக்னிபென்னிஸ் என்ற வாழைப்பழ இலைப்பேன் காரணமாக ஏற்படுகிறது, ஆனால் பிற உயிரினங்களும் (ஹெலியோனோத்ரைப்ஸ் கடலிபிலஸ்) இதில் பங்களிப்பு அளிக்க வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக இந்த பூச்சி பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களின் மூலம் பரவுகிறது அல்லது குறைந்த அளவு மரங்களுக்கு இடையே பூச்சிகள் பறப்பதன் மூலம் நேரடியாகப் பரவுகிறது. முதிர்ந்த பூச்சிகள் ஒல்லியாக, மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில், 1.3 மிமீ அளவினைக் கொண்டிருக்கும் மற்றும் அதன் முன் இறக்கைகள் இரு கரும் பகுதிகளுடன் குறுகிய வரிகளைக் கொண்டிருக்கும். பெண் பூச்சிகள் இலை உறைகளுக்கு அடியில் மற்றும் பழங்கள் மரத்தை தொடும் இடத்தில் சிறிய முட்டைகளை(சாதாரண கண்களால் காண இயலாது) இடும். சுமார் 7 நாட்களுக்குப் பிறகு, இறக்கை இல்லா வெள்ளை முதல் பாலாடை நிற முட்டைப்புழுக்கள் முட்டையிலிருந்து வெளியே வரும். இவை 7 நாட்களில், முதிர்ந்த பூச்சிகளின் அளவிற்கு வளரும். பின்னர் இவை நிலத்தை நோக்கி நகர்ந்து, தாவர அடிப்பாகத்தின் மணலை அடைந்து, கூட்டுப்புழுக்களாக மாறும். கூடுதல் 7-10 நாட்களுக்குப் பிறகு, புதிய தலைமுறை முதிர்ந்த இலைப்பேன்கள் வெளியே வரும். ஒரு ஆண்டுக்கு பல தலைமுறைகள் இருக்கலாம். சூடான மற்றும் ஈரப்பதமான சூழலில் பூச்சிகளின் எண்ணிக்கை உச்ச கட்டத்தில் இருக்கக்கூடும்.