Deanolis albizonalis
பூச்சி
பட்டாணி-அல்லது எலுமிச்சை அளவிலான பழங்கள் கருநிற நுழைவுத் துளைகளைக் கொண்டு காணப்படும், அவை பெரும்பாலும் தொங்கும் பழத்தின் நுனியில் வட்ட, நிறமாறிய திட்டுக்களைக் கொண்டு சூழப்பட்டிருக்கும். பழங்கள் எலுமிச்சையை விட பெரிதாக இருக்கும் போது, கூழ் மற்றும் மரச்சாறு வெளியேறும் துளைகளிலுருந்து கசிந்து வெளியேறுகிறது. துளைப்பான் பூச்சியின் செயல்பாடு காரணமாக பழங்கள் பிளவுபடலாம். அந்த முட்டைப்புழுக்கள் பிற பழங்களுக்கு குடியேறலாம். முட்டைப்புழுக்கள் சிவப்பு மற்றும் வெள்ளை வரி தொடர்களால் மூடப்பட்டு, கருப்பு கழுத்துப்பட்டை மற்றும் தலையை கொண்டிருக்கும். அவை முதிர்ச்சியடையும் போது, பச்சை-நீல நிறமாக மாறுகின்றன. முதலில், அவை கூழாக இருப்பதை உண்கின்றன, பிறகு விதைகளையும் உண்கின்றன. அவை முன்கூட்டியே பழம் கீழே விழுவதை ஏற்படுத்துகின்றன, பெரும்பாலும் இளம் பழங்களில் ஏற்படுத்தும். கடுமையாக பாதிக்கப்பட்ட மரங்களுக்கு அடியிலிருக்கும் நிலத்தில் நூற்றுக்கணக்கான இளம் பழங்கள் காணப்படும்.
டி.ஆல்பிஜோனலிஸ்க்கு எதிராக வேப்பஞ்சாறு (அஜாடிராச்டின்) கலவையை பயன்படுத்தலாம். இவற்றை வாராந்திர இடைவெளியில், மாம்பழம் பூக்கும் நிலையிலிருந்து, 2 மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மாம்பழ விதை துளைப்பானின் இயற்கையான எதிரிகளை பராமரிக்க முயற்சி செய்யுங்கள், எ.கா. ரிச்சியம் அட்டிரிசிமம் குளவிகள் (முட்டைப்புழுவை உண்ணக்கூடியவை) மற்றும் டிரைகோகிராமா சிலோனிஸ் மற்றும் டிரைகோகிராமா சிலோட்ரீ போன்றவை மாம்பழ விதை துளைப்பான் மீது ஒட்டுண்ணி போல் பற்றி படரும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாம்பழ விதை துளைப்பான்களை திறம்பட கையாள தியாக்ளோபிரிட் கொண்ட தெளிப்பான்களை பயன்படுத்தவும். ஃபென்ப்ராபத்ரின் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகள் சிறப்பாக செயல்படும் திறன்கொண்டவை.
வயதுவந்த அந்துப்பூச்சிகள் வெறும் சாம்பல் நிறத்தையும், மற்றும் அதன் இறக்கை 13 மிமீ. அளவில் இருக்கும். அவை ஒரு வாரம் வாழும் மற்றும் பழ மஞ்சரிகாம்பின் அடிப்பகுதியில் ஜோடிகளாக முட்டையிடுகின்றன. முட்டைப்புழு பழங்களில் நுழைந்து, கூழ் மற்றும் விதைகளை உண்கின்றன. கூட்டுப்புழு வெளியேறும் நிலை மரப்பட்டைகளில் 1-2 செ.மீ ஆழ துளைகளில் நடைபெறும், இது மெல்லும் பட்டை துகள்கள் மூலம் கூட்டுப்புழுக்கள் மூடப்பட்டு, கண்ணுக்கு தெரியாதது போல் ஆகிவிடும். 10-14 நாட்களுக்குப் பிறகு வயது முதிர்ந்த பூச்சிகள் வெளியாகும் மற்றும் அவை இரவில் இயங்கும். பூச்சி பாதிக்கப்பட்ட பழங்களின் போக்குவரத்து மூலம் நோய் தொற்றுகள் பரவுகிறது மற்றும் வயதுவந்த அந்துப்பூச்சிகளும் வெவ்வேறு பழத்தோட்டங்களுக்கு பறக்கும் திறன் கொண்டவை.