பப்பாளி

பப்பாளி பழ ஈ

Toxotrypana curvicauda

பூச்சி

சுருக்கமாக

  • துளையிட்ட பழ தோலில் இருந்து வடியும் மரப்பால் கரும் பச்சை நிறத்தை தெளிவாக வேறுபடுத்திக் காட்டும்.
  • முட்டைப்புழு விதைக் குழியை அடைந்து, வளரும் விதைகளை உண்பதற்கு கூழ்களை சுரங்கம் போல் தோண்டுகிறது.
  • அதிகமான சேதம் பழ சதைகளை அழுகச்செய்து, மேலும் சிதைவடையச்செய்கிறது.
  • பழத்தின் மேற்பரப்பு மஞ்சள் நிறமாற்றத்தை ஏற்படுத்தி , குழிகளோடு காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பப்பாளி

அறிகுறிகள்

மிகவும் இளமையான பழங்களில் பெண் ஈக்கள் பல முட்டைகளை இடுகின்றன. துளையிட்ட பழ தோலில் இருந்து வடியும் மரப்பால் கரும் பச்சை நிறத்தை தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது. முட்டைப்புழு விதை குழியை அடைந்து, வளரும் விதைகளை உண்பதற்கு கூழ்களை சுரங்கம் போல் தோண்டுகிறது. வெளியேறும் துளைகள் பழங்களின் மேற்பரப்பில் தெளிவாகக் காணப்படும். விரிவான குடைவுகள் பழங்களை அழுகச் செய்து, பழுப்பு நிறமாகவும், மேலும் தொடர்ந்து சிதைவதனால் சில நேரங்களில் கருப்பு சிதைவுகளாகவும் பிரதிபலிக்கின்றன. மேலும் பழங்கள் நாற்ற வாடைகளை ஏற்படுத்தி, அழுகிய சாற்றை வெளிப்படுத்துகின்றன. தோல் மஞ்சள் நிறமாக மாறி, சுருங்கி, குழிகளோடு காணப்படும். பழங்கள் பழுத்து, முதிர்ச்சியடைவதற்கு முன்னரே கீழே விழுந்துவிடுகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி குளவி டாரிக்டோபிராகான் டோக்சோட்ரிபேன் இந்த ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு சாத்தியம் உள்ளது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த ஈக்களுக்கு எதிராக எந்த பூச்சிக்கொல்லிகளும் சக்தி வாய்ந்ததாக இல்லை. பூச்சிக்கொல்லி (எ.கா. மாலத்தியான் அல்லது டெல்டாமெத்ரின்) கொண்டிருக்கும் பொறிகளை குறிப்பிட்ட தூண்டிலுடன் (ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு) இணைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. பப்பாளி பழ ஈக்களை கொள்வதற்கு எத்திலீன் புரோமைடு வெப்ப ஆவியைக் கொண்டு பழங்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த அறிகுறிகள் டோக்ஸோட்ரிபனா கர்விகாடா என்னும் ஈக்களால் ஏற்படுகிறது. இது தன்னுடைய முட்டைகளை இளம் பச்சை பப்பாளி பழங்களில் இடுகிறது. முதிர்ச்சியடைந்த ஈக்கள் அதன் அளவு, நிறம், மற்றும் நடத்தை அடிப்படையில் குளவிகள் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அவை கருப்பு நிற புள்ளிகளை சமச்சீரான முறையில் மார்புப்பகுதியில் கொண்டு மஞ்சள் நிற உடல் பகுதியை கொண்டுள்ளது. பெண் ஈக்கள் நீட்டிக்கப்பட்ட வளைந்த முட்டையிடும் உறுப்புடன், நீளமான குறுகிய வயிற்றுப் பகுதியைக் கொண்டுள்ளது. இது அதன் நீளத்தை அதிகரிக்கிறது. முட்டைப் புழுக்கள் வெள்ளை நிறத்தில் மிகவும் மெல்லிசாக காணப்படுகின்றன, இது சுமார் 13-15 மிமீ நீளத்தினைக் கொண்டுள்ளது. பழங்கள் பல முட்டைப் புழுக்களால் பாதிக்கப்பட செய்யலாம், ஆனால் அவற்றின் அறிகுறிகள் அறுவடைக்குப்பின்னரே தெரியவரும். மழைக்காலம் முடிந்தபின் பழ சேதம் மிக அதிக அளவில் இருக்கும். பப்பாளி பழ ஈ அமெரிக்க கண்டத்தின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் பெரும் நோய் பூச்சியாக திகழ்கிறது .


தடுப்பு முறைகள்

  • பாதிப்புகளை கண்காணிக்கவும் அல்லது இனக்கவர்ச்சியை தூண்டும் இயக்குநீர் பொறிகளை அமைத்து ஈக்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கவும்.
  • பேப்பர் பைகளை கொண்டு பழங்களை மூடி, அவை முட்டைகள் இடுவதைத் தடுக்க வேண்டும்.
  • முன்பே பழுத்து, கீழே விழும் பழத்தை வயல்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட இளம் பழங்களைக் கண்டெடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.
  • ஈக்களை ஈர்க்க பயிர் பொறிகளை வயல்களை சுற்றி பயன்படுத்தவும்.
  • மிக மோசமான சேதங்களைத் தவிர்க்க முன்னதாகவே அறுவடை செய்து விட வேண்டும்.
  • 13 முதல் 16 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் பழங்களை சேமித்து வைக்கவும்.
  • மரங்களை சுற்றி உழுவதினால், நிலத்தில் உருவாகும் ஈக்கள் வெளிவரும் முன்பே கொல்லப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க